Monday, September 21, 2020

வெண்திரை வரிகளில் வாழ்வியல் நெறிகள்.

      திரையிசைப் பாடல்வரிகள் வெறும் காதல் காட்சிகளுக்கும், மேலோட்டமான மனித உணர்வுகளுக்கும்,தீனிபோட்டு நின்றுவிடுவ தில்லை.வாழ்வியல் கோட்பாடுகளையும்,நெறியியல் நடப்புகளையும், வாழ்வின் அடையாளமாகவும்,வாழ்க்கைப் பயணத்தின் உந்துதல் சக்தியாகவும்,காலம் காலமாய் கவிஞர்களின் கற்பனையில் கருவாகி, வார்த்தைகளாய் உருவாக்கி,வலுவான வாழ்க்கை வழிகாட்டுதலை, மனித சமூகத்திற்கு வரையறுத்துக் கொடுத்த தமிழ்திரையிசைப் பாடல் வரிகள் இங்கே ஏராளமாய் குவிந்து கிடக்கின்றன.அவற்றில் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம். 
    'நெறியியல்'என்றதும்,தமிழ் திரைப்படங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கென திட்டமிட்டு எழுதப்பட்ட பாடல் வரிகளே,நம் நினைவுக் கதவுகளை முதலில் தட்டும். 'நாடோடிமன்னன்' திரைப்படத்தில் "தூங்காதே தம்பி தூங்காதே"என்று தொடங்கி,'விழித்துக் கொண்டோ ரெல்லாம் பிழைத்துக்கொண்டார்;உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்' என்ற கருத்துக் செறிவான சிந்தனைகளை உள்ளடக் கிய,பட்டுக்கோட்டையார் பாடல்,இவ்வகையில் தனி முத்திரை பெற்ற  தாகும்.
    இதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் 'திருடாதே' திரைப் படத்தில் "திருடாதே பாப்பா திருடாதே"என்று ஆரம்பித்து, 
"திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்,
 திருட்டை ஒழிக்க முடியாது"
என்று திட்ட வட்டமாக எழுதிவைத்தார்.எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டையார் எழுதிய இன்னுமொரு கலங்கரை விளக்கமான பாடலே,'அரசிளங் குமரி' திரைப் படத்தில் கேட்ட,
"சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா" 
என்று ஆரம்பித்து,
"ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி;
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி"
எனும் பொன்னான வார்த்தைகளை உள்ளடக்கிய வரலாற்று வரிகளாகும்.
     எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து நாயகர்,சமூகத்தையும் மனித வாழ்க்கையையும் மேம்படுத்தும் கருத்துக்களை,தீப்பிழம்புகளின் வீரியத்துடன்,தனது திரைப்பட பாடல் வரிகளில் புகுத்துவதில்,கண்ணும் கருத்துமாய் இருந்தார்.அவ்வாறு அவருடைய சமூக அக்கரையில் எழுந்த பாடல் வரிகளே 'நம்நாடு' திரைப் படத்தில்,
"நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே"
என்று தொடங்கி, 
"கிளிபோல பேசு;இளங்குயில்போல பாடு;
மலர்போல சிரித்து நீ குரள்போல வாழு: 
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்: 
மெய்யான அன்பே தெய்வீகமாகும்"
   என்று இணையற்ற சமூக இதிகாசம் படைத்த. இந்த வரிகளை வளமாய் வழங்கிய கவிஞர் வாலி,எம்.ஜி.ஆரின் பல திரைப்படப் பாடல்களுக்கு பலமானார்.இதேபோன்று பின்னர் 'பெற்றால் தான் பிள்ளையா'திரைப்படத்திற்கு எம் ஜி.ரு க்காக வாலி எழுதிய ஒப்பற்ற பாடலே,
"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி"
இந்த நாடே இருக்குது தம்பி "
என்பதாகும். இப்பாடலில் இடையே வரும் கீழ்க்காணும், 
"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
.......................................................................................
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்"
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்" 
எனும் வரிகள் அமரத்துவம் பெற்றவையாகும். 
    எம்  ஜி ரைப்போல்  திரைப்படப்பாடல்கள்மூலம் தன்னம்பிக்கையை விதைத்த கதாநாயகர்கள் மிகக்குறைவே.
"உன்னை அறிந்தால் 
நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம் 
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 
தலை வணங்காமல் நீ வாழலாம் "[வேட்டைக்காரன் ]என்றும்,
"மனதுக்கும் மட்டும் பயந்துவிடு 
தன் மானத்தை உடலில் கலந்துவிடு 
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு 
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" {பணத்தோட்டம் }
   என்றும்,எண்ணற்ற பாடல்கள் மூலம் அறநெறி போற்றி, மனதின் பலமே வாழ்வின் வெற்றிக்கு வழியாகும்,என்று உரக்க வலியுறுத்திக் கூறிய எம் ஜி ஆர் திரைப்படப் பாடல்கள் அனைத்துமே,காலம் வென்று சரித்திரம் படைத்த பாடல்களாகும். மேற்காணும் இருபாடல்களுக்குமே கண்ணதாசன் வரிவடிக்க 'வேட்டைக்காரன்'திரைப் படத்திற்கு திரையிசைத்திலகமும் 'பணத்தோட்டம்'திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர்களும் இசையமைத்தனர்.
    எம்.ஜி.ஆரைப்போலல்லாது,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங் களில் நெறியியலைக்காட்டிலும் தத்துவப்பாடல்கள் நிரம்பி வழிந்தன.இருப்பினும், சிவாஜி கணேசனின் ஒரு சில படங்களிலும்,ஒற்றுமை,வாய்மை, தன்னம்பிக்கை, ஆகியவற்றை வலியுறுத்தும் பாடல்கள்,கணிசமாக இடம் பெற்றிருந்தன.அப்படி நாம் கேட்ட சில பாடல்கள்தான்,'பாகப்பிரிவினை' திரைப்படத்தில் இடம் பெற்ற, 
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே;
 வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே.
ன்பதும்,'அன்புக்கரங்கள்' திரைப்படத்தில் பேச்சு மொழி வரிகளாக இடம்பெற்ற,
"ஒண்ணா இருக்க கத்துக்கனும்
 இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்"ன்பதுமாகும்.
இதே ஒற்றுமையை முன்னிறுத்தி எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இடம்பெற்ற, 
"ஒருதாய் மக்கள் நாமென்போம்; 
ஒன்றே எங்கள் குமென்போம்"{'ஆனந்த ஜோதி' }மற்றும் 'பணக்கார குடும்பம்' திரைப்படத்தில் ஒலித்த, 
"ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே 
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே"போன்றவையாகும்.
வாழ்க்கையில் நம்பிக்கையின் அவசியத்தை 'பலே பாண்டியா' திரைப்படத்தில்  பரவசமூட்டிய 
"வாழ நினைத்தால் வாழலாம்; 
வழியா இல்லை பூமியில்", ன்ற அறிவுபுகட்டும் பாடல் வரிகளும்,பின்னர்'சாந்தி' திரைப்படத்தில் சந்தோஷ கனவுகள் படைத்த, 
"வாழ்ந்து பார்க்கவேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் 
வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்து பாட வேண்டும்" 
னும்  சபையேறும் வரிகளுமாகும். 
   மேற்காணும் பாடல்களில், "ஒற்றுமையாய் வாழ்வதாலே"வரிகளை ஏ.மருதகாசி எழுத,மற்ற அனைத்து பாடல்களும்,கவியரசு கண்ணதாச னின் கற்பனையில் உதித்தவை என்பது அப்பாடல்களின் தனிச் சிறப்பாகும்.  
    வாய்மையின் வழித்தோன்றலை,சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில் வெளியான 'ஆண்டவன் கட்டளை'திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன்"ஆறு மனமே ஆறு"எனும் பாடலில் ஆழ்ந்து அடர்ந்து, பின்வரும் வரிகளில் சத்திய சங்கமத்தின் புரிதலோடு, 
"உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்; 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்; 
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்;
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்."
   என்று ஒப்பற்ற சொற்கோவையினால் வெளிப்படுத்தினார். 
  இதே சிந்தனையின் மற்றொரு வேடிக்கையான வெளிப்பாடே சிவாஜி கணேசனின்'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில் முதல் காட்சியாக இடம்பெற்ற,
"ஓஹோஹோ மனிதர்களே 
ஓடுவதெங்கே சொல்லுங்கள் 
உண்மையை வாங்கி பொய்களை விற்று 
ருப்படவாருங்கள்"
என்று கேலிக்குரலுடன் தொடங்கி,தனது கற்பனைக் களஞ்சியத்தின் கவின்மிகுச் சொற்களால்,தொடர்ந்து பின்னி பெடலெடுத்த,
"அழுகிப்போனால் காய்கறிகூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
ரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரை காப்பதும் இல்லை
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்த்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
திய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
பழிப்பாதனாலே தெளிவுள்ள மனசு பாழ்பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது"
எனும்  வரிகளாகும்.  
   கவியரசின் கவிதைக் களப்பணி,தமிழ்திரையுலகம் காலமெல்லாம் கொண்டாடக் கூடிய திருவிழாக் கோலமே! 
   இதே கண்ணதாசன்தான் எம்.ஜி.ஆரின்'என் அண்ணன்' திரைப் படத்திற்கு நேர்மையையும்,நம்பிக்கையும்,பறைசாற்றும்வண்ணம்,
"நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு,ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா"
என்று பாட்டெழுதி,அதில், 
"உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து".
    என்ற நம்பிக்கை ஊற்றையும் நிறையச் செய்தார். 'என் அண்ணன்' திரைப் படத்தில் நெஞ்சைக்கவர்ந்த இன்னுமொரு பாடல்தான்''கடவுள் ஏன் கல்லானார்' என்று மனம் நொந்து, அதிலும் 
"நெஞ்சுக்கு  தேவை  மனசாட்சி  – அது
நீதி  தேவனின்  அரசாட்சி"  
  என்ற  ரமான வரிகளை உட்புகுத்தி வாய்மையை வேரூன்றச் செய்தது.  இக்கருத்தை மையமாக வைத்து சிவாஜி கணேசனின் 'சொர்க்கம்' திரைப் படத்திற்காக கண்ணதாசன் வடிவமைத்த வரிகள்தான்,
"சொல்லாதே யாரும் கேட்டால் 
எல்லோரும் தாங்க மாட்டார்"என்று தொடங்கி, 
"விதியென்று ஏது மில்லை 
வேதங்கள் வாழ்க்கையில்லை 
உடலுண்டு உள்ளம் உண்டு 
முன்னேறு மேலே மேலே"    
இவையனைத்துமே,கண்ணதாசனின் கவித்துவத்தை வெளிப்படுத்தும், காலத்தை வென் வரிகளே!
    அறிவார்ந்த சிந்தனையின் அவசியத்தையும்,ஆணவத்தின் அவலத்தையும் வெளிக்கொணர்ந்த மற்றுமொரு மறக்கமுடியா எம்.ஜி.ஆர்  திரைப்பட பாடல்  வரிகளே'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் வாலி எழுதி டி.எம்.எஸ் பாடிய, 
"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை 
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை"
   எம்.ஜி.ஆரின் பல்வேறு பாடல்கள்,வாழ்க்கைப்பாதையின் வாசமிகு கலாச்சார மலர்களின் அங்கீகாரமாகத் திகழ்ந்தன.அப்படி நாம் உணர்ந்த பாடல்தான்,'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய 
"கண்போன போக்கிலே கால் போகலாமா? 
கால் போன போக்கிலே மனம் போகலாமா?"
    என்பதாகும். வாலி எழுதிய இப்பாடலின் இடையே தோன்றும்,
"பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் 
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம் 
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்" என்றும்,மேலும் 

"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 
வருந்தாத உள்ளங்கள் பிந்தென்ன லாபம் 
இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் 
இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்" 
     போன்ற வரிகளால்,முறையான வாழ்க்கைப் பாதையின் வெள்ளோட் டத்தை, அனைவரும் வியக்கும் வண்ணம்  வாரித்தந்தன. 
    இப்பதிவில் உதாரணமாக குறிப்பிட்டுக் காட்டப்பட்ட பாடல் வரிகள் எல்லாம் தனிமனித,மற்றும் சமூக ஒழுக்கம் சார்ந்து,இப்படித்தான் வாழவேண்டும் என்றோ, அல்லது இப்படி வாழ்வது முறையன்று என்றோ,எடுத்துரைக்கப்பட்ட வாழ்வியல் நெறிகளேயன்றி,தத்துவ கோட்பாடுகள் அன்று.சிந்தனை மேம்பட்டு,செயல்பாடுகள் சிறப்புற்றால் மட்டுமே மனிதம் தழைக்கும் என்பதை,எவ்வளவு உயரிய பாடல்களாக, தமிழ்த்திரை உலகம் நமக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகத் தந்திருக்கிறது.
    இதில் என் நினைவு புறக்கணித்த இன்னும் தரமான நெறியியல் பாடல்கள் இருக்கக்கூடும். "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற அளவிலே எடுத்துக்காட்டுகள்  சுட்டிக் காட்டப்படுவதே பெரும்பாலும் நியதியாகும்.  
    இன்றைய திரைப்பட பாடல்களில்,மனிதனை வழி நடத்தும் பண்புடைப் பாடல்கள் காண்பதுண்டோ?,கேட்பதுண்டோ?தொழில் நுட்ப காட்டாற்றில்,பண்பாடும் கலாச்சாரமும்,போற்றுர்க்குரிய சிந்தனைளும்,அடித்துச்செல்லப்பட்டன  என்பதே தார்த்த நிலையாகும்.
 ப.சந்திரசேகரன் . 
                                      ==================================

No comments:

Post a Comment