Friday, June 2, 2023

பொன்னியின் செல்வன் பகுதி 2 :-எதில் வெல்கிறார் மணிரத்னம்?

  சிவனை நெஞ்சில் மட்டுமே நிறுத்தி,வீர வசனங்களை கடந்த காலத் தமிழுக்கு விட்டு விட்டு,காதல் காட்சிகள் உட்பட மென்மையான உணர்வுப் பரிமாற்றங் களில்  அமைதியான வசனங்களை நெஞ்சாரத் தழுவுகையில்,மணிரத்னம்  மாறுபட்ட கோணத்தில் வரலாற்றுப் புதினத்தை கையாண்டு வெற்றிபெருகி றார் என்று உறுதியாகக் கூறலாம்.மொழி பேசாமல்,விழிபேசும் உணர்வுகளின் உரையாடலில்,நந்தினியும் குந்தவையும் சிந்தனையை ஆளுகின்றர்.

  'பொன்னியின் செல்வன்'பாகம் ஓன்றைக் காட்டிலும் பாகம் இரண்டில்,காட்சிகளின் பிரம்மாண்டமும் வாள்வீச்சின் கம்பீரமும், வரலாற்றுப் புதினத்தை,திரைக்காட்சி களாய் நினைவில் நிலைக்கச்செய்கின் றன. 

   மதுரை வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற அந்தக்கால திரைப்படங்களில் எம் ஜி ஆரும் சிவாஜி கணேசனும்,உரத்த வசனங்களில் உச்சரிப்புப்பிழையின்றி,கதா பாத்திரங்களை கட்டி ஆண்டனர்.ஆனால் இன்றைய நடிகர்களின் நடிப்பாற்றலும், இயக்குனரின் மேற்பார்வையாற்றலும், நடிகர்களை கதாபாத்திரங்களில் சங்கமிக் கச் செய்து கரைத்துவிடுகின்றன.

  முறையாக வகுக்கப்பட்ட வசனங்களாலும் நடிகர்களின் பொருத்தமான,எழிலான உடல்மொழிகளாலும்,ஒட்டுமொத்த கதைக் கள காட்சிகளே ஒரு கவிதையாகி விடுகி ன்றன.இருப்பினும்,மெய்மறந்து காட்சி களை கண்டு ரசித்து திரைப்படம் முடிந்த வுடன் பின்னோக்கிப் பார்க்கையில்,ஏதோ ஒரு வெறுமைத் தடத்தில் சிக்கி மனம் ஏங்குவதை என்னைப் போன்றோர் உணர முடிகிறது.இயல்பான உனர்வுப்பாலத்தை நிசமாக கட்டமைப்பதில்,பழைய திரையுல கம் தனித்துவம் பெற்றிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

  ஏ.ஆர்ரெஹ்மானின் ஆழமான பின்னனி இசையில் கதைக்கள காட்சிகள் இலகுவாய் மெருகேற்றப்பட்டு கூடுதல கம்பீரம் பெருகின்றன.வீர ஆவேசத்தை வெளிப் படுத்தும் வகையில் தரமான தூய தமிழை உச்சரிப்பதிலும் விக்ரம் தனியிடம் பிடிக்கிறார்.மொத்தத்தில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு,பல கோணங் களில் பொன்னியின் செல்வன் ஒன்றை வேகத்தில் துரத்தினாலும்,பாகம் ஒன்று சற்று கூடுதல் அழகுடன் மனமேடையில் தோகை விரித்தாடுகிறது.

ப்ரைம் வீடியோஸ் திரைத்தடத்திற்கு நன்றி.

                    /=======/========/======/

2 comments:

  1. சிறப்பு சார்..... யாத்திசை என்று ஒரு படம் வந்திருக்கின்றது.... பாண்டியர்கள் மற்றும் சோழர்களிடையே வாழ்ந்த எயினர்கள் பற்றி .. எந்ந பிரம்மாண்டமான காட்சிகள் இன்றி... பெரிய பேனரோ... பொருட்செலவோ இன்றி சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்... பார்த்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்...

    ReplyDelete
  2. பார்க்கிறேன்.பகிர்கிறேன்.

    ReplyDelete