Thursday, May 20, 2021

கர்ணனின் கருவுருவாக்கம்

   




   கர்ம வினைக்கும் கர்னணனுக்கும் தொடர்புகூறும் கருவுருவாக்கம்,  கர்ணன் எனும் இதிகாச  கதாபாத்திரத்திற்கும்,மனிதவாழ்விலும் வெள்ளித்திரையிலும்  நாம் காணும் நிகழ்வுகளுக்கும்,முறையாகப் பொருந்தும் கருத்து வடிவாகும். அமெரிக்க ஆன்மீக எழுத்தாளரும் உற்சாகமூட்டும் பேச்சாளாருமாகிய   Wayne Walter Dyer "கர்ம வினை என்பது "மற்றவர் உன்னை எப்படி நடத்துகின்றனர்;நீ அதனை  எவ்வாறு எதிர் கொள்கிறாய்"என்பதேயாகும் என்று கூறுகிறார்.

  இந்த கருத்தினைத்தான் "உள்ளத் தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா;வருவதை எதிர்கொள்ளடா"எனும் உள்ளத்தில் உரம்போட்ட பாடல் உணர்த்தியது .இது கிட்டத்தட்ட அறிவியல் ஆசான் நியூட்டனின் மூன்றாவது விதியான ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதற்கு ஒப்பான ஒரு கருத்தாகிறது.

  உலக இதிகாசங்களாகிய கிரேக்க மொழியில் ஹோமர்{Homer} படைத்த ஓடிஸீ{Odyssey}, 'இலியட்' {Iiad}இலத்தீனில் வர்ஜில்{Virgil} உருவாக்கிய 'ஈனியட்' {Aenead}மற்றும் ஆங்கிலத்தில் ஜான் மில்டன்{John Milton} எழுதிய பேரடைஸ் லாஸ்ட் {Paradise Lost} ஆகிய அனைத்துமே, ஆன்ம பலத்தை, தியாகத்தின் வாயிலாகவோ,வீரத்தின் வெளிப் பாடாகவோ,புலப்படுத்தின.

   இந்து மதத்தின் இதிகாச  இதயக் கனிகளான மாகாபாரதம், இராமா யணம் போன்றவை"தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும்"என்பதை வலியுறுத்தின.இதில் கவ்வும் சூதினை வினை என்றும்,வெல்லும் தர்மத்தை எதிர்வினை என்றும் விளக்கம் கூறலாம்.

  ஆனால் மகாபாரதத்தில் நாம் சந்தித்த கர்ணனை,ஒரு புறக்கணிக்கப் பட்ட,வஞ்சிக்கப்பட்ட கதாபாத்திரமாகவே காணமுடிகிறது.குந்திதேவி சூரியதேவன் எனும் தாய் தந்தையரால் புறக்கணிக்கப்பட்டு, தனது பாண்டவ வம்ச அரைசகோதரர்களாலும் ஒதுக்கப்பட்டு,இறை அவதாரமாகிய கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட கர்ணன்,தனது ஈடு இணை யற்ற தருமத்தாலும் தியாகச் செழுமையாலும் மகாபாரதத்தின் முதன்மை கதாபாத்திரம் ஆகிறான்.ஒடுக்கப்பட்ட ஒரு ஆன்மாவுக்கு அடைக்கலம் நல்கி கவுரவர்கள்,  ன்னை கண்டுகொள்ளாத  பாண்டவ  அரை சகோ தரர்களைவிட மிகவும் உயர்ந்த பங்காளிகளாகவே, கர்ணனின் மனதிற் குள்,நீங்கா இடம்பெறுகின்றனர்.

  எனவே மகாபாரதம் எனும் இதிகாசம்,புறக்கணிப்பிற்கும்,அப்புறக்கணிப் பிற்கு  முற்றிலும் காரணமான பெற்றோர்களுக்கும் இடையே நடைபெறும்  வினை /எதிர்வினை போராட்டமே! இந்து மதம் சார்ந்த இந்த இதிகாசம் மாறுபட்ட வகையில் மாறுபட்ட எழுத்தாளர் களால் எழுதப்பட்டு,மாறுபட்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகிறது.மகாபாரதத்தை பொறுத்த மட்டில் நஞ்சு கொண்டு நஞ்சை கட்டுப்படுத்துவது போல,சூதின் மூலக்கரு கொண்டு சூதினை வெல்வது சரியே,என்று காட்டுகிறது.

  இதற்கென அவதார மெடுக்கும் இறைவன் கண்ணனே,சகுனி எனும் நஞ்சினை தனது சூழ்ச்சியினால் வெல்கிறார்,எனும் இதிகாச நிகழ்வுகள் அரங்கேறும் வேளையில், கர்ம வினையின் கருத்தாழம் கரைகாண்கிறது. வினையின் பலன் விளைந்தே தீரும்;நல்வினையாயின் நற்பலன்; தீவினை யாயின் தீவினைக்கு இரை."தீதும் நன்றும் பிறர்தர வாரா"எனும் புறநானூற்றின் அழுத்தத்தையும் இதனுடன் இணைத்துக் காணலாம்.  

  ஆனால் இந்த சதுரங்க ஆட்டக்களத்தில் பகடைக்காயாக கர்ணன்  உருட்டப்பட்டு,அவனது தர்மம் களவா டப்பட்டு,அவனது வீரம் வஞ்சிக்கப் பட்டு,ஒரு செயல்பாட்டு வினையின் பிரம்மாண்டப் பொருளாக விஸ்வ ரூபம் எடுக்கிறான்.அவன் படும் வேதனைக்கு சற்று அதிகமாகவே  அவனை புறக்கணித்த அவன் அன்னை குந்திதேவியும்,அவனுடைய அரை சகோதரர்களான பாண்டவர்களும் நெஞ்சுறைந்து,கூனிக்குறுகிப் போகி றார்கள் எனும் நிலையினைக் காண்கையில்,அவர்களின் வினைப் பயனை  அறுவடை செய்கிறார்கள் என்று முடிவு கொள்ளலாம்.

  மனசாட்சியின் உறுத்தல்களுக்கு மாற்று மருந்தே இல்லை.எனவே கர்ணனின் கதாபாத்திரம் கொண்டு கண்ணன்,கவுரவர்ளின் விரல்களால் அவர்களின் கண்ணைக் குத்தினார் என்பதைக் காட்டிலும் அதனினும் மேலான வேதனையை,கர்ணனை புறக்கணித்தவர்களுக்கு ஏற்படுத்தி னார் என்றுதான் காணவேண்டும.கர்ணன் எனும் சொல் கர்மாவிற்கு இணையானது; கர்ணனின் புறக்கணிப்பு,அவனை புறக்கணித்தோர்க்கு எதிர்வினையானது.

   இந்த அற்புதமான கர்ணனின் கருவுருவை பத்மினி பிக்ச்சர்ஸ் தயாரிப் பில் வெளியான கர்ணன் திரைப்படம் கம்பீரமாக வெண்திரை நிகழ்வாக் கியது. நடிகர் நிலம் நடிப்பில் உருவான இத்திரைப்படம் தமிழ்த்திரைப் பயணத்தின் ஒரு மைல்கல்.செவாலியர் சிவாஜி கணேசனை மறந்து இத்திரைப் படத்தை நினைத்துப்பார்க்கவே இயலாது. இத்திரைப்படம் திரையரங்கில் வெளியான நாள்,தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் ஒரு பொன்னாள் என்றால் அது மிகையல்ல! 

   இதே புறக்கணிப்பு  கருவுருவாக்கத்தை தாங்கி தமிழில் மேலும் இரண்டு திரைப்படங்கள் வெளியாயின.இதில் அர்ஜுன் நடித்து செல்வாவின் இயக்கத்தில் உருவான 'கர்ணா' எனும் திரைப்படம் தனி மனிதன் ஒருவ னின் புறக்கணிப்பு ஆதங்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது.ஒரு காவல்துறை அதிகாரி யின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று உடல் ஊன முற்ற குழந்தையாய்ப் பிறக்க, சுயகவுரவம் கருதி அக்குழந்தையினை புறக்கணித்த தந்தைக்கும்,அவ்வாறு புறக்கணிக் கப்பட்ட மகன் பின்னர் பெருமைமிகு வழக்கறிஞராகி,முடிவில் அவனைப் புறக்கணித்த தந்தை கொடுங்குற்றவாளிகளை கைது செய்ய மகனின் தயவினை நாட  வேண்டிய  சூழ்நிலையில்,சுயநலத்தின் உறுத்தல்கள்,தந்தையின் முதுமை யை பதம் பார்த்தன.இதைத்தான் 'ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' என்கிறார், சிலப்பதிகாரம் ஈன்ற இளங்கோ அடிகள் .  

   இவற்றையெல்லாம் கடந்து,சமீபத் தில் மாரி செல்வராஜின் இயக்கத் தில் தனுஷ் நடித்து வெளியான 'கர்ணன்',ஒரு வஞ்சிக்கப்பட்ட சமூதாயத் தின் இதிகாசமானது.சாதி வெறி சகதியினால் அலைக்கழிக்கப்பட்டு, காவல் துறையினால் கொடுமைப்படுத்தப்பட்டு,பொறுமை எல்லையி னைக் கடக்க வீறுகொண்டெழும் தாழ்த்தப்பட்ட இனம்,சமூகப்புறக் கணிப்பின் எதிர்வினையாகிறது.பேரூந்துகள் நிறுத்தம் றுக்கப் பட்டு ,கல்வி வாய்ப் புகள் கதைவடைக்க,பிரசவத்திற்கும் தாய்மைக்கும் கூட அங்கீகாரம் கிட்டாத நிலையில்,கர்ணன் எனும் பெயர் சூட்டப்பட்ட, சுயமரியாதை நிரம்பப்பெற்ற இளைஞன் தலைமையில்,மொத்த கிராமமும் எதிர் வினைக்கு மல்லு கட்டுகிறது. 

   காட்சிகள் ஒவ்வொன்றும் நடைமுறை வாழ்வின் துல்லியமான படப் பிடிப்புகளாகி,ஒவ்வொரு வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து, நிழல் மூலம் நிசம் அரங்கேற, பிரமித்துப்போகக்கூடிய ஒரு அற்புத திரைக் காவியமே மாரி செல்வராஜின் 'கர்ணன்'.மையப்புள்ளியை வலுவாகப் பற்றி நகரும் திரை சம்பவங்களில் கர்ணன் எனும் இதிகாச நாயகன்  மட்டுமல்லாது, வேறு  மகாபாரத  பெயர்கள் தாங்கிய துரியோதனன், அபிமன்யு, திரௌபதை,எனும்  கதா பாத்திரங்களும் ஆழமாக இடம் பிடிக்கின்றனர்.

    இதிகாசமும் இயல்பு வாழ்க்கையும் ஒன்றான மனப் பிரமையில் நாமிருக்க,முன்னங்கால்கள் கட்டப் பட்ட கழுதையொன்று அடிமைத் தனத்தை பறைசாற்ற,கிராமத்து சிறுவன் ஒருவன் ஒற்றைக் குதிரை யுடன் போருக்குத் தயாராக,வலிப்பு வந்து  கேட்பாரற்று மாண்டு போன கர்ணனின் இளைய சகோதரி, களிமண்  பொம்மையென அவ்வப்போது காட்சிதர, வித்தியாசமான எதிர்வினைக் காட்சிகளால் வியப்பில் ஆழ்ந்து போகிறோம்.

   தனுஷ் குன்றிலிருந்து அருவியில் குதித்து வாள் கொண்டு இரண்டாக மீன் பிளக்கும் காட்சிமுதல்,இறுதியில் காட்டுமிராண்டிக் கொடுங்கோல னான காவல் அதிகாரியின் கழுத்தை அறுக்கும் வரை,வீரத்தில் அடர்ந்து வலிமையுடன் பயணிக்கிறார்.தனி மனித புறக்கணிப்பே தாங்காது என்றால்,சமூகப் புறக்கணிப்பின் வீரியம் எதிர்வினையாகையில் கண் சிவந்து மண் சிவக்கும் மாட்சிமையே, மாரி செல்வராஜின் கர்ணன். 

  தனுஷ் தலைமையேற்க,லால் பால்,ஜி.எம்.குமார்,சண்முகராஜன் ராஜீஷா விஜயன்,யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியன் {காவல்துறை அதிகாரி யாக என்ன ஒரு அழுத்தமான  கொடூரம்} எல்லோரும் அருமையாக அரங் கேறுகின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசை அடித்தட்டு மக்களின் ஆழ் மனதை அரவணைத்து அங்குலம் அங்குலமாய் சங்கமிக்கிறது."கண்டா வரச்சொல்லுங்க"பாடலின் புதுமையும் ஏற்ற இரக்கமும் சமூக ஏற்றத் தாழ்வினை சூசகமாக இசைப் புரிதலாக்குகிறது.மொத்தத்தில் அடித்தட்டு மக்களின் நியாய உணர்வுகளை குப்பைதொட்டியிலிடும் மனிதகுலமே ஒரு மாபெரும் குப்பைத் தொட்டி எனலாம்.  

  சுயநலம் சுத்தியலாகவும்,சூது யுதம் செய்யும் அடித்தளமாகவும் இருக்குமெனில்,புறக்கணிப்பே அச்சூழ்நிலையில் உருப்பெறும் ஆயுத மாகும்.வேறு கோணத்தில் பார்க்கையில்,புறக்கணிப்பின் எதிர்வினை புரட்சி என அறியலாம்.'சாது மிரண்டால் காடு கொள்ளாது'எனும் பழ மொழிக்கேற்ப,குனியக் குனிய குட்டுப்பட்டு எழுகையில், எதிர் வினைத்தாக்கம் இரட்டிப்பாகும். இதுவே கர்ணனின் கருவுருவாகும் இதுவே கர்மா கற்றுத்தரும் பாடமுமாகும்.

  பின்குறிப்பு:- எனது முன்னாள் மாணவர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று  ஏற்கனவே இவ்வலைப்பதிவில் பதிவிடப்பட்ட The Karna Concept எனும் ஆங்கிலக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இது க்கட்டுரையின் முழுமையான மொழி பெயர்ப்பல்ல. மேலும் ஒரு சில கருத்துகளையும் சேர்த்து,தமிழ் மொழிக்கேற்ப தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ப.சந்திரசேகரன்     

Tuesday, May 18, 2021

The Karnan Concept


      


   The Karnan concept is both a myth and reality like the concept of karma.According to the American spiritual author and motivational speaker Wayne Walter Dyer,"how others treat you is their karma and how you react is your karma "This comes somewhere closer to Newton's third law of motion "For every action there is an equal and opposite reaction".Be it an epic character like the Karnan of the Mahabharatha or any Karnan deprived of parental protection and responsibility as we saw in Arjun's film Karna,or any society left in the lurch by caste stigma and police brutality that we watched in the just released Danush starring Karnan made by Mari Selvaraj,one could see the unfailing course of Karma or the action reaction cycle.

   The Karna concept is nothing but the deep cry and anguish of a soul or the agony of collective consciousness,that has undergone either personal or social abandonment.The abandonment theory includes the cycle of how badly one has been treated and how strongly one reacts.When we talk about this kind of a heart rending subject,it is difficult to draw a line between an epic and a personal or social reality.When a personal or collective human experience inspires everybody in the form of a monumental literay piece or film presentation,it could be called an epic in art form on account of its creative grandeur and narration of events.No epic can happen without the courage of the human soul surcharging the body,to resist injustice by its power of self dignity, paraded through physical might.

   World's greatest epics like Homer's Odyssey and Iliad,Virgil's Aneid and Milton's Paradise Lost written in Greek,Latin and English respectively,are all illustrious samples of the power of the human soul,overwhleming its body,through the dynamism of bravery and sacrifice.The Hindu epics like the Mahabharadha and The Ramayana celebrate the grandeur of the human soul in determining the right and wrong paths of mankind's journey towards the achievement of right goals and atonement of the soul for wrong deeds.

  Both these epics talk about the intervention of God in the process of laying the right exits from the wrong roads of the human journey,through incarnation of God in human form.The epic events narrated by different authors do not seem to agree in their totality in fixing the pointers of what is right and what is wrong.Hence interpretation of the tone of epics of different authors,also carries a symbiotic difference,in tune with the focus on events established by the authors.

   If we take the Karnan character in the Mahabharatha,the one obviously striking point is the exploitation of the vulnerable generosity and charity of the abandoned child of the Sun and Kundhidevi.Being let down by parental responsibility,Karna the forlorn half brother of the Pandavas chooses to be the trusted cousin of the Kauravas.He is by all means right,in teaming up with his wrong cousins,after being wronged by those who gave birth to him and after not being suitably recognized by his half brothers.But the role of God in human incarnation,is on a mission to weaken the physical might of Karna,by plucking out the positives of his soul,purely in order to exterminate the wrongs of the Kauravas.

  In doing this the God incarnation does not fail to acknowledge the guilt of the manipulative course adopted,to enervate the might of the abandoned soul,through backdoor means.This implants the root of the epic deep into the soil,with profound layers of betrayal,to weaken the half brother of the Pandavas,so as to enable them to win over their arch rival cousins,the Kauravas.It could also be interpreted as retribution hitting an unforgivable sin,in the form of the mightiest Karna,putting Kundhi devi and her sons into a demoralising predicament.

  The character of Karnan remains wronged from the beginning till the end.Every epic looks for a cathartic touch.In the Mahabharatha it is the character of Karnan that provides the cathartic component.In this respect,Karna could be seen as outshining the rest of the characters of the epic.Padmini pictures' Karnan' brilliantly exhibited the charisma of this character and in doing this role,Sivaji Ganesan excelled as the truest portrait of the character,to be cherished in audience memory for ever.The release of the film Karnan proved to me a moment of crowning glory for Tamil Cinema and we can hardly visualize the portrait of this epic hero,without fixing the figure of the Chevalier in that frame.  

  Arjun's film Karna directed by Selva,was the tale of a disabled son,abandoned by his cop father due to the fear of disgrace that would fall upon him for being the father of a disabled son.The abandoned kid who was one of the twins born of the police officer,later became a very successful criminal lawyer.As the tables turned the police father had to fall at the mercy of his physically challenged,deserted son,to bring to book a notorious gang of criminals.The film also showed the abandoned Karna joining the wrong side against justice for a while,to avenge his unkind abandonement. However,at the end of the film,the father and son came together,to fight against the wicked block and made their united footprints on the pathway to justice.The film was more an action drama,though it justified the title,by visibly reflecting the abandonment syndrome.

   Karnan of Mari Selvaraj has come out with a mind blowing show of an epic like battle between an under privileged tribal section of a village and the cruelly oppressive'upper castes' and the police.What is unique about the film is the stunning cinematography, photographically travelling into the daily time zone of the tribal routine,with utmost accuracy,subtlety and substance, as passionately as passible.Each character in the fighting group is exsquisitely carved and each actor fills the character, without even an iota of artificiality.The more interesting factor is the big epic names given to the villagers,like Dhuriyodhanan {G.M.Kumar}Abimanyu {Shanmuga Rajan} and Draupathi {Rajisha Vijayan} besides the protagonist Karnan {Danush}, with a deliberate thrust on the Karnan concept as well as the Karma theory. .

  All actors live up to their roles and a special mention needs to be made about Lal Paul for his most dynamic roleplay as the grandsire.Imageries such as a donkey with its front leg in fetters denoting the bondage of the tribal folk,the lone horse groomed by a village urchin as a mode of preparing the village for a war against the oppressing class and a typically rustic doll symbolizing the epilepsy ridden younger sister of Karnan,who is shown as lying down  uncared in the middle of the road,at the initial shot of the film and who is later stated to be dead,all give a grandiose uplift to the film.That bondage and maltreatment of an abandoned section of mankind,could become the death knell for the brutish caste supremacy and police autocracy,is poignantly built up as the cumulative effect of abandonment..

   Natrajan Subramanyan as the Superintendent of police Kannabiran,is menacingly calm and fiendish in his role performance.Santhosh Narayanan's music gracefully travels with the theme and narration of the film and the song "Kanda Varachollunga"is a worthy musical treasure. Danush has ebulliently and naturally carried the whole burden of revolt on his shoulders,starting from the shot showing him jumping from the top of a rock into a running brook for cutting a fish into two equal halves,till the climax, slashing the throat of the devil-like Kannabiran.Denial of livelihood and rightful privileges such as the stop over of buses and deprival of education,are the most inhuman acts of abandonment,that could trigger the action and reaction of the Karma theory.The film beautifully showcases the gist,that when the value of human life is discarded and thrown into the trash bin,entire humanity turns into a heap of garbage.

   Sarting from the epics,down to the day to day survival of ordinary human beings,the implied reality is that, abandanment is the anvil and oppression is the hammer.The greatest lesson from epics and history is that between each hammer and its anvil,weapons are born to take vengeance against the very same hammer and anvil.Here the caste supremacy is anvil,politice atrocity is the hammer and the weapon formed is the revolt.The Karnan concept is thus a kind of turmoil let loose by the voice of the abandoned lot,to be heard loud as the voice of nemesis and justice.In other words,the Karnan theory convincingly coincides with the Karma theory of cause and effect.

                                              ===============0==================  

   

Tuesday, May 11, 2021

தமிழ்திரையில் கடவுள்

"நட்ட கல்லை தெய்வமென்று  

நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொண  என்று 

சொல்லும் மந்திரம் ஏதடா 

நட்ட கல்லும் பேசுமோ 

நாதன் உள்ளிருக்கையில்!

சுட்ட சட்டி சட்டுவம் 

கறிச்சுமை அறியுமோ " 

   எனும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான,சிவவாக்கியர் வடித்த  பழைய கவிதை வரிகளை,கலைத் தாயின் மூத்த பிள்ளை சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தியில் வசனமாகக் கேட்ட நினை வுண்டு.

  "இறைவனை கல்லில் தேடாதே உன் உள்ளில் தேடு"என்ற சிந்தனையை  கவிதைகளாக்கி காலம் வென்ற பாடலிது. கல்லையும் கடவுளையும் அடிப் படையாகக் கொண்டு  இரண்டு மாறுபட்ட கோணங்களில் சிந்தித்து, இரு வேறு கருத்துக்களால்,எவ்வகையிலும் தொடர்பில்லாத இரு திரைப்படங் களில்,மறக்க வொண்ணா பாடல்களாக்கினார் கவியரசு கண்ணதாசன். இதில் முதலில் வெளிவந்த,சிவாஜியின் நடிப்பில் உதயமான மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் நாம் கேட்ட, 

கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் 

கனியாய் கனிந்தவள் தேவியம்மா 

  எனும் வரிகள் மூலம்,கடவுள் கல்லில் தோன்றிய கதையைச் சொன்னார் கவியரசு.ஆனால் அவரே,கடவுள் மீண்டும் கல்லான கதையை,தனது முரண்பட்ட கற்பனை மூலம்,எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த என் அண்ணன் திரைப்படத்தில், 

கடவுள் ஏன் கல்லானார் 

மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே

  எனும் மனக்குமுறலாய் வெளிப்படுத்தினார்.இவ்விரு பாடல்கள் மூலம் மனிதன் மனமுருக வேண்டிடின்,கல்லில் கடவுள் உதயமாவார் என்றும், மாறாக மண்ணில் மனிதம் மடிந்திடின்,கடவுள் எப்படி காட்சியளிப்பார், அவர் சாதாரண கல்லாகத்தானே இருக்க முடியும் என்றும்,சிந்திக்க வைக்கின்றன. 

   இதில் இரண்டாம் பாடல் பராசக்தி வசனத்துடன் நம்மை இணைக்கிறது என்று கூறுவதைக் காட்டிலும், கல்லைக் கடவுளாகக் காண்பதும்,கடவு ளைக் கல்லாக்குவதும், மனிதர்கள் கையில்தான் இருக்கிறது என்தே,  வலுவான உண்மையாகும் .தமிழ் சினிமாவின் இரண்டு தலையாய கதா நாயகர்கள் நடித்த இவ்விரண்டு படங்களின் பாடல் களையும், ஒரே கவிஞர் எழுத, டி.எம்.எஸ் எனும் ஒரே பாடகர் பாட,திரையிசைத்திலகம் கே.வி.மகா தேவன் என்ற ஒரே இசையமைப் பாளர்  இசையமைத்தார் என்பது, இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும். 

  கல்லும் கடவுளும் என்ற சஞ்சலக் கடலை கடந்து,கடவுள் வாழ்த்துக் குரள்களில் கடைசியான, 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 

இறைவனடி சேரா தார் 

   எனும் எளிமையான,ஆனால் ஏற்றமான குறள் மூலம்,கடவுளைக் கடக் காது பிறவிப்பெருங்கடல் நீந்த இயலாது என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர்.'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' எனும் வழக்கு மொழிக் கேற்ப,ஆத்திகரோ நாத்திகரோ,இறைவனை நம்பியோ அல்லது நம்பிக் கையை முன்வைத்தோதான் வாழ்கையினைத் தொடருகின்றனர்.

  கடவுள்மீது நம்பிக்கை கொண்டோர் வழிபாடுகளை முன்னிறுத்தியே எந்த காரியத்தையும் தொடங்குகின்றனர். இந்த நம்பிக்கை அதிக பணம் மூலதனம் செய்து,இலாபம் ஈட்ட முனையும் திரைத்துறைக்கு,ஒரு கட்டாய சடங்காகிறது.வழிபாடு மட்டுமின்றி திரைப்பட தலைப்புகளிலும் பாடல்க ளிலும் கடவுளின் பலத்தை காணமுடிகிறது.கடவுளின் தாக்கம் தமிழ்த் திரைக்கு ஒரு அழுத்தமான முன்னோக்கிய பயணத்தை உறுதி செய்கி றது. 

   கடவுளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் கடவுளின் குழந்தை {1960} கடவுளைக் கண்டேன்{1963 }காசேதான் கடவு ளடா{1972}  கடவுள் மாமா {1974} கடவுள் அமைத்த மேடை {1979} கடவுளின் தீர்ப்பு {1981}கடவுளுக்கு ஓர் கடிதம்{1982}றை எண் 305-இல் கடவுள்{2008}, நான் கடவுள்{2009} ஓ மை கடவுளே {2020} போன்றவற்றை மிகவும் முக்கிய மானதாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.இந்த ல்லா  படங்களுமே கருத்தாழத்திலும் கதைஉருவாக்கத்திலும்,ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டிருந்தன என்பது,படைப்பாளிகளின் தனித் திறமையாகும்.

   தமிழ்திரைப்படப் பாடல்களில் பல்வேறு கவிஞர்களின் மாறுபட்ட கற்பனையும் சிந்தனையும்,கடவுளை நாம் பல்வேறு கோணங்களில் காண ஏதுவானது. அவற்றில் தனித்தன்மைவாய்ந்த பல தரமான பாடல் கள் உண்டு.உதாரணத்திற்கு சாந்தி நிலையம் திரைப்படத்தில் பி.சுசீலா குழுவினருடன் பாடிய, 

"கடவுள் ஒருநாள் உலகை காண தனியே வந்தாராம் 

கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்" 

  எனும் இனிமையான பாடல்,நலம் காக்கும் கடவுளை நலம் விசாரிக்கும் மனித பரிமானதுடன் வெளிப்படுத்தியது."குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று"என்போம் இதைத்தான் கல்லும் கனியாகும் திரைப்படத்தில்  டி.எம்.எஸ் தனது அழுத்தமான ஆண்மைக்குரலில், 

"நான் கடவுளைக் கண்டேன் 

என்  குழந்தை வடிவிலே 

அவன் கருணையைக் கண்டேன் 

ன் மழலை மொழியிலே" 

  எனும் எழில்மிகு பாடலால் இனிக்கச் செய்தார்.இவற்றில் முதல் பாடலை கவியரசு எழுத,இரண்டாம் பாடல் வாலியின் கற்பனையில்  வரிகளாயின.  இரண்டு பாடல்களுக்கும் மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார்.

  காதலின் ஏமாற்றத்தையும் பிரிவாற்றாமையையும் உணருகின்ற ஒரு ஆண்மகன் தன் காதல் விரக்திக்குக் கடவுளைக் காரணம் காட்டுவதோடு நில்லாமல், கடவுளை யே பழிவாங்கத் துடிக்கும் விபரீதமான சிந்தனை யை வெளிப்படுத்திய பாடலே,எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளி யான வானம்பாடி திரைப்படத்தில் கனமாக ஒலித்த, 

"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் 

அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் 

பிரிவென்னும் கடலலையில் மூழ்கவேண்டும் 

அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்" 

என்று தொடங்கி,அத்து மீறிய வெறுப்புடன் கடவுளைச் சாடிய, 

"அவனை அழைத்து வந்து 

ஆசையில் மிதக்கவிட்டு 

டடா ஆடு என்று 

ஆடவைத்து பார்த்திடுவேன் 

படுவான் துடித்திடுவான் 

பட்டதே போதுமென்பான் 

பாவியவன் பெண்குலத்தை 

படைக்காமல் நிறுத்திவைப்பான்" 

  என்ற வரம்பு மீறி வலியுணர்த்திய பாடலாகும்.கவியரசின் அனுபவ பூர்வமான இவ்வரிகளில்,கே.வி.மகாதேவன் தனது தன்னிகரற்ற இசை யால்,கருத்துக்களின் கம்பீரத்தை இரட்டிப்பாக்கினார். 

  இதே காதல் ஏமாற்றத்தினை வஞ்சிக்கப்பட்ட காதலும் இல்லறமும், பெண்மையின் கோணத்தில் மனம் நொந்து மடை திறந்த வரிகளே, இருமலர்கள் திரைப்படத்தில் வாலியின் கைவண்ணத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,  

"கடவுள் தந்த இரு மலர்கள் 

கண்மலர்ந்த பொன்  மலர்கள் 

ஒன்று பாவை கூந்தலிலே 

ஒன்று பாதை ஓரத்திலே" 

   என்று பெண்மனத்தின் ஆழ்ந்த சோத்தினை,பி.சுசீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி குரல்களில், நீங்காமல் நெஞ்சில் பதித்த பாடலாகும்.

  மனிதரில் கடவுளும் மிருகமும் உண்டு என்று கமல் ஆளவந்தான் திரைப் படத்தில் பாடிய பாடல்தான், 

"கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம்
உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்
ஆனால்
கடவுள் கொன்று உணவாய்த் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே!
நந்தகுமாரா நந்தகுமாரா,
நாளை மிருகம் கொள்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?"

  என்ற மனப்போர் மூலம்,மனிதனை முழுமையாய் மிருகமாக்காது, வன்மை தவிர்த்து,அதே நேரத்தில் மிருகவதை புரிந்து,மென்மையாய் அன்பு கலந்து,முரண்பாட்டுச் சிந்தனை முடக்கி,மனிதனுக்கு மீண்டும் கடவுளை மீட்டெடுக்கும் பாடல்.  

  அதே கடவுளை,முதலாளியாக்கிப் பார்த்தார் எம்.ஜி.ஆர் தனது 

விவசாயி திரைப்படத்தில். 

கடவுளெனும் முதலாளி 

கண்டெடுத்த தொழிலாளி 

விவசாயி  விவசாயி 

   எனும் அப்பாடல் எம்.ஜி.ஆரின் பல சமூதாயச் சிந்தனை பாடல்கள்போல் அவரது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.'ஆளவந் தான்' திரைப்படப் பாடலுக்கான கவிப்பேரரசின் வரிகளுக்கு ஷங்கர் இஷான்லாய் இசையமைக்க, 'விவசாயி'திரைப்படத்தின் A.மருதகாசியின் பாடலை டி.எம்.சௌந்தராஜன் பாட, கே.வி.மகாதேவன் வலுவான இசை  ழுத்தம் கூட்டியிருந்தார்.

  மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் பாதையில் கடந்து செல்லும் சம்பவங்களே என்பதை நம்பிக்கையோடு உணர்த்திய வரிகள் தான்,அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடு நிலா எஸ்.பி. பி பாடிய, 

"கடவுள் அமைத்து வாய்த்த மேடை 

கிடைக்கும் கல்யாண மாலை 

இன்னார்க்கு இன்னார் என்று 

எழுதி வைத்தானே தேவன் ன்று" 

  என்ற  மனித வாழ்வு முற்றிலும் கடவுளின்  கணக்கே  எனும் ஆழ்ந்த புரிதல் கொண்ட அற்புதமான பாடல். 

மொத்தத்தில் வள்ளுவரின் கடவுள் வாழ்த்துக் குறள்களில்,  

அக முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு 

   எனும் முதல் குறள்,ஆதியாய் அந்தமாய் கடவுளே என்றென்றும் மனிதம் மேம்படும் முதற்பொருளாவான்,என்று அழுத்தம் திருத்தமாய் வெளிப் படுத்தியது போன்று,தமிழ்த் திரைப்படத் தலைப்புகளும் திரையிசை வரிகளும்,பல்வேறு கோணங்களில் கடவுளை சிசேற்று அரங்கேற் றியுள்ளன. 

                                     ===================================           

  

Thursday, May 6, 2021

Homage to a 'Face Breaking' Comedian.

   




   Second level comedians are many in Tamil cinema.Of these Pandu used to occupy a special space.He had been doing the rounds nearly for five decades,getting introduced to Tamil Cinema in the role of a student in Devar films' Manavan.Unlike his brother Idichapuli Selvaraj, who used to play notable character roles,Pandu did both comedy and character roles with a unique body language.In comedy roles his face would excel breaking its muscles into various proportions and his voice matching those lines drawn in different modes, almoast like the alphabets of facial language.His tone delivery would successfully fall in line with his face,spontaneously down loading crates of laughter.

  Recently I saw Sundar C's famous film Ullathai Allitha in You tube and went on laughing in a non stop spree,on seeing the comedy ruckus that Pandu and Senthil would display with a bomb filled bouquet meant for killing their employer Manivannan,on the instruction of their boss,again Manivannan.{in dual roles}Ultimately, the bombed bouquet will bounce on them, ending up on a farcical note.

   Pandu has acted in a number of films of which  besides Ullathai Allitha,Kadhal Kottai, Gokulathil Seethai,Murai Maapillai, Sundara Travels,Jodi,Lootty,Unnaithedi,James Pandu, Unnai Ninaithu,Ezhaiyin Sirippil and Ghilli need a special mention.Be it the role of a college Principal{as Hitler in Murai Maapilaai}or a cop{in several films}or an astrologer or doctor he played his role with an absorbing grasp of comedy sense or sobriety,needed for the context.He was always a highly acclaimed second level comedian like Madhan Bob who is known for his serial laughter loading the audience mood too,with serial enjoyment.

  The pandemic fatally knocking at the doors of known and unknown persons,has been making a deplorable havoc.When it comes to disease and death celebrities and creative artists are no exception.We have lost another endearing face of Tamil cinema in this list.Apart from being an actor Pandu was also a designer artist with his creative sparks penetrating into the creditable formation of the flag for the AIADMK and in doing this he would certainly have been closer to the heart of Tamil Cinema's all time mass hero and mass leader MGR.It would be a happy day,if the cruel Covid 19 stops its destructive vigour soon and draws its curtains once for all. May Pandu's soul rest in peace.  

Saturday, May 1, 2021

Trade Unionism in Tamil Cinema

                                                   



                                              "Inquilab Zindabad"

                                    {1st May 2021}

    According to A.Philip Randolph,the famous American trade union leader,trade unionism is the essence of social uplift.It needs a great sense of humanism to pave the path for social progress with a quest for equality,liberty and fraternity.Wherever there is social exploitation there is need for a trade union.The fruits of labour are possible only through the power of collective bargaining.Oppression and curtailment of rights are the worst curse of humanity.

  A safe and healthy working environment,fair pay and justifiable treatment of every worker,are the paramount principles,for which any trade union exists.Literature and cinema have thrown substantial light on this subject of labour unions.Tamil cinema not only has its several wings of trade unions but has also dealt with this subject in a few films,since its years of inception.

  One of the earliest Tamil films that focused on the rights of the working class was Irumbuthirai{1960}produced and directed by S.S.Vasan under the Gemini Studios' banner.This memorable film depicted Sivaji Ganesan in the role of a trade union leader fighting for the legitimate rights of the workers of a spinning mill.S.V.Rengarao played the role of the mill owner with a shady past and with a lupine mindset to divide and suppress the rights and claims of the working class.A poignant black and white film,Irumbuthirai signalled the dawn of light for the betrayed sections of society raising their banner of revolt against the blood sucking poles of wealth,so as to attain their legitimate objectives of revolt.

  It was the mass star MGR who dedicated his entire role plays for the progress of the working class and the down trodden.Once he became an acknowledged independent hero,he began to invest his heart and soul for donning only the good samaritan roles, that secured him the most popular place both in cinema and politics.Almost in all his films,there was a revolutionary song with a clear cut message to the exploting lobby to correct its foul means,lest it should be suitably dealt with.

  Moreover,in a majority of his films MGR led a crusade against the oppression of the poor sections of society. He was a fisherman leader in Padahotti,a rebelling rickshaw puller in Rickshakaran,a labourer in Thozhilaali and the forceful voice of labour in films like Uzhaikkum Karangal,Oorukku Uzhaippavan,Thanippiravi,Vivasaayee  Chandrodhayam,Urimaikural and Meenava Nanban.One could not say that there was an organized trade union movement in all the films listed above.But MGR took up specific roles meant for raising all rightful issues concerning the working class.One of the prominent themes of an MGR film was the fair distribution of wealth between the rich and poor and he reflected this ideology even when he donned the role of a rich estate owner in films like Idhyakani.

  But the classic Tamil film about trade unionism was Thulabaram a remake of the Malayalam film with the same title.It was a heart rending narration by the famous Malayalam film maker A.Vincent and the indisputably realistic portrayal of roles by A.V.M.Rajan and Sharadha.The film factually presented the intricacies of trade unionism with its inherent elements of brutality and betrayal,propagated by the agents of capitalism.Righteousness and the legitimate claims of labour rights,could hardly sustain against the force of money and muscle power,easily available for the industrial management lobby.Murder of a hard core trade unionist and its aftermath of taboo and poverty stories that engulf the routine of the trade unionist's wife and children of the trade unionist,were portrayed with stark blows of realism,in that most memorable award winning black and white film. 

  There was yet another beautiful film released in the mid Seventies starring Sivaji Ganesan and Gemini Ganesan as soul mates and prototypes of exemplary friendship. The film bearing a suggestive title 'Unakkaaga Naan'was the Tamil remake of Namak Haraam a Hindi block buster film,with Amitab and Rajesh Kanna playing as bosom  friends.Interestingly,one of the two friends is the son of a rich mill owner and the other is a poor guy.The latter who joins the mill with the objective of crushing the trade uniion movement in order to help his friend and his millionnaire father,slowly understands the agonising plight of the workers and decides to help the workers instead of his friend.Change of ideologies based on one's personal experience changes the goals and behaviour of individuals.This is what we saw in the role play of Gemini Ganesan in Unakkaga Naan.

   Following this turn of events,the mill owner plans to kill his son's friend without the knowledge of his son.Later when the son {Sivaji Ganesan}comes to know the truth that his friend was killed by a murderous game hatched by his father,he owns the cause of his friend's murder and courts imprisonment much to the dismay and agony of the crooked mill owner,played by Major Sundarajan with vulpine vigour.The film was both a precious tale of friendship and a fine narration of the immovable thorns in the lives of the working class.

  Gemini Ganesan did another role as the powerful voice of the downtrodden in the film Ezhai Pangalan.While Rajinikanth did an action drama bearing the title Thudikkum Karangal in which he focussed on the rights of the estate workers, Kamalahasan did a similar role in the film Naanum Oru Thozhilaali fighting for the welfare of the workers of a factory that originally belonged to his father but was usurped by a villain who also manipulated the accidental death of the hero's father. 

    Incidentally,both the films were directed by C.V.Sridhar and in both the films Jaishankar played the villain.P.Vasu's films like Mannan and Uzhaippali starring Rajinikanth and Coolie that cast Sarathkumar in lead role,depicted stories firming up the rights of tha labour unions.The other movie with the theme of trade unionism was Enna Mudhalaali Sowkyama,in which a woman{K.R.Vijaya} spearheaded a steadfast battle against the greedy and manipulative powers of wealth.

  Though there are many more movies with trade union tints in their story line,Tamil cinema's ever historic films celebrating trade unionism were Irumbuthirai, Thulabaram and Unakkaaga Naan.Of the three,Thulabaram will be ever cherished in audience memory for its ground to earth base of theme,narration charactersation and agonising portrayal of the tragic events concerning the truest voice of trade unionism. Right to work and the right to the benefits of one's work are the kernal principles of Trade Unionism.Long live the Trade Union movement.Inquilab Zindabad!

                                        =============0==============