"ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கே சொந்தம்"
நீதிபதி.
"சொந்தம்!பட்டினிப் புழுக்களாய் துடித் தோம் துவண்டோம்; அப்பொழுதெல்லாம் சொந்தம் கொண்டாட வரவில்லை இந்த அரசாங்கம்"
சமூகத்தால் முற்றிலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாதம்.
கலைஞரின் எழுதுகோல் கூர்மையில் பலரின் மனசாட்சியை உலுக்கிய இந்த 'பராசக்தி' திரைப்பட வசனம் 'சொந்தம்' எனும் சொல்லின் அர்த்த மற்ற தன்மை யை உறுதி செய்தது. சொந்தம் என்பது சொர்க்கமாவதும் சோதனைக்களமாவ தும், அவரவரது சொந்த அனுபவங்களின் சாட்சியக் கூற்றே.
"சொந்தம் எப்போதம் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது"
என்று 'பிராப்தம்'திரைப்படத்தில் டி.எம் சௌந்தராஜனும் P.சுசிலாவும் பாடிய, சொந்தத்தின் நிரந்தரத்தை நெஞ்சில் நிறுத்திய பாடல் ஒருபுறமிருக்க,
"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமு மில்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை"
என்று சொந்தத்தை சிறுமைப்படுத்தி, நன்றியுள்ள உயிர்களே நலிவுறா சொந்த மெனும் 'படிக்காத மேதை' திரைப்படத் தில் அதே டி.எம்.எஸ்,சூலமங்களம் ராஜலட்சிமியுடன் சேர்ந்து,சோகத்தை பகிர்ந்த பாடலும் உண்டு.
வாழ்க்கைத்துணையே ஆயுள்வரை நிலைத்திடும் எனும் வகையில், 'மாலை சூடவா'திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய,
"யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா"
எனும் பாடல் ஒருபுறமிருக்க,
"பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?
பூவுக்கும் தேனுக்கும் பூச்சிந்தும்
போதைக்கும் ஈக்கள் சொந்தமா"
எனும் வினா எழுப்பும் டி.எம்.எஸ்ஸும் எல்.ஆர்.ஈஸ்ரியும் பாடிய'மாட்டுக்கார வேலன்' திரைப்படப் பாடலும் உண்டு.
'சொந்தம்' எனும் சொல்லை வேடிக்கை யாக விளக்கி,முடிதிருத்தும் நிலைய நாவிதனாக'ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்' திரைப் படத்தில் தோன்றிய,எம்.ஆர.ராதா வுக்காக ஜி.கே.வெங்கடேஷ் பாடிய,
"சொந்தமுமில்லே பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
ஆஹா மன்னருமில்லே
நாங்கள் மந்திரியில்லே
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்"
என்று சொந்தங்களை சட்டை செய்ய விடாமல்,மனசை இலேசாக்கும் பாடல் ஒரு தனி ரகம்.
சொந்த உடலையே பறக்கணித்து,தன் உடன் பிறப்புக்களுக்காக தன் வாழ்வை யே தியாகம் செய்த பெண்ணொருத்தி, அதே உடன் பிறப்புகளால் கண்டுகொள் ளப்படாது, நோய் வாய்ப்பட்டு படுக்கை யில் கிடக்கை யில்,அவளுக்கு பரிதாபத் துடன் உணர்வு களால் தோள் கொடுக்கும் பாடல்தான், 'குல விளக்கு' திரைப்படத் தில் டி.எம்.எஸ் பாடும் பாடலுக்கு இடையே வரும்
"நீ சிந்திய ரத்தத்தை சீரழித்தே பல சொந்தம்
வளர்ந்ததம்மா
சொந்த ரத்தத்தை சிந்திக்கும் வேளையிலே
உந்தன் சித்தம் தளர்ந்ததம்மா"
எனும் வேதனையில் ஊறிய வரிகள்.
இதே வேதனையை வெளிப்படுத்தும்' எங்க ஊர் ராசா'திரைப்படத்தில் இன்னொரு டி.எம்.எஸ் பாடிய பாடலின் வரிகளே,
"பானையிலே சோறிருந்தா பூனைகளும்
சொந்தமடா
சோதனையை பங்குவச்சா சொந்தமில்லே
பந்தமில்லே"
எனும் வாழ்க்கை எதார்த்தத்தை வலியுறுத்தும் பாடல்.
இதேபோன்று உடன்பிறப்புகளால் முற்றிலும் வஞ்சிகாகப்பட்ட ஒரு மூத்த சகோதரனின் மனக்குமுரலை வெளிப்படுத்தியது,ரஜினியின்'தர்மதுரை' திரைப்படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் வேதனையை அனுபவித்து பாடிய,
"அண்ணனென்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்றபின்பு
உறவு கிடக்குபோடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி"
எனும் அற்புதமான வரிகள்.
அதே நேரத்தில் சொந்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வரிகள் 'மௌன ராகம்'திரைப்படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய, பலர் மனதிலும் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக் கும்''மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நேரமில்லையோ''பாடலில் இடையே தோன்றும்,
''சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல் பூவே
உன் வாழ்க்கை தான் என்ன
சொல்''
எனும் மகத்தான வரிகள் மனதில் வேரூன்றி நின்றன.
இந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த வேடிக்கையான மற்றுமொரு பாடலே'சமையல்காரன்'திரைப்படத்தில் மு.க.முத்து பாடிய,
"சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப் பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது ஒங்க அன்பத் தானுங்க"
எனும் பேச்சு மொழிப் பாடல்.
மேற்கண்ட பாடல்களில் 'பிராப்தம்' 'படிக்காத மேதை'.குலவிளக்கு'எங்க ஊர் ராஜா''மாட்டுக்கார வேலன்'மற்றும் 'ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்'ஆகிய படங் களின் பாடல்களை கண்ணதாசன் உருவாக்கியிருந்தார்.'மாலை சூடவா' &'மௌன ராகம்' பாடல்களை வாலி யும்,'தர்மதுரை' பாடலை பஞ்சு அருணாச் சலமும் எழுதியிருந்தனர்.
'பிராப்தம்''எங்க ஊர் ராஜா''சமையல் காரன்' பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் தனித்தும்,'ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்'படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் இணைந்தும் இசையமைத் திருந்தனர் 'குலவிளக்கு''படிக்காத மேதை''மாட்டுக் கார வேலன்'திரைப் படங்கள் திரை யிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் தேர்ந்த இசையில் தேனூறியது'மாலை சூடவா' திரைப்படத்திற்கு விஜயபாஸ்க ரும் 'மௌனராகம்''தர்மதுரை'திரைப் படங்களுக்கு இசைஞானியும் செவிக் கினிய இசைதந்தனர்
'சொந்தம்' எனும் சொல்லை தலைப்புகளாய்த் தாங்கிய 'சொந்தம்' 'யாருக்குச் சொந்தம்' 'சொந்தக்காரன்' போன்ற திரைப்படங்களும் உண்டு
சொந்தங்களில்லாத வாழ்க்கை அனாதைகளின் ஆழ்கிணறுதான் என்றா லும், சொந்தம் ஆழமான அன்புடன் அரவணைக்கும் பட்சத்தில், சுருக்குப் பையாகவும் பகைமை பாராட்டும் நேரங் களில் சுருக்குக் கயிறாகவும் மாறிவிடு கிறது என்பதைத்தான் தமிழ்த் திரைப் படப் பாடல்கள் பலவும் சுட்டிக்காட்டு கின்றன.
==============0==============
சொந்தங்களின் பகைமையினால் உருவாகும் சுருக்குக் கயிறுகள் சட்டென உயிர் கவ்வும். நம்பிக் கழுத்தறுபடும் வேதனைக்கு எல்லையே இல்லை .
ReplyDelete