திரைப்படங்களை பொறுத்தவரை மூன்றெழுத்து இயக்கத்தை மூச்சாகக் கொண்டிருந்த,மூன்றெழுத்து நாயகர் எம்.ஜி.ஆர்,தனது திரைப்படங்கள் பலவற்றில்,அவ்வப்போது அறிவுரைப் பாடல்களைப் புகுத்திவந்தார்.இந்த மூன்றெழுத்து புரட்சி நடிகர் நடித்த,மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய முதல் அறிவுரைப் பாடல்,'மலைக்கள்ளன்' திரைப்படத்தில் டி.எம் சௌந்த ராஜன் குரலுயர்திப்பாடிய.
'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்று தொடங்கி,
"தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
உரில் கஞ்சிக்கில்லை எனும் சொல்லினை போக்குவோம்.........
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆன கலைகளை தீராது பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக திரட்டுவோம்!"
எனும் முற்போக்குச் சிந்தனை போற்றும் அறிவுரைப் பாடலாகும். இச் சீரான வரிகளை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் தமிழ்திரையின் தர முயர்த்தும் கவிதை யாக்கினார்.
இதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் 'திருடாதே' திரைப் படத்தில் "திருடாதே பாப்பா திருடாதே"என்று ஆரம்பித்து, "திருடராய்ப்பார்த்து திருந்தா விட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது"
என்று திட்ட வட்டமாக எழுதிவைத்தார். எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டையார் எழுதிய இன்னுமொரு கலங்கரை விளக்கமான பாடலே,'அரசிளங் குமரி' திரைப் படத்தில் கேட்ட,'சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்று ஆரம்பித்து,"ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி;
காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னிவளரணும்
தன்மான உணர்ச்சி" என்றும்
"தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து நாயகர்,சமூகத்தையும் மனித வாழ்க்கையையும் மேம்படுத்தும் கருத்துக்களை,தீப்பிழம்புகளின் வீரியத்துடன்,தனது திரைப்பட பாடல் வரிகளில் புகுத்துவதில்,கண்ணும் கருத்துமாய் இருந்தார்.அவ்வாறு அவருடைய சமூக அக்கரையில் எழுந்த பாடல் வரிகளே 'நம்நாடு' திரைப் படத்தில்,
இந்த நாடே இருக்குது தம்பி "
என்பதாகும். இப்பாடலில் இடையே வரும் கீழ்க்காணும்,
"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
....................................................................................
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்"
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்" எனும் வரிகள் அமரத்துவம் பெற்றவையாகும்.
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே;
வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே.
"ஒண்ணா இருக்க கத்துக்கனும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்"என்பதுமாகும்.
இதே ஒற்றுமையை முன்னிறுத்தி எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இடம்பெற்ற,
"ஒருதாய் மக்கள் நாமென்போம்;
ஒன்றே எங்கள் குலமென்போம்"{'ஆனந்த ஜோதி' }மற்றும் 'பணக்கார குடும்பம்' திரைப்படத்தில் ஒலித்த,
"ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே"போன்றவையாகும்.
வாழ்க்கையில் நம்பிக்கையின் அவசியத்தை 'பலே பாண்டியா' திரைப்படத்தில் பரவசமூட்டிய
"வாழ நினைத்தால் வாழலாம்;
வழியா இல்லை பூமியில்", என்ற அறிவுபுகட்டும் பாடல் வரிகளும்,பின்னர்'சாந்தி' திரைப்படத்தில் சந்தோஷ கனவுகள் படைத்த,
வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்து பாட வேண்டும்"
எனும் சபையேறும் வரிகளுமாகும்.
வாய்மையின் வழித்தோன்றலை,சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில் வெளியான 'ஆண்டவன் கட்டளை'திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன்"ஆறு மனமே ஆறு"எனும் பாடலில் ஆழ்ந்து அடர்ந்து, பின்வரும் வரிகளில் சத்திய சங்கமத்தின் புரிதலோடு,
"உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
"ஓஹோஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று
உருப்படவாருங்கள்"
என்று கேலிக்குரலுடன் தொடங்கி,தனது கற்பனைக் களஞ்சியத்தின் கவின்மிகுச் சொற்களால்,தொடர்ந்து பின்னி பெடலெடுத்த,
"அழுகிப்போனால் காய்கறிகூட சமையலுக்காகாது
"நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு,ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா"
என்று பாட்டெழுதி,அதில்,
"உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து".
என்ற நம்பிக்கை ஊற்றையும் நிறையச் செய்தார். 'என் அண்ணன்' திரைப் படத்தில் நெஞ்சைக்கவர்ந்த இன்னுமொரு பாடல் தான்''கடவுள் ஏன் கல்லானார்' என்று மனம் நொந்து, அதிலும்
"நெஞ்சுக்கு தேவை மனசாட்சி – அது
நீதி தேவனின் அரசாட்சி"
என்ற தரமான வரிகளை உட்புகுத்தி வாய்மையை வேரூன்றச் செய்தது. இக்கருத்தை மையமாக வைத்து சிவாஜி கணேசனின் 'சொர்க்கம்' திரைப் படத்திற்காக கண்ணதாசன் வடிவமைத்த வரிகள்தான்,
எல்லோரும் தாங்க மாட்டார்"என்று தொடங்கி,
"விதியென்று ஏது மில்லை
வேதங்கள் வாழ்க்கையில்லை
உடலுண்டு உள்ளம் உண்டு
முன்னேறு மேலே மேலே"
இவையனைத்துமே,கண்ணதாசனின் கவித்துவத்தை வெளிப்படுத்தும், காலத்தை வென்ற வரிகளே!
அறிவார்ந்த சிந்தனையின் அவசியத் தையும்,ஆணவத்தின் அவலத் தையும் வெளிக்கொணர்ந்த மற்றுமொரு மறக்க முடியா எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல் வரிகளே'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தில் வாலி எழுதி டி.எம்.எஸ் பாடிய,
"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை"
எம்.ஜி.ஆரின் பல்வேறு பாடல்கள்,வாழ்க்கைப்பாதையின் வாசமிகு கலாச்சார மலர்களின் அங்கீகாரமாகத் திகழ்ந்தன.அப்படி நாம் உணர்ந்த பாடல்தான்,'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய
"கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?"
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்" என்றும்,மேலும்
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்"
போன்ற வரிகளால்,முறையான வாழ்க்கைப் பாதையின் வெள்ளோட் டத்தை, அனைவரும் வியக்கும் வண்ணம் வாரித்தந்தன.
எனவே தமிழ்திரையின் நெறியியல் பாடல்கள் பலவற்றிற்கும் குரலால் குணம் சேர்த்தவர் ஒற்றைப்பாடகர் டி.எம்.சௌந்தராஜன் ஆவார்.இவரே இரண்டு மாபெரும் நடிகர்களின் பாடல் பொழிவின் வெள்ளமானர்;வேகமானர்; விவேகமானர்.
இவர்கள் இருவரிடம் இருந்து சற்றே விலகி, 'விளக்கேற்றியவள்'{1965}திரைப் படத் தில் டி.ஆர்.பாப்பாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய அறிவுரை பாடலே,
"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு .......
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலை கொடு
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு ............
மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா"
எனும் ஆலங்குடி சோமுவுவின் அறிவார்ந்த வரிகள்.
கடந்த நூற்றாண்டின் கலாச்சார மற்றும் மனிதவள பாதையில்,தொழில் நுட்பத் துறையின் அசுரவேக வளர்ச்சி வழி மறிக்க,தமிழ்த்திரை படைப்பாளிகள் நெறியியல் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளி, இன்றைய காலகட்டத்தின் நடைமுறை தேவைகளை அனுசரித்து,கதைக்க களத்தையும்,இசை பரிமாணங்களையும் வித்தியாசமாக புகுத் திக்கொண் டிருக்கின்றனர்.இருப்பினும்,கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி யில் பிறந்து,தமிழ் மொழியையும் தமிழ்த் திரையையும் உணர்வுபூர்வமாக நேசித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு,"பழமை பெருசுடா பேராண்டி பழமை பெருசுடா"என்று நெஞ்சு நிமிர்த்தி பழமையின் உன்னதத்தை சற்றே இறுமாப்புடன் சொல்லிக்கொண்டே இருக்கலாமே, என்று தோன்றுகிறது. அதில் தப்பேதும் இல்லையே!
No comments:
Post a Comment