1} அரசியல் ஞானத்தின் ஆத்மகாரகர்
2} ஆட்சிக் களத்தின் ஆருடம் அறிந்தவர்
3} தமிழை முரசென ஒலிக்கச் செய்தவர்.
4} தானே கற்றுத் தானே தெளிந்தவர்.
5} திராவிட மரபின் மரபணு வானவர்.
6} தீர்க்கமாய் முடிவுகள் எதிலும் எடுப்பவர்.
7} சமூக நீதியில் சந்நிதி கண்டவர்.
8} சான்றுகளோடே சபையுறை ஆற்றுபவர்.
9} முதுமையின் முனகலை முடக்கிப்போட்டவர்.
10} மூன்றெழுத்து இயக்கத்தின் முழுமூச்சானவர்.
11} குரலை உயர்த்தாது குறளை உயர்த்தியவர்.
12} கூர்ந்த அறிவினில் கோபுரம் போன்றவர்.
13} தொன்மைத் தமிழின் செம்மொழி கண்டவர்.
14} தோல்வித் தொடரில் துவண்டு விழாதவர்.
15} ஒற்றைச் சொல்லில் இரட்டுற மொழிபவர். 16} ஓய்விலா உழைப்பினை உதிரமாய்க் கொண்டவர்.
17} தமிழ்ப் பசி தீர்ப்பதில் அட்சய பாத்திரம்.
18} தாளடி நடவென தாள்களை ஆய்பவர்.
19} நினைவுகள் காப்பதில் நிகரற்ற கணினி.
20} நீள்புவி போற்றிடும் காவியக் கலைஞர்.
No comments:
Post a Comment