பெண்மையின் போர்வாள் . .
அறிவும்
ஆற்றலும் அமைந்தொரு அகரமாய்,
எறியவும்
எதிரியின் கணைகளை ஏற்கவும்
மறவரின் மனபலம்
மதியுடன் கொண்டநீ,
குறையாக்
கம்பீரத்தில், அலைகடல் ஆனாய்!
திறனுடன்
ஆளுமை திரையில்,அவையில்
நிறைவுடன்
புகுத்தி, நெஞ்சினில் நின்று,
சிறப்புடன்
செல்வாக்கு நிரம்பப் பெற்று,
பிறப்பின்
புகழில் பெருமிதம் பெற்றாய்!
உறவுகள்
மக்களென உறுதியுடன் உணர்ந்து
சிறகுகள்
விரித்தவர் சிந்தையில் பறந்தாய்!
மறவா
மக்களின் மாபெரும் பலமாகி,
இறவா
அன்பினில் இரண்டறக் கலந்தாய்.!
வெறுமை விதையினை
வலிகளாய் விதைத்து,
இறைவன்
மலரடியில் இணைந்தாய் இன்று.
ப. சந்திரசேகரன்.
No comments:
Post a Comment