Wednesday, April 24, 2024

உலகம் சுற்றும் தமிழ்த்திரை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

   என்று,விநாயகர் தாய் தந்தையரை சுற்றி வந்து உலகத்தைச் சுற்றியாதாக உணர்ந் தது போல,இரண்டே வரிகளில் உலகின் மகத்துவத்தை உரைத்தார் வள்ளுவர். தமிழ்ததிரையோ,தலைப்புகளாலும் பாடல் களாலும்,உலகம் சுற்றிய உயிர்த் துடிப்பை, நமது விழிகளுக்கும் செவிகளுக்கும் சிந்தனை விருந்தாக்கியது.

  ஒரு புறம் உலகு நாம் நினைப்பது போல் இல்லை எனும் பாணியில்'உலகம் பல விதம்'எனும் தலைப்பையும் இன்னொரு புறம் நாம் வியக்கும் வண்ணம் உலகம் இல்லை எனும் பொருள் கொண்டு,'உலகம் இவ்வளவுதான்'எனும் தலைப்பையும் தமிழ்த்திரை நம் கவனத்திற்கு கொண்டு வந்தது.அறநெறிக்குட்படாது மனித இனம் தடம் புரளும் வேளைகளில்,உலகமே ஏளனமாய் மனிதனைப் பார்க்கும் என்பதைத்தான்,"உலகம் சிரிக்கிறது"{1959}எனும் திரைப்படம் உணர்த்தியது. இதுவே பின்னர்"உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது"எனும் எம்.ஜி.ஆரின் 'அடிமைப் பெண்'திரைப்படப் பாடலானது.

  மேலும் உலகத்தையே தன் வயப்படுத்தும் மனப்போக்கில்'உலகம் பிறந்தது எனக்காக' என்றும்,உலகைச்சுற்றி இளமைக்கு உவகை ஊட்டும் விதமாக,'உலகம் சுற்றும் வாலிபன்' என்றும் தலைப்புகளைக் கண்டது தமிழ்த் திரை.உலகம் சுற்றும் வாலிபனுக்கு எதிராக பொருளுரைக்கும் விதமாக 'உன்னைச் சுற்றும் உலகம்' எனும் தலைப்புடன் வெளி யானது மற்றோர் திரைப்படம். இவையெல் லாம் போதாதென்று'வேதாள உலகம்' என்னும் வித்தியாசமான திரைப் படத்தை யும் தமிழ்த்திரை கண்டது.

    திரைப்படத் தலைப்புகளை சற்றே தள்ளி வைத்து பாடல்களைப் பார்க்கையில், முதலில் நம் சிந்தனையைத் தட்டும்,  அன்னாள் பிரலப்பாடகர் கண்டசாலாவின் இருநிலை மனப்போக்கை வெளிப்படுத்திய இரு பாடல்கள் உண்டு.முதல் பாடல்,விரக்தி யில் விளைந்த 'தேவதாஸ்' திரைப்படத்தில் நாம் கேட்டு மனம் நொந்த,

"உலகே மாயம்;வாழ்வே மாயம்

நிலையேது நாம் காணும் சுகமே மாயம்"

   எனும் உடுமலை நாராயணகவியின் கனமான வரிகளில் அமைந்திருந்தது.இந்த மறக்கமுடியா பாடலுக்கு சி.ஆர்.சுப்பிரமணி யம் இதயம் நனையும் வண்ணம் இசை யமைத்திருந்தார்.இதற்கு முற்றிலும் மாறான மனப்போக்கில் 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'திரைப்படத்தில் அதே கண்டசாலா பாடிய, 

"உல்லாச உலகம் உனக்கே சொந்தம்

செய்யடா செய்யடா செய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா"

   எனும் A.மருதகாசியின் வரிகளில் திளைத்து,எஸ்.தட்சிணாமூர்த்தியின் தேனிசையில் ஊறி,இன்பமழை பொழிந்த பாடலாகும்.

  இன்டர்நெட் யுகத்தில் வாழும் பலருக்கும், ஒரு காலத்தில்,பத்திரிக்கைமட்டுமே சார்ந்து வாழ்ந்த தலைமுறை,ஒரு தனி உலகமாகவோ அல்லது உலகத்தை பிரதி பலிக்கும்  சக்தியாகவோ விளங்கியது என்பது,தெரிந்திருக்க நியாயமில்லை. இதைத் தான் 'குலமகள் ராதை' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசனின்,

"உலகம் இதிலே அடங்குது 

உண்மையும் பொய்யும் விளங்குது

கலகம் வருத தீருது

அச்சுக் கலையால் நிலைமை மாறுது"

எனும் வரிகள் விளம்பரப்படுத்தின.

  உலகத்தையே தன்வயப்படுத்தி தன் நிலை முன்னுயர்த்தும் வண்ணம் அமைந்த பாடலே எம்.ஜி.ஆரின் 'பாசம்'திரைப்படததில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தியின் இசையில் விண்ணதிரச் செய்த,

"உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக"

எனும் அமர்க்களப்பாடல்.

 கண்ணாதாசனின் கம்பீரமான வரிகளா லும் டி.எம்.எஸ்ஸின் ஒப்பில்லாக் குரலாலும் உயரம் கண்டது இப்பாடல்.

  இதற்கு மாறாக,விலகி நின்று உலக அதிசியங்களை விந்தையுடன் தரிசித்த மற்றுமொரு எம்.ஜி.ஆர் பாடலே,'உலகம் சுற்றும் வாலிபன்'திரைப்படத்தில்  டி.எம்.எஸ்ஸும் எஸ் ஜானகியும் சேர்ந்து பாடிய,

"உலகம் உலகம்

அழகு கலைகளின் சுரங்கம்

பருவச் சிலைகளின் அரங்கம்

காலமே ஓடிவா

காதலே தேடிவா"

  எனும் கண்ணதாசனின் வரிகளில் எழுந்து எம்.எஸ்.விஸ்வநாதனின் தேனிசையில் திளைத்த பாடலாகும்.ஆனால் இதற்கு சற்று மாறான பாடலே'மாறன்'திரைப்படத்திற்காக கவிஞர் விவேக் எழுதி தனுஷும் அறிவும் பாடிய,

"இது பொல்லாத உலகம்.

நீ கொஞ்சம் ஷார்ப்பா இரு.

யாருக்கும் யார் என்ன கொறச்சல்

நீ கொஞ்சம் மாஸா இரு"

  எனும் தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலச் சொற்கள் உள்ளடக்கிய ஆரவாரப் பாடல். இப்பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் பேசும் பாணியில் இசையமைத்திருந்தார்.

  பொல்லாத உலகம் எனும் வரிகளைக் காண்கையில்'நிச்சயதாம்பூலம்' திரைப் படத்தில் டி.எம்.எஸ்,எல்.ஆர் ஈஸ்வரி இணைந்து குழுவினருடன் பாடிய,

"இது வேறுலகம் தனி உலகம்

இரவில் விடியும் புது உலகம்

விதவிதமாக மனிதர்கள் கூடும்

வேடிக்கை உலகமிதே"

  எனும் வாழ்க்கையை சல்லாபத்திற்குச் சரணடையச்செய்த கவியரசின் வரிகள், மகிழ்சியில் நனைந்து நிறைந்து,நெஞ்சை குளிரச்செய்தது..

   ஒரு சில பாடல்களுக்கிடையேயும் உலக நீதி பற்றிய சில அருமையான வரிகள் இடம் பெற்றுள்ளன.'பணத்தோட்டம்'படத்தில் டி.எம்.எஸ் பாடிய "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"எனும் அர்த்தம் நிறைந்த பாடலில்,

"உலகத்தில் திருடர்கள் சரிபாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதே மதி மயங்காதே"

  எனும் சமூக சிந்தனை சார்ந்த வரிகளும் 'எங்க வீட்டுப்பெண்'எனும் திரைப்படத்தில்

"சிரிப்பு பாதி அழுகை பாதி

சேர்ந்ததல்லவோ மனித ஜாதி

நெருப்பும் பாதி நீரும் பாதி

நிறைந்ததல்லவோ உலக நியதி"

  என்ற P.B.சீனிவாஸ் குரலில் இடம்பெற்ற தத்தவ ரீதியில் அமைந்த பாடல் வரிகளும், எற்றென்றும் நினைவில் நிற்கும்,கண்ண தாசனின் கவித்திறன் வெளிப்பாடுகளா கும்.இதில் முதல் பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இரண்டாம் பாடலுக்கு கே.வி.மகாதவனும்  இசையமைத்திருந் தனர்.

  "உலகத்தில் சிறந்தது எது" எனக் கேள்வி எழுப்பி அது நட்பல்ல,காதலல்ல தாய்மை என்று, உணர்வுபூர்வமாக அறிவித்த பாடலொன்று 'பட்டணத்தில் பூதம்'எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.டி.எம். சௌந்தராஜன் ஏ.எல்.ராகவன் மற்றும் பி.சுசீலா இணைந்து பாடிய கண்ணதாச னின் இவ்வரிகளுக்கு கோவர்த்தனம் எழுச் சியுடன் இசையமைத்திருந்தார்.நாம் வாழும் சிறந்ததோர் உலகில் தாய்மையே அனைத்திலும் சிறந்தது என்பது பிறப்பின் பெருமையன்றோ!.

  உலகம் சுற்றிவந்த தமிழ்த்திரையில்,மனித உணர்வுகளும் படைப்பாற்றல் மிக்க சிந்தனைகளும்,உலகைச் சுற்றிவந்தது, திரைத்துறைக்கு மட்டுமல்லாது,நாம் வாழும் உலகிற்கும் பெருமை சேர்த்தது என்பது,படைப்பாற்றலுக்கே பரவசம்தானே!

                 ===========0==========

  

Wednesday, April 10, 2024

R.M.Veerappan,the victorious film producer


               {Homage to Mr.R.M.Veerappan}

    R.M.Veerappan one of the most dynamic and successful film producers, passed away on 9th April 2024,after a remarkably long life and after tasting enormous victory in the film industry besides making considerable imprints in politics. This post is exclusively dedicated to his great contribution to Tamil Cinema.

   R.M.Verappan's Sathya Movies film making unit spread over a period of four decades, struck the success note from its very first movie Deivathaai starring MGR and Saroja devi, released in 1964.Being closely associated with MGR, initially in cinema and later in politics, RMV became the master craftsman in planning and executing eventful happenings in the field of cinema with prudence and perfection.RMV takes the singular credit for inducting eminent film maker K.Balachander for writing dialogues for the film Deivathai.This was the only movie for which veteran director K.Balachander worked with MGR and this was also the only film of MGR directed by P.Madhavan,a very popular film maker of Sivaji Ganesan hits.

  The speciality of RMV as film producer,was in giving consecutive hits of MGR films like, Naan Aanaiyittal,Kaavalkaaran,Kannan En Kaadhalan Idhayakani and Rickshawkaaran{ MGR got the best actor award for this film}.These were all films made in between the late Nineteen Sixties and mid Nineteen Seventies.In addition to these filme,RMV also worked with MGR for the latter's home production films like Naadodi Mannan, Adimai Penn and Ulagam Sutum Vaaliban.The two non MGR films released during the Nineteen Seventies were, Manippayal starring Master Sekar as the young boy hero and Kannipenn with Jaishankar as hero and Lakshmi playing the titular role. Vanishree was paired with Jaishankar in this film. 

  After MGR became Chief Minister RMV's attention was drawn towards the two heroes of the next generation,viz.Rajinikanth and Kamala hasan. Sathya Movies of course inducted the superstar more frequently,than Kamalahasan. The successful Rajinikanth films of Sathya Movies were,Ranuva Veeran,Moonru Mugam, Thanga Magan,Oor Kaavalan,Panakkaaran and the mega hit film Baashaa. Sathya Movies'two Kamal films were the superhit Kaakki Chattai and the very moderate  Kaadhal Parisu.

  Sathya Movies made three entries with Sathyaraj and the fairly run films were, Mandhira Punnagai,Puthiya Vaanam and Puthu Manidhan.Of the three, Puthiya Vaanam became the one and only film with Sivaji Ganesan playing the lead role and interestingly, this film hit the screens only after the demise of MGR. The other popular films of Sathya Movies were Oru Vellaadu Vengaiyaagiradhu, En Thangai,Enga Thambi and Nila Penne.

   R.M.Veerappan carried a Midas touch in giving many successful films. He was also an able screen writer and his entire management of the task of film production, set exemplary standards in film making for the successive film production houses,especially in terms of budget calculation and sticking to the budget norms,to the maximum extent possible.Even now,Tamil film viewers can nostalgically recall his best films like Deivathaai,Kaavalkaaran,Idhayakani, Rickshawkaran,Moonru Mugam,Kaaki Chattai, Thanga Magan and the ever green Baashaa.The frequent makers  of Sathya Movies films were, P.Neelakandan,A.Jaganadhan & S.P.Muthuraman followed by Kasilingam,Chanakya,Suresh Krishna,Manobala,P.Vasu,Manivannan,Raja sekar,Devaraj Mohan and V.Thamizhazhagan.

   RMV's sagacity and meticulous dedication to the task on hand, be it cinema or politics,are well known to those who have closely and distantly assessed his singular merits,imbibing absolute management skills.Tamil film industry would always cherish in its records RMV as one of the foremost contributors to the quality of Tamil cinema, with an inherent grasp of the mood and expectation of the audience and in never failing to entertain them with decent action thrillers from Deivathaai to Baashaa. This post is a special salute to the film veteran. 

NOTE:- Visit the blog for the other article"The Success Story of Sathya Movies".

Friday, April 5, 2024

மன்னிப்பும் நன்றியும்

  கேட்டுப் பெறுவதும்,அளிப்பதுமே மன்னிப்பு.மாறாக உணர்வால் உந்தப்பட்டு நன்றி செலுத்துவதும்,அதே நேரத்தில், கைம்மாறுக்கு நன்றி எதிர்பாராமல் இருப்ப துமே,நன்றியறிதலாகும். மன்னிப்பை மனதில் ஏற்றிட, 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை 

இகழ்வாரை பொறுத்தல் தலை 

எனும் வள்ளுவர் கூற்றை அறிதலே அதன் தரம் உயர்த்தும்.

  ஆனால்,இதற்கு முற்றிலும் எதிர்ப்பட்டு, 'ரமணா'திரைப்படத்தின் எவரும் மறக்க முடியாத ஒற்றைவரி வசனமாக,"மன்னிப்பு, தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை"என்று அமரர் கேப்டன் விஜயகாந்தின் வாய் மொழிக் கூற்றாய் வெளியேறிய வசனம், பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது. மனிதத்தை படுகுழியில் புதைப்போர்க்கு, மன்னிப்பே கிடையாது எனும் ஆவேச எழுச்சி,நியாயமானதாகவே பலராலும் கருதப்படுகிறது.

ஒருதார்க்கு ஒருநாளைக்கு இன்பம் பொறுத்தார்க்கு 

பொன்றும் துணையும் புகழ் 

   எனும் வள்ளுவனின் அற(றி)வுரை,படு பாதகம் புரிவோருக்கு பொருந்தாதுதானே! 

 இருப்பினும்,இரும்பெனும் இதயம் கொண்டு சிறு தவறுகளையும் மன்னிக்கத் தவறுகையில்,மனிதமே தடம்புரண்டு இடம் தெரியாமல் போய்விடும் என்பதே,யதார்த் தமாகும்.இதைத்தான் 'விளக்கேற்றிய வள்'திரைப்படத்தில் டி.ஆர்.பாப்பாவின் அருமையான இசையில் டி.எம்.எஸ்.மிதமா கப் பாடிய,"கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு"என்ற பாடலுக்கு இடையே வரும்,

"மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா

இதை மறந்தவன் வாழ்வு தடம்தெரியாமல் மறைந்தே போகுமப்பா"

  எனும் ஆலங்குடி சோமுவின் அர்த்தமுள்ள வரிகள் அறிவுறுத்துகின்றன.

  கிறித்துவ மதத்தில் பாவ மன்னிப்பு கோரலும்,பாவத்திற்கான தண்டனையும், விமோசனமும்,செய்த பாவம் அனுசரித்த வாறு அமைந்திருப்பதாக அறிகிறோம். 'ஞான ஒளி'திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய 

"தேவரீர் என்னைப் பாருங்கள்

என் பாவங்கள் தம்மை 

வாங்கிக் கொள்ளுவீர்;

ஆயிரம் நன்மை தீமைகள்

நாங்கள் செய்கிறோம்,

நீங்கள் அறிவீர்,

மன்னித் தருள்வீர்."

  எனும் கவியரசின் வரிகள்,பாவத்திற்கும் மன்னிப்பிற்கும் இடையிலான இடைவெளி யை பக்குவமாய் புரியவைத்தது.

   'ஜனனி'(1985) திரைப்படத்தில்,எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,கே.ஜே.ஏசுதாஸ் மனமிறங்கிப்பாடிய,

"மன்னிக்க மாட்டாயா உந்தன் மனமிறங்கி" என்ற பாடல்,காதலியிடம் கெஞ்சி மன்னிப் புக் கேட்பதை,அதிர்வலைகளாய் சுகமாக தோற்றுவித்தது.

   'இருமலர்கள்'திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,வாலியின் வித்தியாசமான வரிகளிலமைந்த

"மன்னிக்க வேண்டுகிறேன்

உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்"

  எனும் பாடலை பி.சுசிலா மற்றும் டி.எம்.எஸ் குரல்களில் கேட்கையில்,இப்பாடல் காத்தி ருப்பை ஈடு செய்ய மன்னிப்பை காணிக்கை யாக்குகிறதா அல்லது ஆசையைத் தூண்டு வதற்கான முன்னறிவிப்பாக மன்னிப்பு அமைகிறதா எனும் விளக்கத்தை  அமரர் வாலிதான் அளிக்கவேண்டும்.(திரைப் படத்தை கண்டவருக்கு அது காத்திருக்கச் செய்தமைக்கான மன்னிப்புக்கோரலே என்பது புரிதலாயிருக்கும்). 

  மேலே குறிப்பிட்ட ஒரு சில பாடல்கள் மட்டு மல்லாது,மன்னிப்பை முன்னிலைப்படுத்தி, 'மன்னிப்பு'பாவமன்னிப்பு'போன்ற திரைப் படத்தலைப்புகளையும் தமிழ்த்திரை தந்தி ருக்கிறது.

   மனிதவாழ்வின் மகத்துவம் எந்த அள விற்கு மன்னிப்பு கேட்பதிலும் அளிப்பதிலும் உள்ளதோ,அதே அளவிற்கு நன்றி பாராட்டு தலிலும் உள்ளது.செய்நன்றி எனும் அதி காரத்தில்,நன்றியறிதலின் மேன்மையை அற்புதமாய் வலியுறுத்திக்கூறியுள்ளார் வள்ளுவர்.தமிழ்த்திரைப்படங்களில் நன்றி கூறும் வகையில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில்,சில நளினமான பாடல்கள் உண்டு.

  காதலனைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய தன் விழிகளுக்கே,நன்றி சொல் லும் வண்ணம்,

"நான் நன்றி சொல்வேன் என்கண்களுக்கு

உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்லச் சொல்ல

நானும் மெல்ல மெல்ல

என்னை மறப்பதென்ன"

  எனும் 'குழந்தயும் தெய்வமும்'திரைப்படத் தில்,பி.சுசிலா குரலால் குழைந்து பாடிய வசந்தமான வாலியின் வரிகள்,எம்.எஸ். விஸ்வநாதனின் பேரிசையில் பெரு மகிழ்ச்சி படைத்தது.இப்பாடலில்,எம்.எஸ்.வி யின் ஹம்மிங்,பி.சுசிலாவின் குரலோடு கூடவே பயணித்து,பாடலின் சுகத்தை இரட் டிப்பாக்கியது.

  இதேபோன்று இல்லறத்தில் இணைந்த இருவரும் போட்டி போட்டுக்கொண்டு,

"நன்றி சொல்ல உனக்கு

வார்த்தையில்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்"

   எனும் வாலின் வசீகரிக்கும் வரிகள் கொண்ட  பாடல்,'மறுமலர்ச்சி'திரைப்படத் தில்,எஸ்.ஏ.ராஜ்குமாரின் மனம் கவரும் இசையில் இரண்டு காட்சிகளில் தனித் தனியே ஒலித்தது.இந்த ரம்யமான பாடலை ஹரிஹரனும் அம்ருதாவும் ஒரு முறையும், உன்னி கிருஷ்ணனும் கே.எஸ்.சித்ராவும் மறுமுறையும்,பாடியிருந்தனர்.

 நன்றி எனும் சொல்லை உள்ளடக்கிய இடையில் வரும் அர்த்தமுள்ள வரிகள், P.B.ஸ்ரீநிவாசின் இரு பாடல்களில் இடம் பெற்றிருந்தன.'பனித்திரை'திரைப்படத்தில் இடம்பெற்ற, 

"ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்"பாடலுக்கு நடுவே,

"நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்

நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்"

என்ற உருவக ஒப்பீட்டு வரிகளும்,

'வாழ்க்கைப்படகு'திரைப்படத்தில் அவர் பாடிய,

"சின்ன சின்ன கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ"

பாடலுக்கிடையே முள்ளெனத் தைக்கும்,

"நன்றிகெட்ட மாந்தரடா;நானறிந்த பாடமடா"

  எனும் அனுபவக்கூற்றும்,நன்றி எனும் சொல்லுக்கு காப்பியம் படைக்கும்.இந்த இரு பாடல்களுக்கும் கவியரசு கச்சிதமாய்க் கவிபுனைய,முதலாவது பாடலக்கு கே.வி. மகாதேவனும்,இரண்டாவது பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியும்,வானுயர இசைகோபுரம் எழுப்பினர்.

  வாழ்நாள் முழுவதும் மனிதனை வலம் வரும் நன்றி,அவன் மரணத்தில் மெனமாய் வெற்றி காண்கிறது.இதைத்தான் 'சங்கே முழங்கு'திரைப்படத்தில் டி.எம்.எஸ் தன் கம் பீரக்குரலால் முழங்கிய,

"நாலு பேருக்கு நன்றி அந்த

நாலு பேருக்கு நன்றி

தாயில்லாத அநாதைக்கெல்லாம்

தோள் கொடுத்து தூக்கி செல்லும்

  நாலு பேருக்கு நன்றி"

எனும் பாடலும்,அப்பாடலின் முடிவில்,

"வாழும்போது வருவோர்க்கெல்லாம்

வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

வார்த்தை இன்றி போகும்போது

மௌனத்தாலே நன்றி சொல்வோம்"

எனும் தத்துவரீதியிலான முடிவுரையும்

  'நன்றியறிதல்'எனும் நற்பண்பை,நான்கு திசையிலும் நாள்காட்டியாய்க் கொண்டு சென்றது.கண்ணதாசனின் கடலாழம் கொண்ட இப்பாடலை,எம்.எஸ் விஸ்வ நாதன்,இசையின் அமரத்துவத்தால்,இமய மாக்கினார்.

  இத்தகைய வாழ்வின் வரப்பிரசாதமான நன்றியறிதலை,

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப்பெரிது

என்று உச்சந்தலையில் ஊட்டியும், 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு

என்று நன்றியின்மையை மண்ணுக்குள் ஆழமாய்ப் புதைத்தும்,

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்க்

கொள்வர் பயன்தெரி வார்

   என இயல்பாய் நன்றி பேணுபவரை மேன்மைப்படுத்தியும்,நன்றியறிதலை மனிதனின் நாடி நரம்புகளில் ஊறச்செய் தார் அறவழி நாயகன் வள்ளுவர்.

   நன்றி பாராட்டுதலை'நன்றி மீண்டும் வருக'என்று பல ஊர் எல்லைப்பகுதியில் அறிவிப்புப் பலகையாய்ப் பார்க்கையில், விருந்தோம்பலும் நன்றியறிதலும் இணைந்து,அதனை மனிதம் உய்க்கும் அறநெறி களாய் உணரமுடியும்.இந்த "நன்றி மீண்டும் வருக"என்பது,ஒரு திரைப் படத் தலைப்பாகவும் வந்தது.மன்னிப்பை பின்பற்றலும், நன்றியை நடு நெஞ்சில் போற்றி வளர்த்தலுமே,மனித சமுகத்தின் தன்னிகரில்லா ஒழுக்க வரையறைகள் என்பதை,தமிழ் திரைப்படத்துறை திகட்டா மல் தந்திருக்கிறது என்பது,பெரும் பாராட் டுக்குரியதாகும்.

   ===========0===========0=============