Monday, March 17, 2025

வசந்தம் தேடி

"வசந்தமுல்லை போலே  வந்து 

அசைந்து ஆடும் பெண்புறாவே" 

  என்று 'சாரங்கதாரா'திரைப்படத்தில் டி. எம் .சௌந்தராஜன் பாடிய பாடல் பெண்மையை புறவாக்கி,முல்லை மலரால் மாலையிட்டு வசந்தத்தை  வார்த்தெடுத்தது.திலிருந்து பெண்மைக்கும் வசந்ததிற்கும் இயல்பாகவே,ஒரு மனக்கோர்வை பிணைந்திருப்பதாகத் தோன்றுகிறது. 

"வசந்தத்தில் ஓர் நாள் 

மணவறை ஓரம் 

வைதேகி காத்திருந்தாலோ" 

   என்று 'மூன்று தெய்வங்கள்' திரைப் படத்தில் திருமணத்திற்காகக் காத்தி ருக்கும் பெண்மையையை P. சுசீலாவின் பாடல்,படம் பிடித்து காட்டுவதி லாகட்டும், 

"வசந்த காலக்  கோலங்கள் 

வானில் விழுந்த  கோடுகள் 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள்" 

  என்று 'தியாகம்' திரைப்படத்தில் பெண்மையையின் உணர்வுக்கலவரங் களை,எஸ் ஜானகியின் குரலில் வெளிப் படுத்திய பாடலிலாகட்டும், வசந்தத் தையும்  பெண்மையையும் நம்மால் பிரித்துப்பார்க்க இயலாது. ஆனால்,அதே நேரத்தில்,இள நெஞ்சங்கள் காதல் வயப்படுகையில் இருமன இணைவில் வசந்தம் இழையாடுவதை 'மூன்று முடிச்சு' திரைப் படத்தில் ஜெயச்சந்திரன் குரலில் ஒலித்த, 

"வசந்த கால நதிகளிலே 

வைரமணி நீரலைகள் 

வைரமணி நீரலையில் 

நெஞ்சிரண்டின் நினைவலைகள்"

  என்ற வரிகளில்,வசந்த நீரோட்டத்தில் காதலர்தம் நினைவலைகள், எழுச்சி பெற்று இளைப் பாறுவதை நம்மால் உணரமுடிந்தது. 

"வா வா வசந்தமே 

சுகம் தரும் சுகந்தமே" 

என்று 'புதுக்கவிதை'யில் மலேஷியா வாசுதேவன் பாடிய பாடலும், 

"அங்கே வருவது யாரோ 

அது வசந்தத்தின் தேரோ"

 என்று 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் எஸ்.பி.பி பாடிய பாடலும் 

"நீதானே என் பொன்வசந்தம் 

புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்" 

  என்று 'நினைவெல்லாம் நித்தியா' திரைப்படத்தில் எஸ்.பி'பாலசுப்ர மணி யம் பாடலும்  பெண்மையின் வரவை வசந்த விழாவாய்க் கொண்டாடின. ஆனால்,அதே பெண்மையின் வரவு பொய்யாகிப் போய் விடின்,மனம் மறுதலித்து மக்கிப்போகிறது.இந்த வகையில்'ஒருதலை ராகம்' திரைப் படத்தில் எஸ்.பி.பி பாடிய,

"வாசமில்லா மலரிது 

வசந்தத்தைத் தேடுது" 

 என்ற வரிகள் ஏக்கத்தை பிரசவித்து, நிம்மதியற்ற மனம் நதியில்லாத ஓட்டமாய் கரையில் நின்று வாட்டமுறு  வதை,வார்த்தகைளால் படம் பிடித்துக் காட்டியது .

  சிலர் காதலிக்காக தாஜ்மஹால் போன்ற மாளிகையை கட்டிவைத்து, அதில் தன் உயிரோடு கலந்த காதலி,வாழ்க்கைப் படியில் கால்பதிக்க மறுக்கையில்,

"யாருக்காக இது யாருக்காக 

இந்த மாளிகை வசந்த மாளிகை 

காதல் ஓவியம் கலைந்த மாளிகை" 

  என்று 'வசந்த மாளிகை'திரைப்படத்தில்  டி எம் சௌந்தராஜன் பாடியது போல, கலங்கி நிற்ர்.

  இப்பதிவில் குறிப்பிட்ட பாடல்களில் 'சாரங்கதாரா' திரைப்படப்பாடலை           அ.மருதகாசி எழுத, ஜி.ராமநாதன் இசை யின் அப்பாடல்,மனம் நிறைந்து இன்றும் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது.'ஒரு தலை ராகம்' பாடலை டி.ராஜேந்தர் எழுதி அவரே அற்புதமாய் இசையமைத்திருந் தார்.

  'புதுக் கவிதை''நினைவெல்லாம் நித்யா'பாடல்களுக்கு வைரமுத்து வரி யெடுக்க,இதரபாடல்கள் அனைத்துமே கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் ஊறித்திளைத்தன.அவினாசி மணியின் 'நேற்று இன்று நாளை'திரைப்படப்பாடலு க்கு கே.வி.மகாதவேன் இசயைமுதூட்டி னார்.

  'மூன்று தெய்வங்கள்' மற்றும் 'மூன்று முடிச்சு' பாடல் களுக்கு மெல்லிசை மன்னர் இசையமிழ்தம் தெளிக்க,'வசந்த மாளிகை'க்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனும்'நினைவெல்லாம் நித்யா' 'தியாகம்' 'புதுக் கவிதை' ஆகிய திரைப்பட பாடல்களுக்கு இசைஞானியும் இசை யமைத்திருந்தனர்.

  காதலில் கசிந்துருகும் சிலர் கடிதம் மூலம் வசந்தத்தை தூதுவிட தபால் துறையை பயன்படுத்துவர் இப்படித்தான் 'சேரன் பாண்டியன்' திரைப் படத்தில் சௌந்தர்யன் எழுதி இசையமைத்த, 

"காதல் கடிதம் வரைந்தேன் 

வந்ததா உனக்கு 

வசந்தம் வந்ததா" 

   எனும் பாடல் வசந்தமாய் நெஞ்சினை வருடியது.லாப்சன் ராஜ்குமாரும் ஸ்வர்ணலதாவும் பாடிய இந்த மென்மை யான பாடல் செவிகளில் புகுந்து சங்கீதம் பரப்பி யது.  

   வசந்தம் கண்ட திரைப்படத்தலைப்புகள் தமிழ்திரையில் கணிசமாக உண்டு. 'முதல் வசந்தம்''புது வந்தம்''நீதானே என் பொன் வசந்தம்' 'வசந்த காலப் பறவை' வசந்த மாளிகை''வசந்தத்தில் ஓர் நாள்'  போன்ற தலைப்புக்கள் தமிழ்த் திரையை கம்பீரமாக அலங்கரித்து வம் வந்தன. "காலங்களில் அவள் வசந்தம்" என்று 'பாவ மன்னிப்பு'திரைப்படத்தில் காதலி யைப் புகழ்ந்து பரிசுத்தப் பார்வை யுடன் P.B ஸ்ரீனிவாஸ் பாடியது போல, வசந்த அழைப்புகளே வாழ்வின் வரப் பிரசாதம். 

                ============0=============

1 comment:

  1. *இசைந்த மனங்களை இசை பட வாழ்த்தும், வசந்த அழைப்புகள்*

    ReplyDelete