"டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப்பாரு தங்கமே தில்லாலே"
என்று உலகின் மோசமானப் போக்கை நையாண்டி செய்வதும், {'அன்பு எங்கே' பாடியவர், டி.எம்.சௌந்தராஜன் }
"காலம் போற போக்க பார்த்தா யாரு பேச்சை கேட்பது
கவலை பட்டு என்ன பண்ண ஆனவழி ஆகுது,ஆனவழி ஆகுது "
என்று காலத்தின் குழப்பச்சூழலில் அத்துமீறிய விரக்தியில் மனம் போவதை யும், {'உலகம் இவ்வளவுதான்' பாடியவர் டி.எம்.எஸ் }
இதற்கு முற்றிலும் மாறாக,
"எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழவைக்கும்
உன் இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்"
என்று காலத்தின் போக்கிற்கு நம்பிக் கைக் கல் நடும் போக்கும்,
"கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா"(பணம் படைத்தவன் படத்தில் டி.எம.எஸ் பாடியது)
என்று போகும் பாதை சரியானதாக இருக்கவேண்டும் என்று சொல்லி நல்வழிப்பாதையை சுட்டிக்காட்டுவதும், போகிற போக்கில் நாம் கேட்டு ரசித்த, 'போகும் வழி' திரைப்பட பாடல்களாகும்.
"போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்ன புரிஞ்சுக்காம போகிறீயே நீ
என் சின்ன ரங்கம்"
என்று போகிற போக்கில் நேசிக்கிற பெண்ணை கலாய்ப்பதும் {'மக்களை பெற்ற மகராசி'திரைப்படம் பாடியவர்கள் T.M.S &P. பானுமதி }
"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ"
என்று தெனாவெட்டோடு காதலியை stalk செய்வதும் {'இதயக்கமலம்' பாடியவர்கள் P.B. ஸ்ரீனிவாஸ்,P. சுசீலா}
"இந்த பெண் போனால் அவள் பின்னாலே
என் கண்போகும்".('எங்க வீட்டுப் பிள்ளை' பாடியவர்கள் டி.எம்.எஸ் மற்றும் P.சுசிலா) என்றும்,
"மெல்லப்போ மெல்லப்போ
மெல்லியலாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ
சொல்வதை கண்ணால் சொல்லிப்போ"
('காவல்காரன்'பாடியோர் டி.எம்.எஸ்& P.சுசிலா)
என்றும்,காதலிபோகும் பாதை எல்லாம் காதலனின் பார்வை பயணிக்கும் பொல்லாப் போக்கையும்,காதல் பயணத் தின் களிப்பூட்டும் திசைகளாய்க் காண லாம்.
"போனாலே போனாலே
ஒரு பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல்
போனாலே"
என்று திருமணத்திற்கு முன் காதலி இறந்து போனதாக நினைத்துப்பாடு வதும்,{'நீதிக்குப்பின் பாசம்' பாடியவர், டி.எம்.எஸ் }
"போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா"
('பாலும் பழமும்' திரைப்படம்: பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ்)
என்று மனம் அங்கலாய்த்து மயானப் பாதையில் போவதும்,வேறு சில திரைப் பாடல்களின் போகும் வழிப்பாடல்களா கும்!
"போறாளே பொன்னுத்தாயி
பொலபொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு"
{படம் 'கருத்தம்மா' பாடியவர் ஸ்வர்ண லதா }என்று பெண்மையின் சோகப் பயணத்தில், மற்றவர் மனம் உடன்போவ தும்,
"இதயம் போகுதே எனையே பிரிந்து"
என்று காதலின் பிரிவை மனம் பின் தொடர்ந்து போவதும், {புதிய வார்ப்புகள் பாடியவர் ஜென்சி}'போகிற போக்கில்' நாம் காணும் வாழ்க்கையின் வேதனைச் சம்பவங்களாகும்!
இவைகளுக்கு இடையே,
"போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்பு கணக்கு"
என்று எகத்தாளமாய்ப் பாடிப்போவதும், {'என் ராசாவின் மனசிலே' படத்தில் கல்பனா ராகவேந்தர் ஆகியோ ருடன் வடிவேலுவும் இணைந்து பாடியது.}
போருக்கு செல்ல புறப்படும் கணவனிடம்,
"போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"
என்று கணவனைப்போக்கவிடாமல் தடுத்துக்கெஞ்சுவதும் {'வீர பாண்டிய கட்டபொம்மன்' பாடலைப்பாடியவர் P. சுசீலா} போகும் பாதையை 'போகிற போக்கில்',தடுக்கும் பாடல்களாகும்.
இந்த போகிற போக்கு வரிசையில் சிலநேரம்,
"போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே!
இறைவன்
புத்தியைக் கொடுத்தானே !
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியை கெடுத்தானே,
மனிதன்
பூமியைக்கெடுத்தானே !''
{படம் 'தாய் சொல்லை தட்டாதே' பாடலைப் பாடியவர் டி.எம்.சௌந்தராஜன்}
என்று இறைவனையே சலித்துக்கொள் வதும் உண்டு'
இந்த வித்தியாசமானப் பதிவில் பாட லாசிரியர்களும் இசையமைப்பாளர் களும்'போனால் போகட்டும் போடா'என்று போகிற போக்கில் புறக்கினிக்கப்பட்ட தற்கு மனம் மன்னனிப்பைதேடிப் போகி றது. இது போன்று போகிற போக்கில் பயணித்த இன்னும் எத்தனையோ பாடல் கள் தமிழ்திரையில் உண்டு.பாடல்களின் திசைநோக்கி செவியும் மனமும் சேர்ந்து "போவோமா ஊர்கோலம்"னு போய்க் கொண்டே இருக்கட்டும்!
=================0=================