Saturday, December 7, 2024

வீராச்சாமி &,சாமிக்கண்ணு..

   



    'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' எனும் ஓர் பழங்கூற்று தமிழ் மொழியில் உண்டு.இப்பழஞ்சொல்லை நடைமுறை யில் நிரூபிக்கும்  வண்ணம்,தமிழ்த்திரை யில் சிறு வேடங்களில்,குறைந்த காட்சி களில் தோன்றி,திரையை மட்டுமல்லாது திரைப்படம் காண்போர் நெஞ்சங்களை யும் கொள்ளையடித்த ஒரு சில நடிகர்கள் உண்டு.

   ஓமக்குச்சி நரசிம்மனின் அருகம்புல் தலை முடியம்,லூஸ் மோகனின் இயல் பான சென்னைத் தமிழ் சறுக்கல்களும், குமரிமுத்துவின் ஒக்கிப்புயல் சிரிப் பொலியும்,இயல்பான கடுகின் காரத்தை தமிழ்த்திரையில் வெளிப்படுத்தின.

    இந்த வகையில் காலஞ்சென்ற முதுபெரும் சொற்பக் காட்சி நடிகர்களான வீராச் சாமியும் சாமிக் கண்ணுவும், எண்ணையில் தாளிக்கப் படும் கடுகின் ஓசையாய் தமிழ்த்திரையில் தனியிடம் பிடித்தனர்.1959இல் 'நாலு வேலி நிலம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஏ.கே.வீராச்சாமி தென்னிந்திய திரைப் படச்சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார் என்பதும், நடிகர் திலகத் தின் நாடக சபையில் அங்கம் வகித்தார் என்பதும்,குறிப்பிட்டு பதிவிடப் படவேண் டிய விவரங்களாகும்.

   குரல் கனத்த ஏ.கே.வீராச்சாமி,இயக்கு னர்  திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ண னின் கற்பகம்,செல்வம்,குறத்திமகன், சின்னஞ்சிறு உலகம்,சித்தி,குலமா குணமா,கண்கண்ட தெய்வம், தசாவதா ரம், போன்ற திரைப்படங்களில் குறிப்பிட் டுச் சொல்லும் வேடங்களில் நடித்திருந் தார்.

 எம்.ஜி.ஆரின் 'பணக்காரக்கூடும்பம்' மற்றும்'பணம் படைத்தவன்'ஆகிய இரு படங்களில் அவர் தோன்றியிருந்தாலும், சிவாஜியுடன்,அவர் நடித்த நிறை குடம், லாரி,டிரைவர் ராஜாக்கண்ணு,குலமா குணமா, சங்கிலி,பாதுகாப்பு,போன்ற படங்களை எல்லாம் கடந்து,பாரதி ராஜா வின்'முதல் மரியாதை'திரை ப்படத்தில் அவர் சிவாஜியை நோக்கிக் கேட்கும் 'எசமான் எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாக னும்' என்ற முறுக்கேறிய ஒற்றை வரி வசனத்தால்,உரமேறி உயர்ந்து நிற்கிறார்.

  ஏ.பி.நாகரஜனின் வா ராஜா வா,திரு மலை தென்குமரி,அகத்தியர், போன்ற திரபை்படங்களும் அவர் நடிப்புத்திறனு க்கு நன் மதிப்பு தேடித்தரும்.கிட்டத்தட்ட ஐந்நூறு தமிழ்த் திரைப்படங்களுக்கு மேல் நடித்த ஏ.கே.வீராச்சாமி,தனது ஒற்றை வரி.வசனத்தால் முதல் மரியாதை பெருகிறார்.கமலின் வசூல்ராஜா எம்.பி. பி.எஸ்தான் ஏ.கே.வீராச்சாமியின் இறுதிப்படமாகும்.

   வீராச்சாமிக்கு மூன்று வயது முதியவ ரான சாமிக்கண்ணு,வருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே,'புதுயுகம்' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்தி ரையில் தடம் பதித்தார்.வீராச்சாமியைப் போலவே அவரும் எம்.ஜி.ஆரின் 'சபாஷ் மாப்பிள்ளை'மற்றும்'உரிமைக்குரல்'ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்  தார் என்பதோடு,சிவாஜியின் வெற்றிப் படங்களான,கர்ணன்,எங்க ஊர் ராஜா, பட்டிக்காடா பட்டனமா,சவாலே சமாளி,  பொன்னூஞ்சல்,ராஜபார்ட் ரெங்கதுரை,  மனிதனும் தெய்வமாகலாம் ஆகியவற் றில் சிறப்புப் பங்களித்தார்.

   சாமிக்கண்ணுவும்,கே.எஸ்.கோபால கிருஷ்ணனின்,சித்தி,செல்வம், குறத்தி மகன்,சின்னஞ்சிறு உலகம்,ஆகியவற் றில் வீராச்சாமியுடன் இணைந்து நடித்த தோடு நில்லாது,அந்த இயக்குன ரின் படங்களான பேசும் தெய்வம்,பணமா பாசமா,குலவிளக்கு,போன்றவற்றிலும் இடம் பெற்றிருந்தார்.மேலும் சாமிக் கண்ணு கே.பாலச்சந்தரின் நகைச்சுவை சித்திரங்களான பாமா விஜயம்,அனுவி ராஜா அனுபவி, ஆகிய வற்றிலும்  பாலச்சந்தரின் ட்டினப்பிரவேத்திலும்,ஸ்ரீதரின் பூஜைக்கு வந்த மலர்,கொடி மலர்,காதலிக்க நேரமில்லை,போன்றவ ற்றிலும்,இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும்,உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுக்கள்,ஜானி,நெஞ்சத்தகை் கிள்ளாதே,ஆகியவற்றிலும் நினைவில் தங்கும் வண்ணம் நடித்திருந்தார்.

    வீராச்சாமியைப்போலல்லாது சாமிக் கண்ணுவின் குரல் தழதழத்து,குழைந்து, சில நேரம் நகைச்சுவையோடும் சில  நேரம் சோகத்தில் நனைந்தும்,பயணித்து நெஞ்சை அள்ளும். அப்படி மறக்கமுடியாக் காட்சியாய் அமைந்ததுதான்,ரஜினியின் 'சிவா' படத்தில் தொழிளாளர்கள் விருந் தில் கலந்து கொண்டு,திடீரென்று ரஜினி யின் வீட்டில் பணம் காணாமல் போய்  ஒவ்வொருவரையும் பரிசோதிக்க தொழி ளாளர்கள் முடிவு செய்ய, சாமிக்கண்ணு மறுத்து இறுதியில். வலுக்கட்டாயமாய் பரிசோதிக்கப்படுகை யில் அவர் வயிற்றில் தன் பிள்ளை களுக்காக பதுக்கிவைத்திருந்த உணவுப் பண்டங் கள் சிதறுகையில்,சாமிக்கண்ணு வுடன் சேர்ந்து திரையரங்கில் அனைவரும் கண் கலங்கியிருப்பர்.

   இதற்கு மாறாக,'சகலகலா வல்லன்  திரைப்படத் தில் கமலின் தந்தை சின்னய்யாப் பிள்ளையாக ஒரு கலக்கு கலக்கியிருப்பார்,சாமிக்கண்ணு. சாமிக் கண்ணுவின்,இதர குறிப்பிட்டு பட்டியலிட வேண்டிய திரைப்படங்கள்,நான், ஜீவனாம்சம், பொண்ணுக்கு தங்கமனசு, அன்னக்கிளி,கவிக்குயில், பாலூட்டி வளர்த்தகிளி,வண்டிச்சக்கரம், என் கேள்விக் கென்ன பதில் போன்றவை  ளாகும். 

  மொத்தத்தில்,என்பத்து நான்கு ஆண்டு கள் வாழ்ந்த வீராச்சாமியும், தொன்நூற்று நான்காண்டுகள் வாழ்வு கண்டசாமிக் கண்ணுவும், வெள்ளித்திரையில் மின்ன  லெனத் தோன்றி,விண்ணை முட்டும் வீரிய நட்சத்திரங்களாயினர்.வளமையின் மிடுக்கிலும்,வறுமையின் கிடப்பிலும், வாழ்க்கைப்பாதையின் எதார்த்தங்களை வண்ணக்கோலங்களாக்கினர்.மிட்டா மிராசு போலும்,மிரண்டுபோன அடிமை களாகவும்,மிதமிஞ்சிய திறமையுடன், கதா பாத்திரங்களாக மட்டுமல்லாது,நிச வாழ்க்கை மனிதர்களாய் என்றென்றும் நெஞ்சில் நிறைகின்றனர்,இவ்விரு நடிப்பு வித்தகர்கள்.

        ============= = 0==============

1 comment:

  1. *பொதுவாகக் கருவூலங்களைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். கருவூலமே நம்மைத் தேடி வந்து நம் வாசல் தட்டினால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்*

    ReplyDelete