Tuesday, December 22, 2020

தமிழ்திரையிசை வரிகளில் மாய,மயானக் கோலங்கள்

   'வாழ்க்கையும் வைராக்கியமும்'என்ற தலைப்பில் ஒரு உரைநடை புத்தகம் நான் இளங்கலை வகுப்பு  படிக்கையில் கல்லூரி பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டதாக நினைவு. பொதுவாகவே மனித வாழ்வில்,'பிரசவ வைராக்கியம்,'மயான வைராக்கி யம்'எனும் வழக்கு மொழிகள் பிரபலமாக பயன்படுத்தப்படுவதை பார்த்திருக் கிறோம்.

   இந்த வழக்குமொழிகளில்'மயான வைராக்கியம்',மரண நிகழ்வுகளா  மனித உணர்வுகளைத் தாக்கி பின்னர். கார்மேகம் போல் கலைவதுண்டு. மரணம்,மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தி,உறவுகளில் சொத்துத் தகராறு களின் காரணமாக எழும் பகைமை நிலைப் பாடுகளை,சற்று நேரத்திற்கு பின்னுக்குத் தள்ளி,பணத்தைக் காட்டிலும் மனித நேயமே பெரிதென்று நினைக்கச் செய்து, பின்னர் ஈமச் சடங்குகள் முடிந்த வுடன் மனம் ஒரு குரங்காக, பணத்தை நோக்கி பயணிப்பதே,மயான வைராக்கிய மாக கருதப்படுகிறது. 

   துளிர்ப்பதும் உதிர்வதும் இயற்கையின் இயல்பு;துளிர்த்ததும் வளர்ந்ததும் நிலைத்திடும் என்பது,மனிதனின் கனவு.மயானப்பாதை என்றுமே மனிதன் விரும்பி பயணிக்கும் பாதையன்று.ஆனால் தோல்விகளின் தழும்புகள்,மாயையில்  வலுப்பெற்ற சிந்தனைகளாய் வாழ்வினை புரட்டிப்போட்டிட,'தேவதாஸ்'திரைப் படத்தில் C.R. சுப்புராமனின்  இசையில்,கண்டசாலா முழங்கியதுபோல"உலகே மாயம் வாழ்வே மாயம்"என்று வெறுமையின் கம்பீரத்தை வீரியமாக்குகிறது.  இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி *பின்னணி இசை*{Background score } மைத் திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.   

  இதே வெறுமையினை விஸ்வரூபமாக்கி, அழுத்தமாகவும் ஆழமாகவும் கே.ஜே யேசு தாஸின் அதிர்வுக்குரலால் வெளிப்படுத் திய பாடலே, 

"வாழ்வே மாயம்! 

இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், 

தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? 

நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?" 

எனும் கண்ணில் நீர்மல்கச்செய்  காவிய வரிகள் கொண்ட  பாடலாகும்.  

"தாய் கொண்டுவந்ததை, 

தாலாட்டி வைத்ததை, 

நோய் கொண்டும் நேரமம்மா"

   என்ற வரிகள் செவிகளில் விழுகை யில்,நம் இதயம் தவித்துத் துடிப்பதை, கங்கை அமரனின் இசையில்,வாலியின் வேதனை வரிகளால்,சாகா நிகழ்வாக்கிய பாடல் இதுவாகும். 

  இதே கே.ஜே.யேசுதாஸின் ஒப்பற்ற குரலில் வைரமுத்துவின் வரிகளை உருக்க மான இசையில்'நீங்கள் கேட்டவை' திரைப்படத்தில் கேட்டு மெய்மறந்ததே,கீழ்க்  காணும் பாடல்! 

"கனவுகாணும் வாழ்கையாவும் 

கலைந்துபோகும் கோலங்கள்; 

துடுப்புகூட பாரமென்று 

கரையைத் தேடும் ஓடங்கள்" 

என்று தொடங்கி,இடையில்,  

"பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி 

இருக்கின்றதென்பது மெய்தானே!" 

  எனும் உண்மையை உள்ளடக்கிய இப்பாடல்,என்றும் நினைவில் தங்கிடும்,  மேனியெனும் மெய்யாய்!அதன் பொய்யாய்! 

மனித வாழ்வின் மாய நிலையினை உணர்த்திய இன்னுமொரு பாடலே, 

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா;

ஆறடி நிலமே சொந்தமடா.


முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா;

கண் மூடினால் காலில்லா கட்டிலடா.


பிறந்தோம் என்பதே முகவுரையாம்;

பேசினோம் என்பதே தாய்மொழியாம்.

மறந்தோம் என்பதே நித்திரையாம்;

மரணம் என்பதே முடிவுரையாம்."  

  எனும் கவிஞர் சுரதாவின் மகத்தான வரிகளை,சீர்காழியாரின் வெண்கலக் குரலில் வி.குமாரின் மென்மையான இசையோட்டத்தில்,'நீர்க்குமிழி'திரைப்படத்தில் கேட்டு, வெறுமையில் மனம் ஆழ்ந்ததே,அகம் நிறைந்த அனுபவமாகும் .  

   மனித வாழ்வின் மாய நிலைகளையும் வெறுமையையும்,கவியரசு கண்ணதாசன் அரும் புலமையுடன் வெளிப்படுத்திய அழகான திரைப்பாடல்கள் பலவும்,அவரது இமயக் கற்பனையின் விளைவாக உருவெடுத்த,ஞானப் பால்குடிக்கச் செய்யும் அட்சய பாத்திரமாகும்.குறிப்பாக,'பாத காணிக்கை'திரைப்படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் அமைந்த,  

"வீடு வரை உறவு;வீதிவரை மனைவி; 

காடுவரை பிள்ளை ;கடைசிவரை யாரோ" 

 எனும் வரிகளில் தொடங்கி பின்னர், 

"விட்டுவிடும் ஆவி;பட்டுவிடும் மேனி; 

சுட்டுவிடும் நெருப்பு;சூனியத்தின் நிலைப்பு" 

என்றும், 

"சென்றவனை கேட்டால்,வந்துவிடு என்பான்; 

வந்தவனைக் கேட்டால்,சென்றுவிடு என்பான்" 

  என்று,மயானக் காற்றால் மூச்சு முட்டச் செய்யும் டி.எம்.சௌந்தராஜனின் பாடல், என்றைக்கும் இதயம் கனக்கச் செய்வ தாகும்.

 இதேபோன்று 'அவன்தான் மனிதன்' திரைப்படத்தில் எம்.எஸ்.வி இசையில் கவியரசு புனைந்த, 

"மனிதன்  நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று; 

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று."  

எனும் பாடல் டி.எம்.எஸ் ஸின் உச்சக் குரலால் உளம் நிறைந்தது.

   மாயையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தின் பலவீனத்தை,கவியரசு பிரபலப்படுத்திய பாடல் தான்,'நெஞ்சில் ஓர் ஆலயம்'திரைப்படத்தில் P.B ஸ்ரீனி வாசின் காந்தக்குரலில் ஒலித்த,

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,தெய்வம் ஏதுமில்லை; 

நடந்ததையே நினைத்திருந்தால்,அமைதி என்றுமில்லை" 

எனும் அமோகப்பாடலாகும்.மெல்லிசை மன்னர்களில் மேன்மைமிகு இசையில், இப்பாடலுக்கு இடையே வரும், 

"எங்கே வாழ்க்கை தொடங்கும் 

அது எங்கே எப்படி முடியும் 

இதுதான் பாதை,இதுதான் பயணம் 

என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்; 

மாறுவதை புரிந்துகொண்டால்,மயக்கம் தெரிந்துவிடும்" 

   எனும் வரிகள்,மனித வாழ்வின் யதார்த்த நிலையினையும்,மாயவலையில் சிக்கித் தவிக்கும் மானுட துன்பத்தையும் ,சொற்களால் துல்லியமாய் படம்பிடித்துக் காட்டியது. 

  சிலநேரங்களில் மரணம்,மனிதனின் திருந்திய நற்குணங்களுக்கு சான்றுகூறும் என்றும்,நாம் நினைப்பதுண்டு.இப்படி ஒரு கருத்தைத்தான்,கவியரசு 'இருவர் உள்ளம்'திரைப்படத்தில், 

"ஏனழுதாய் ஏனழுதாய் 

என்னுயிரே ஏனழுதாய்" என்று தொடங்கி, 

"மரணம் வந்தால் தெரிந்துவிடும்; 

நான் மனிதன் என்று புரிந்துவிடும்;  

ஊர் சுமந்து போகும்போது, 

உனக்கும்கூட விளங்கிவிடும் " 

   என்று எழுதியிருப்பார்.திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில், டி.எம்.எஸ் குரலினாலும் ,சிவாஜியின் உணர்வுபூர்வமான நடிப்பினாலும்,இப்பாடல் நம் உள்ளங்களில் ஒரு தனி  டம் பிடித்தது என்று சொல்லலாம்.  

   கவியரசின் இன்னுமொரு மயான கீதம்தான் எம்.ஜி.ஆரின் 'முகராசி' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,

"உணடாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு;  

இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு; 

கொண்டாடும் போது ஒரு நூறுபேறு; 

உயிர் கூடுவிட்டு போகையிலே கூட யாரு."

  எனும் மிகச் சாதாரணமாக,வாழ்வின் உண்மையை உரைத்த உன்னத பாடல்.  மரணச் சுமையை மயானம் வரை கொண்டு சென்று இறக்கிவிடுவோருக்கு,நன்றி பாராட்டும் விதத்தில் அமைந்ததுதான், எம்.ஜி.ஆரின்'சங்கே முழங்கு' திரைப் படத்தில் இடம் பெற்ற,

"நாலு பேருக்கு நன்றி; 

அந்த நாலு பேருக்கு நன்றி; 

தாயில்லாத அனாதைக்கெல்லாம் 

தோள்கொடுத்து தூக்கிச் செல்லும், 

நாலு பேருக்கு நன்றி." 

  எனும் டி.எம்.சௌந்தராஜன் பாடிய, மனிதநேயப் பாடல். இப்பாடலையும் கவியரசு இயற்ற,அதற்கு. எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்திருந்தார்.

   வழக்கமாக,கதாநாயகர்கள்தான் தத்துவ பாடல்களை தங்கள் நெஞ்சில் தாங்கி, கேட்போர் நினைவுகளில் நீங்காமல் தங்கச் செய்வார்கள்.அதுவும் எம்.கே.தியாக ராஜ பாகவதர்,பி.யு.சின்னப்பா,டி ஆர் மகா லிங்கம் காலத்திற்குப் பிறகு,எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ,ஜெமினியோ சொந்தக்குரலில் பாடியதில்லை. 

   ஆனால்,ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய 'இரவும் பகலும்' திரைப்படத்தில், வில்லன் வேடம் அதிக திரைப்படங்களில் தரித்த எஸ்.ஏ.அசோகன் பாடிய,பின்வரும் பாடல், நம்மில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யிருக்கும்.ஆலங்குடி சோமு எழுதிய,

"இறந்தவனை சொமந்தவனும் இறந்துட்டான்; 

அத இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்." 

எனும் அப்பாடல்,டி ஆர் பாப்பாவின் இசையில்,அசோகனின் அபாரக் குரலில்,  வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

  மரணமும் மாயையும் சமத்துவத்தின் சாயல்கள்.ஏற்ற தாழ்வுகளின் பொய்முகங் களை கிழித்தெறியும் கீறல்கள். அனைவ ரும் அறிந்த,ஆனால் மனிதமனம் என்றைக் கும் ஏற்க மறுக்கும் இந்த  உண்மைகளை, 'படையப்பா' திரைப் படத்தில் அமைந்த  கவிப்பேரரசின் ஒரு பாடல்,மிக அற்புதமாக வெளிப்படுத்தியது. ஏ.ஆர்.ரெஹ்மான்  இசையில்,மனோ & Febi Mani பாடிய, 

"ஹோ ஹோ ஹோ கிக்கு ஏறுதே" 

 என்று தொடங்கும் அப்பாடலில் இடையே வரும் 

"கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே;     

தங்க பசுமம் தின்னவனும் மண்ணுக்குள்ளே."  

 எனும் வரிகள் மயான சமத்துவத்தின் மேன்மையை,உரக்க வெளிப்படுத்தின.

   இருப்பினும்,இந்த சமரசத்தின் சாராம் சத்தை 1956- இல் கே.ஏ.தங்கவேலும்,   பி.பானுமதியும் இணைந்து நடித்து வெளியான,ஆர்.ஆர்.சந்திரன் இயக்கத்தில் உருவான,'ரம்பையின் காதல்'எனும் திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், அற்புத மாக எடுத்துக்காட்டியது. டி.ஆர். பாப்பாவின் இசையில் சீகாழி கோவிந் தராஜன் மனமுருகிப்பாடிய, 

"சமரசம் உலாவும் இடமே, 

நம் வாழ்வில் காணா, 

சாமரம் உலாவும் இடமே!" 

எனும் அந்த ஏகாந்தப் பாடலுக்கிடையே வரும், 

"ஆண்டி ங்கே? அரசனும் ங்கே? 

ஆவி போனபின் கூடுவார் இங்கே!" 

என்றும், 

"எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு; 

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு" 

  என்றும் இடம்பெறும் வரிகளால்,கவிஞர் A.மருதகாசி,என்றும் தமிழ்த் திரைக் கவிதையின் கலங்கரை விளக்கமாகி றார்.இதுபோன்ற பாடல்களால் தமிழ்த்  திரையுலகு தரமுயன்று,மனித வாழ்வின் மறுபக்கமாகிறது.

   கலகமும் கலக்கமும் நிறைந்த மனித வாழ்வில்,நிழல்தேடும் நெஞ்சங்களுக்கு, மாயையின் மாட்சியினை,மயானத்தின் மாண்பினை,களமிறக்கும் பாடல்கள்,நிழல் திரையின் பிம்பங்களாக மட்டுமல்லாது, வாழ்க்கையின் விழுதுகளுக்கு மரண மெனும் முற்றுப்புள்ளி மூலம்,மாயையினை நிசமாக்குவதே,மயானப் பாடல்களின் நோக்கமாகும்.

   எல்லாற்றிற்கும் மேலாக,மன சஞ்சலங் களையும் களங்கங்களையும் களைந்து, வாழ்க்கையின் நேர்வழிப் பயணத்தை உறுதி செய்வதன் மூலம்,திரைக்கவிதை வரிகளின் மாய,மயானக் கோலங்கள், அழியா கோலங்களாகின்றன.

ப.சந்திரசேகரன் . 

Saturday, December 12, 2020

Two Dad Devoted Sons on the Tamil Big Screen

    This blog has discussed the perfect father figures and formidable mothers of Tamil cinema.It has also thrown light on siblings and twins who occupied the centre stage on the Tamil big screen.The family cluster becomes incomplete without children who become the supreme stars in the cluster. Sons and daughters can be loving and lovable or aggressive and hateful.Destiny is such that noble parents at times get ignoble children and evil parents are blessed with endearing wards.In the midst of this family cluster,there are cases of inconsiderate and disciplinarian parents with their hidden love for their sons,who rightly understand their parents especially their fathers and show them utmost devotion and deep affection.This post deals with two such sons of Tamil cinema,who cannot deviate from the yardsticks of discipline framed by their paternal heads.
  The first of these two dedicated sons,Krishna,was from the rural soil,full of warmth and unsaid adherence to the routine thrust upon him,by his rudely affectionate father.This son's character was precisely carved for actor Bharat in the film 'Em Mgan' directed by Thirumurugan and released in the year 2006.This film maker is the reputed director of very popular television serials with lengthy episodes such as Naadhaswaram,Kuladheivam,Metti Oli and the on going Kalyana Veedu besides a few more serials with shorter episodes.The film Em Makan,got him the best director award from the Tamil Nadu State Government.It was a beautifully made rural family drama,with the excellent acting support from Nasser,Bharat,Saranya,Gopika and Vadivelu.Those who watched the film would have hated Nasser,a very busy local grocer,whose ill treatment of his son was deplorable though his belief in hard work and his practice of the same,was adorable.
  The other film portraying a devoted son was Mohan Raja's 'Santhosh Subramanyan' that hit the theatres in 2008. Mohan  Raja cast his younger brother Jeyam Ravi{The prefix Mohan in Mohan Raja,belongs to the father of both the brothers and the prefix Jeyam represents the first film of Ravi}in the role of Santhosh.Unlike Em Magan,Santhosh Subramanyan was more a street romance culminating into a family fantasy.Here the father-son relationship was totally different.The father decided everything for his son without letting his son decide anything for himself.The problem got aggravated when the son himself chose his life partner.Unusually,as per his son's request,the father even allowed the girl of his son's choice,to stay in their house for a specific period,so that a final decision could be taken about the girl's suitability to their family values.
   Now setting aside the all-inclusive factors of both'Em Magan'and'Santhosh Subramanyan',this article's scope is to assess the quality of devotion of the sons of these two films,to their respective fathers.Krishna of'Em Magan'gulped the enormous insults heaped on him by his father,who once gave his son a new shirt received as gift,letting him believe that his father was so kind and loving that he had bought a new shirt for him.But when he came to know that his father had simply passed on a shirt received  as freebie,he would reach the extremes of depression and remove the shirt.His tough father would one time feed him with dishes that he did not like and next time,would beat him for something or other.
   In between the on going unpleasant routine between the father and son,was the other side of romantic dreams of the son,about his childhood sweet heart,his maternal uncle's daughter.Things would go awry after the naturally vigorous funeral ceremonies of Krishna's maternal grand father, when he and his maternal uncle's daughter were spotted together,during a hide and seek game. There would be a spontaneous family scuffle,in the most conventional rural style and  Krishna's father would angrily leave the village with his family on a hired car.Things would take a further delicate turn,when Krishna's sweet heart would come out of the car boot,on reaching his home.
  On seeing this unpleasant development,the ruthless father would drive the son and the girl out of home.The further developments would throw light on Krishna and his uncle's daughter getting married with the help of his girlfriend's father,who was also his father's auditor. Thanks to the help of the auditor,Krishna would become the manager of a poultry farm and grow in his career,making considerable fortune.Krishna and his wife would be blessed with a kid and his status would grow further,to the extent of owning a house and car.
   The final moments of this wonderful drama were almost an aesthetic treat with absolutely refining touches from the hands of Thirumurugan,with a brilliant display of role delivery by the classic actor Nasser and the most docile Bharat.That Bharat,as Krishna,would unquestioningly sign the retrieval document, concerning a landed property in his name brought by his father, showed his silent obeisance to whatever his father did. 
    However, just before the climax scene,Krishna,who had by then was blessed with a kid and had grown in status, would visit his father with a marriage proposal for his younger sister.When his father simply slighted his proposal,he would ask his father to spare just five minutes for him, by calling him Appa{Dad} and presenting him a brief gist of his love and admiration for his father who had been his exemplary role model,for achieving prosperity through a rigorous routine of unswerving labour.
  Krishna would tell his father that but for his dad he would not have learnt the right way of living, by surmounting all ordeals.In his opinion,his father had lived every minute of his life for the sake of his family and in this process,his loving dad,had beautifully carved his son's character,through self discipline and commitment to ethics of labour and trade.On hearing these words,the outwardly stony father,would stand dumb founded,with his heart melting down for his son,who had adored him instead of hating him,for the harsher ways he had been handled by his father.
   It was the most passionate moment in the film to watch Nasser emotionally breaking down to confess to his wife {Saranya}and his teasing brother in law{Vadivelu}how much he loved his son and how truly his son had understood him.He was in fact waiting for this day to fulfil a penance at the Murugan temple for getting back his son into his arms'fold. 
  Mohan Raja's projection of a devoted son in 'Santhosh Subramanyan' created a totally different experience. Prakash Raj as a rich and responsible father with a lot of concern for all his children, showed his paternal domination by deciding everything for his children with his well set priorities of taste and trends.So it would be quite natural on his part to think that he alone should fix the best girl for his youngest son Santhosh,as he had done for his other sons and daughters.
   But Santhosh had a different frame of mind.He came upon a girl and had his instant flash of love.His close friends knew his love and the girl whom he loved was almost a free bird,with an immaculate sense of men and matters and an innate spirit of sportiness,coupled with innocence. She was a rich find for the hero and he valued her much more than all the riches that his father had amassed.While the hero's father had already fixed his marriage with the daughter of a wealthy man with the concurrence of the son,the latter's mind was inseparably bound to the girl of his own choice.
   As the conflict of interests had to reach the climax with the father declaring that his son's choice was a misfit for the family{despite the fact that the girl had endeared herself to each and every other member of the family}and the son on the other hand affirming his love for the girl, Santhosh had to finally vindicate his stand with a vociferous outburst against his father.This emotional outburst was actually not against his father but an admission of the  excessive interest of his father in the welfare of his children.While Santhosh was ready to adhere to the decision of his father,he would only tell him about what all he had lost in his life,by the decision taken by his father on his behalf,at every stage.
  In this context,Santhosh would also say that even while playing Carom it was his father who would decide which coin his son should move to win the game.The excessive paternal focus of the father had actually deprived his children of their freedom and individuality.It was not just an emotional awakening but a logical and reasoning observation made by Santhosh that made his father realise his failure as a father,which he had so far been thinking as a successful pattern of parenting.
   Both Krishna and Santhosh are the best son models on the Tamil big screen.Both the sons had the right sense of understanding,regarding the genuineness of their respective dads and accepted their unacceptable exterior projections,purely on account of their unfaltering faith in their fathers' fine, inner attributes,brimming with love,concern and commitment towards bringing up their sons,as prospective value additions not only to their families but also to society.In was in this respect both Krishna and Santhosh created a new image of devoted sons and in creating this new image,both Bharat and Jeyam Ravi as actors, dissolved into the character by each one's chosen track of performance.Both Krishna and Santosh will remain as the out standing role models for juvenile celebration of submission and good will,towards a flawless and felicitous family bonding.
                                        ===================================

Wednesday, December 2, 2020

வாசுவும் பாலுவும் பரவசமா பாடினவங்க!


    P.B. ஸ்ரீனிவாசும் எஸ்.பி.பாலசுப்ர மண் யமும்,சுந்தரத் தெலுங்கினை தாய்மொழி யாகக் கொண்டவர்கள்.இவர்கள் இரு வருமே,தமிழ்த்திரை யுலகில் இசைத்துறை யில்,பல்லாண்டு வெற்றிக்கொடி கட்டிய வர்கள். P.B.ஸ்ரீனிவாஸ்,பாலு அவர்களை விட பதினைந்து ஆண்டுகள் மூத்தவர். அவர் தமிழில் பாடிய முதல் பாடல்,'ஜாதகம்' எனும் திரைப் படத்தில் R.கோவர்தனம் இசையில் ''மூட நம்பிக்கையால் பல கேடுவிளையும்''எனும் பாடல். 

   P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களை'வாசு'என்றும் எஸ்.பி.பியை'பாலு'  என்றும்  செல்லமாக  மனதில் கொண்டு,இப்பதிவை காண்போம். வாசுவும் பாலுவும் ஒரே தாய் மொழியைக் கொண்டிருந்தாலும்,பாடகர்கள் எனும் வகையில் இவர்கள் இருவருக் கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.'பிரேம பாசம்' திரைப்படம் படத்தில் எஸ்.ராஜேஸ் வரராவ் இசையில் வாசு பாடிய"அவன் அல்லால் புவி மீது,ஓர் அணுவும்  அசை யாது" என்ற பாடல் தொடங்கி,பலப் பல பாடல்களில் நாம் கேட்டு  மெய்மறந்த, மிருதுவான அதிர்வுகளை உள்ளடக்கிய  அவரின் குரலில்,ப்போதுமே  ஒரு காந்த சக்தி உண்டு.

   ஆனால் பாலுவின் குரல் பதுங்கும்; பாயும்."பாடும்போது நான் தென்றல் காற்று" {நேற்று இன்று நாளை}என்றும்"ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்"{தெய்வ வாக்கு}என்றும் பாட்டைப்பற்றி தனது பாட்டிலேயே, அமைதியையும் ஆர்ப்பரிப்பை யும்,தன் ஒற்றைக்குரலின் பல்வேறு பரிணாமங்களால்,வெளிப்படுத்தக்கூடியவர் பாலு. 

   "நிலவே என்னை நெருங்காதே"{ராமு} என்று பாடினார் வாசு.பாலுவோ    எம்.ஜி.ருக்காக முதன் முதலில் பாடிய பாடலே,"ஆயிரம் நிலவே வா"{அடிமைப் பெண்}என்பதுதான்.மேலும் அவர் நிலவை வரவேற்று, "நிலாவே வா செல்லாதே வா"{மௌனராகம் }என்றும்,"வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே"{மெல்லத் திறந்தது கதவு} என்றும்  பாடி, இசையால் நிலவுடன் ஐக்கியமானார்.

   வாசு பெண்ணைப்பற்றி"காலங்களில் அவள் வசந்தம்"{பாவ மன்னிப்பு}என்று பாடினால் பாலு"அவள் ஒரு நவரச நாடகம்"{உலகம் சுற்றும் வாலிபன் }என்று பாடுவார். வாசு"ரோஜா மலரே ராஜகுமாரி"{வீரத் திருமகன் }என்று காதலியை வாழ்த்தி மனம் மகிழ்ந்தால்,பாலு "காதல் ரோஜாவே!எங்கே நீயெங்கே,கண்ணீர் வழியுதடி கண்ணே " {ரோஜா }என்று சோகமழை பொழிவார்.

  "போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்?"{சின்ன தம்பி }என்ற பாலுவின் எழுச்சிக் கேள்விக்கு, வாசு "போவோம் புது உலகம் காண்போம் மதி மயக்கம்"{ வீர அபிமன்யு}என்று,  வருக்கு இருபத்தைந்தாண்டு முன்ன தாகவே,பதிலளித்திருந் தார்."எத்தனை எத்தனை இன்பமடா;இவை எல்லாம் உனக்கே சொந்தமடா"{யாருக்குச் சொந்தம்}என்று  வாசு மன நிறைவில்,மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பாடினால், பாலுவோ" என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு"{Love Today}என்று இன்ப வெள்ளத்தில் பாடித் துள்ளுவார்.  

   வாசு "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்"{போலீஸ்   காரன் மகள்}என்று விடுகதை விடுத்தால், பாலு"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நேரமில்லையோ"{மௌன ராகம்}என்று விரகதாபத்தை வெளிப்படுத்தி,மனம் குமுறுவார்.வாசுவின்''அவள் பறந்து போனாளே"{பார் மகளே பார்} பாடலும் பாலு வின்"பாடி பறந்த கிளி,பாட மறந்ததடி"{கிழக்கு வாசல் }பாடலும்,பிரிவின் பாரத் தை,ஏமாற்றத்தின் ஆதங்கத்தை,ஒருசேர வெளிப்படுத்துவதாகவே உணருகிறோம்.  

   வாசு"இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்"{ஹலோ மிஸ்டர் ஜமீன் தார் }என்று ஆனந்த பரவசத்தில் திளைத்தால்,"இளமை யெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு"{ பகலில் ஓர் இரவு }என்று ஆனந்தத்தை அணைத்தும்,"இளமை இதோ இதோ; இனிமை இதோ இதோ'' {சகலகலா வல்வன் }என்று உற்சாகத்தில் உலாவியும், கரகோஷ மிடுவார் பாலு. இருவேறு மாறுபட்ட குரல்களால், இவர்கள் படைத்த இசைக்களஞ்சியம்,தமிழ் மொழி உள்ளளவும் இன்பமழை பொழிந்து கொண்டே இருக்கும்! 

   வாசு எம்.ஜி.ருக்கும்,சிவாஜிக்கும்,ஒரு சில பாடல்கள்களைப் பாடியிருந்தாலும், ஜெமினி கணேசனுக்காக அவர் பாடும் போது,அது ஜெமினி கணேசன் பாடுவது போலவே இருக்கும்.ஏ.எம்.ராஜாவுக்கு அடுத்தபடியாக ஜெமினி கணேசன், ஆர். முத்துராமன் போன்றோருக்கு, வாசு வின் குரல் ஒரு வரப்பிரசாதம்,என்றே சொல்ல லாம். அதே போல எம்.ஜி.   ருக்கு ஒரு சில பாடல்களும்,சிவாஜிக்கு நிறைய  பாடல் களும்  பாடியிருந்தாலும், கமலுக்கும், ரஜினிக்கும்,மோகனுக்கும்,பாலுவின்  குரல்  கனகச்சிதமாகப் பொருந்தியது.

    வாசுவின் குரல் மயிலிறகைப்போல் நம் உணர்வுகளை வருடி அமைதியில் மிதக்கச் செய்யும்.அவர் பாடிய"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்"{போலீஸ் காரன் மகள்} "மனிதன் என்பவன்  தெய்வமாகலாம்" &"மயக்கமா கலக்கமா"{சுமை தாங்கி}" "மாலையில் மலர்ச்சோலையில் மது வேந்தும் மலரும் நீயே"& "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே"{அடுத்த வீட்டு பெண்} "சிரிப்புபாதி அழுகை பாதி"{எங்க வீட்டுப் பெண்} "நினைப்ப தெல்லாம் நடந்து விட்டால்"{நெஞ்சில் ஓர் ஆலயம்} போன்ற எண்ணற்ற பாடல்கள், என்றென்றும்தேனி னும் இனிய தெவிட்டாச் சுவையாக, நம் நினைவுளில் வலம் வந்துகொண்டிருக்கும். மென்மையான பாடல்களால்,தமிழிசை யின் தவப்புதல்வனாக விளங்கினார் ஸ்ரீனிவாஸ்.

   எனக்குத் தெரிந்தவரை அவரிடம் உல்லாசத் துள்ளல்கள்கூட எல்லை யைக் கடக்காமல் குரல் கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டிருந்ததாகவே தோன்றுகிறது.அவரின் குரலில் முற்றிலும் மாறுபட்ட,இசை ஆரவாரம் மிக்க ஒரே ஒரு பாடல்,'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் ஒலித்து நம்மை பரவசத்தில் ஆடவைத்த"மாடிமேல மாடிகட்டி கோடி கோடி சேர்த்துவைத்த சீமானே"எனும் அமர்க்களப் பாடலாகும்.   

    பாலுவின் குரலின் ஏற்ற இறக்கங்க ளும்,நெளிவு சுளிவுகளும் அதிர்வு ஆர்ப்பாட் டங்களும்,மிதக்கவும் மிரளவும் செய்யும் குரல் வீச்சும், சொல்லாண்மையும்,என்றைக் கும் சுகமூட்டும் நினைவலைகளே!வாசுவைப்போல் இவரும்,இதயத்தைத் தாலாட் டும்"பச்சைமலைத் தேரு"{கிழக்கு வாசல் }"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே"{புதுப்புது அர்த்தங்கள்} "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" &"கற்பபூர பொம்மை ஒன்று"{கேளடி கண்மணி}"வண்ணம் கொண்ட வெண்ணிலவே"{சிகரம்}போன்ற நெஞ்சைத் தாலாட்டும் பாடல்களோடு நில்லாது, குரல் ஆளுமையால் இசை யுலகின் மூலை முடுக்குகளிலெல் லாம் முழு வீச்சில் பயணித்தார்.

   மொத்தத்தில் வாசுவின் பாடல்கள், விழுந்து வணங்கத் தக்கவை எனில்,பாலு வின் பாடல்கள் ஆரத் தழுவி ஆனந்தப் பரவசத்தை தோற்றுவிக்கக் கூடியவை. சுருக்கமாக ஒரு தமிழ்திரைப்படத் தலைப் பின் பாணியில் கூறவேண்டுமெனில், வாசுவும் பாலுவும் பரவசமா பாடினவங்க! 

  எல்லாவற்றிற்கும் மேலாக B P S எனும் மூன்று ஆங்கில எழுத்துக்களில் இந்த இருவருமே சங்கமித்திருப்பது எத்தனை அற்புதமான ஒற்றுமை! 

நன்றி:-Tamil Movie Poster.com

ப.சந்திரசேகரன் .