Tuesday, December 22, 2020

தமிழ்திரையிசை வரிகளில் மாய,மயானக் கோலங்கள்

   'வாழ்க்கையும் வைராக்கியமும்'என்ற தலைப்பில் ஒரு உரைநடை புத்தகம் நான் இளங்கலை வகுப்பு  படிக்கையில் கல்லூரி பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டதாக நினைவு. பொதுவாகவே மனித வாழ்வில்,'பிரசவ வைராக்கியம்,'மயான வைராக்கி யம்'எனும் வழக்கு மொழிகள் பிரபலமாக பயன்படுத்தப்படுவதை பார்த்திருக் கிறோம்.

   இந்த வழக்குமொழிகளில்'மயான வைராக்கியம்',மரண நிகழ்வுகளா  மனித உணர்வுகளைத் தாக்கி பின்னர். கார்மேகம் போல் கலைவதுண்டு. மரணம்,மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தி,உறவுகளில் சொத்துத் தகராறு களின் காரணமாக எழும் பகைமை நிலைப் பாடுகளை,சற்று நேரத்திற்கு பின்னுக்குத் தள்ளி,பணத்தைக் காட்டிலும் மனித நேயமே பெரிதென்று நினைக்கச் செய்து, பின்னர் ஈமச் சடங்குகள் முடிந்த வுடன் மனம் ஒரு குரங்காக, பணத்தை நோக்கி பயணிப்பதே,மயான வைராக்கிய மாக கருதப்படுகிறது. 

   துளிர்ப்பதும் உதிர்வதும் இயற்கையின் இயல்பு;துளிர்த்ததும் வளர்ந்ததும் நிலைத்திடும் என்பது,மனிதனின் கனவு.மயானப்பாதை என்றுமே மனிதன் விரும்பி பயணிக்கும் பாதையன்று.ஆனால் தோல்விகளின் தழும்புகள்,மாயையில்  வலுப்பெற்ற சிந்தனைகளாய் வாழ்வினை புரட்டிப்போட்டிட,'தேவதாஸ்'திரைப் படத்தில் C.R. சுப்புராமனின்  இசையில்,கண்டசாலா முழங்கியதுபோல"உலகே மாயம் வாழ்வே மாயம்"என்று வெறுமையின் கம்பீரத்தை வீரியமாக்குகிறது.  இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி *பின்னணி இசை*{Background score } மைத் திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.   

  இதே வெறுமையினை விஸ்வரூபமாக்கி, அழுத்தமாகவும் ஆழமாகவும் கே.ஜே யேசு தாஸின் அதிர்வுக்குரலால் வெளிப்படுத் திய பாடலே, 

"வாழ்வே மாயம்! 

இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், 

தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? 

நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?" 

எனும் கண்ணில் நீர்மல்கச்செய்  காவிய வரிகள் கொண்ட  பாடலாகும்.  

"தாய் கொண்டுவந்ததை, 

தாலாட்டி வைத்ததை, 

நோய் கொண்டும் நேரமம்மா"

   என்ற வரிகள் செவிகளில் விழுகை யில்,நம் இதயம் தவித்துத் துடிப்பதை, கங்கை அமரனின் இசையில்,வாலியின் வேதனை வரிகளால்,சாகா நிகழ்வாக்கிய பாடல் இதுவாகும். 

  இதே கே.ஜே.யேசுதாஸின் ஒப்பற்ற குரலில் வைரமுத்துவின் வரிகளை உருக்க மான இசையில்'நீங்கள் கேட்டவை' திரைப்படத்தில் கேட்டு மெய்மறந்ததே,கீழ்க்  காணும் பாடல்! 

"கனவுகாணும் வாழ்கையாவும் 

கலைந்துபோகும் கோலங்கள்; 

துடுப்புகூட பாரமென்று 

கரையைத் தேடும் ஓடங்கள்" 

என்று தொடங்கி,இடையில்,  

"பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி 

இருக்கின்றதென்பது மெய்தானே!" 

  எனும் உண்மையை உள்ளடக்கிய இப்பாடல்,என்றும் நினைவில் தங்கிடும்,  மேனியெனும் மெய்யாய்!அதன் பொய்யாய்! 

மனித வாழ்வின் மாய நிலையினை உணர்த்திய இன்னுமொரு பாடலே, 

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா;

ஆறடி நிலமே சொந்தமடா.


முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா;

கண் மூடினால் காலில்லா கட்டிலடா.


பிறந்தோம் என்பதே முகவுரையாம்;

பேசினோம் என்பதே தாய்மொழியாம்.

மறந்தோம் என்பதே நித்திரையாம்;

மரணம் என்பதே முடிவுரையாம்."  

  எனும் கவிஞர் சுரதாவின் மகத்தான வரிகளை,சீர்காழியாரின் வெண்கலக் குரலில் வி.குமாரின் மென்மையான இசையோட்டத்தில்,'நீர்க்குமிழி'திரைப்படத்தில் கேட்டு, வெறுமையில் மனம் ஆழ்ந்ததே,அகம் நிறைந்த அனுபவமாகும் .  

   மனித வாழ்வின் மாய நிலைகளையும் வெறுமையையும்,கவியரசு கண்ணதாசன் அரும் புலமையுடன் வெளிப்படுத்திய அழகான திரைப்பாடல்கள் பலவும்,அவரது இமயக் கற்பனையின் விளைவாக உருவெடுத்த,ஞானப் பால்குடிக்கச் செய்யும் அட்சய பாத்திரமாகும்.குறிப்பாக,'பாத காணிக்கை'திரைப்படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் அமைந்த,  

"வீடு வரை உறவு;வீதிவரை மனைவி; 

காடுவரை பிள்ளை ;கடைசிவரை யாரோ" 

 எனும் வரிகளில் தொடங்கி பின்னர், 

"விட்டுவிடும் ஆவி;பட்டுவிடும் மேனி; 

சுட்டுவிடும் நெருப்பு;சூனியத்தின் நிலைப்பு" 

என்றும், 

"சென்றவனை கேட்டால்,வந்துவிடு என்பான்; 

வந்தவனைக் கேட்டால்,சென்றுவிடு என்பான்" 

  என்று,மயானக் காற்றால் மூச்சு முட்டச் செய்யும் டி.எம்.சௌந்தராஜனின் பாடல், என்றைக்கும் இதயம் கனக்கச் செய்வ தாகும்.

 இதேபோன்று 'அவன்தான் மனிதன்' திரைப்படத்தில் எம்.எஸ்.வி இசையில் கவியரசு புனைந்த, 

"மனிதன்  நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று; 

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று."  

எனும் பாடல் டி.எம்.எஸ் ஸின் உச்சக் குரலால் உளம் நிறைந்தது.

   மாயையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தின் பலவீனத்தை,கவியரசு பிரபலப்படுத்திய பாடல் தான்,'நெஞ்சில் ஓர் ஆலயம்'திரைப்படத்தில் P.B ஸ்ரீனி வாசின் காந்தக்குரலில் ஒலித்த,

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,தெய்வம் ஏதுமில்லை; 

நடந்ததையே நினைத்திருந்தால்,அமைதி என்றுமில்லை" 

எனும் அமோகப்பாடலாகும்.மெல்லிசை மன்னர்களில் மேன்மைமிகு இசையில், இப்பாடலுக்கு இடையே வரும், 

"எங்கே வாழ்க்கை தொடங்கும் 

அது எங்கே எப்படி முடியும் 

இதுதான் பாதை,இதுதான் பயணம் 

என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்; 

மாறுவதை புரிந்துகொண்டால்,மயக்கம் தெரிந்துவிடும்" 

   எனும் வரிகள்,மனித வாழ்வின் யதார்த்த நிலையினையும்,மாயவலையில் சிக்கித் தவிக்கும் மானுட துன்பத்தையும் ,சொற்களால் துல்லியமாய் படம்பிடித்துக் காட்டியது. 

  சிலநேரங்களில் மரணம்,மனிதனின் திருந்திய நற்குணங்களுக்கு சான்றுகூறும் என்றும்,நாம் நினைப்பதுண்டு.இப்படி ஒரு கருத்தைத்தான்,கவியரசு 'இருவர் உள்ளம்'திரைப்படத்தில், 

"ஏனழுதாய் ஏனழுதாய் 

என்னுயிரே ஏனழுதாய்" என்று தொடங்கி, 

"மரணம் வந்தால் தெரிந்துவிடும்; 

நான் மனிதன் என்று புரிந்துவிடும்;  

ஊர் சுமந்து போகும்போது, 

உனக்கும்கூட விளங்கிவிடும் " 

   என்று எழுதியிருப்பார்.திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில், டி.எம்.எஸ் குரலினாலும் ,சிவாஜியின் உணர்வுபூர்வமான நடிப்பினாலும்,இப்பாடல் நம் உள்ளங்களில் ஒரு தனி  டம் பிடித்தது என்று சொல்லலாம்.  

   கவியரசின் இன்னுமொரு மயான கீதம்தான் எம்.ஜி.ஆரின் 'முகராசி' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,

"உணடாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு;  

இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு; 

கொண்டாடும் போது ஒரு நூறுபேறு; 

உயிர் கூடுவிட்டு போகையிலே கூட யாரு."

  எனும் மிகச் சாதாரணமாக,வாழ்வின் உண்மையை உரைத்த உன்னத பாடல்.  மரணச் சுமையை மயானம் வரை கொண்டு சென்று இறக்கிவிடுவோருக்கு,நன்றி பாராட்டும் விதத்தில் அமைந்ததுதான், எம்.ஜி.ஆரின்'சங்கே முழங்கு' திரைப் படத்தில் இடம் பெற்ற,

"நாலு பேருக்கு நன்றி; 

அந்த நாலு பேருக்கு நன்றி; 

தாயில்லாத அனாதைக்கெல்லாம் 

தோள்கொடுத்து தூக்கிச் செல்லும், 

நாலு பேருக்கு நன்றி." 

  எனும் டி.எம்.சௌந்தராஜன் பாடிய, மனிதநேயப் பாடல். இப்பாடலையும் கவியரசு இயற்ற,அதற்கு. எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்திருந்தார்.

   வழக்கமாக,கதாநாயகர்கள்தான் தத்துவ பாடல்களை தங்கள் நெஞ்சில் தாங்கி, கேட்போர் நினைவுகளில் நீங்காமல் தங்கச் செய்வார்கள்.அதுவும் எம்.கே.தியாக ராஜ பாகவதர்,பி.யு.சின்னப்பா,டி ஆர் மகா லிங்கம் காலத்திற்குப் பிறகு,எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ,ஜெமினியோ சொந்தக்குரலில் பாடியதில்லை. 

   ஆனால்,ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய 'இரவும் பகலும்' திரைப்படத்தில், வில்லன் வேடம் அதிக திரைப்படங்களில் தரித்த எஸ்.ஏ.அசோகன் பாடிய,பின்வரும் பாடல், நம்மில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யிருக்கும்.ஆலங்குடி சோமு எழுதிய,

"இறந்தவனை சொமந்தவனும் இறந்துட்டான்; 

அத இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்." 

எனும் அப்பாடல்,டி ஆர் பாப்பாவின் இசையில்,அசோகனின் அபாரக் குரலில்,  வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

  மரணமும் மாயையும் சமத்துவத்தின் சாயல்கள்.ஏற்ற தாழ்வுகளின் பொய்முகங் களை கிழித்தெறியும் கீறல்கள். அனைவ ரும் அறிந்த,ஆனால் மனிதமனம் என்றைக் கும் ஏற்க மறுக்கும் இந்த  உண்மைகளை, 'படையப்பா' திரைப் படத்தில் அமைந்த  கவிப்பேரரசின் ஒரு பாடல்,மிக அற்புதமாக வெளிப்படுத்தியது. ஏ.ஆர்.ரெஹ்மான்  இசையில்,மனோ & Febi Mani பாடிய, 

"ஹோ ஹோ ஹோ கிக்கு ஏறுதே" 

 என்று தொடங்கும் அப்பாடலில் இடையே வரும் 

"கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே;     

தங்க பசுமம் தின்னவனும் மண்ணுக்குள்ளே."  

 எனும் வரிகள் மயான சமத்துவத்தின் மேன்மையை,உரக்க வெளிப்படுத்தின.

   இருப்பினும்,இந்த சமரசத்தின் சாராம் சத்தை 1956- இல் கே.ஏ.தங்கவேலும்,   பி.பானுமதியும் இணைந்து நடித்து வெளியான,ஆர்.ஆர்.சந்திரன் இயக்கத்தில் உருவான,'ரம்பையின் காதல்'எனும் திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், அற்புத மாக எடுத்துக்காட்டியது. டி.ஆர். பாப்பாவின் இசையில் சீகாழி கோவிந் தராஜன் மனமுருகிப்பாடிய, 

"சமரசம் உலாவும் இடமே, 

நம் வாழ்வில் காணா, 

சாமரம் உலாவும் இடமே!" 

எனும் அந்த ஏகாந்தப் பாடலுக்கிடையே வரும், 

"ஆண்டி ங்கே? அரசனும் ங்கே? 

ஆவி போனபின் கூடுவார் இங்கே!" 

என்றும், 

"எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு; 

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு" 

  என்றும் இடம்பெறும் வரிகளால்,கவிஞர் A.மருதகாசி,என்றும் தமிழ்த் திரைக் கவிதையின் கலங்கரை விளக்கமாகி றார்.இதுபோன்ற பாடல்களால் தமிழ்த்  திரையுலகு தரமுயன்று,மனித வாழ்வின் மறுபக்கமாகிறது.

   கலகமும் கலக்கமும் நிறைந்த மனித வாழ்வில்,நிழல்தேடும் நெஞ்சங்களுக்கு, மாயையின் மாட்சியினை,மயானத்தின் மாண்பினை,களமிறக்கும் பாடல்கள்,நிழல் திரையின் பிம்பங்களாக மட்டுமல்லாது, வாழ்க்கையின் விழுதுகளுக்கு மரண மெனும் முற்றுப்புள்ளி மூலம்,மாயையினை நிசமாக்குவதே,மயானப் பாடல்களின் நோக்கமாகும்.

   எல்லாற்றிற்கும் மேலாக,மன சஞ்சலங் களையும் களங்கங்களையும் களைந்து, வாழ்க்கையின் நேர்வழிப் பயணத்தை உறுதி செய்வதன் மூலம்,திரைக்கவிதை வரிகளின் மாய,மயானக் கோலங்கள், அழியா கோலங்களாகின்றன.

ப.சந்திரசேகரன் . 

Saturday, December 12, 2020

Two Dad Devoted Sons on the Tamil Big Screen





    This blog has discussed the perfect father figures and formidable mothers of Tamil cinema.It has also thrown light on siblings and twins who occupied the centre stage on the Tamil big screen.The family cluster becomes incomplete without children who become the supreme stars in the cluster. Sons and daughters can be loving and lovable or aggressive and hateful.Destiny is such that noble parents at times get ignoble children and evil parents are blessed with endearing wards.In the midst of this family cluster,there are cases of inconsiderate and disciplinarian parents with their hidden love for their sons,who rightly understand their parents especially their fathers and show them utmost devotion and deep affection.This post deals with two such sons of Tamil cinema,who cannot deviate from the yardsticks of discipline framed by their paternal heads.
  The first of these two dedicated sons,Krishna,was from the rural soil,full of warmth and unsaid adherence to the routine thrust upon him,by his rudely affectionate father.This son's character was precisely carved for actor Bharat in the film 'Em Mgan' directed by Thirumurugan and released in the year 2006.This film maker is the reputed director of very popular television serials with lengthy episodes such as Naadhaswaram,Kuladheivam,Metti Oli and the on going Kalyana Veedu besides a few more serials with shorter episodes.The film Em Makan,got him the best director award from the Tamil Nadu State Government.It was a beautifully made rural family drama,with the excellent acting support from Nasser,Bharat,Saranya,Gopika and Vadivelu.Those who watched the film would have hated Nasser,a very busy local grocer,whose ill treatment of his son was deplorable though his belief in hard work and his practice of the same,was adorable.
  The other film portraying a devoted son was Mohan Raja's 'Santhosh Subramanyan' that hit the theatres in 2008. Mohan  Raja cast his younger brother Jeyam Ravi{The prefix Mohan in Mohan Raja,belongs to the father of both the brothers and the prefix Jeyam represents the first film of Ravi}in the role of Santhosh.Unlike Em Magan,Santhosh Subramanyan was more a street romance culminating into a family fantasy.Here the father-son relationship was totally different.The father decided everything for his son without letting his son decide anything for himself.The problem got aggravated when the son himself chose his life partner.Unusually,as per his son's request,the father even allowed the girl of his son's choice,to stay in their house for a specific period,so that a final decision could be taken about the girl's suitability to their family values.
   Now setting aside the all-inclusive factors of both'Em Magan'and'Santhosh Subramanyan',this article's scope is to assess the quality of devotion of the sons of these two films,to their respective fathers.Krishna of'Em Magan'gulped the enormous insults heaped on him by his father,who once gave his son a new shirt received as gift,letting him believe that his father was so kind and loving that he had bought a new shirt for him.But when he came to know that his father had simply passed on a shirt received  as freebie,he would reach the extremes of depression and remove the shirt.His tough father would one time feed him with dishes that he did not like and next time,would beat him for something or other.
   In between the on going unpleasant routine between the father and son,was the other side of romantic dreams of the son,about his childhood sweet heart,his maternal uncle's daughter.Things would go awry after the naturally vigorous funeral ceremonies of Krishna's maternal grand father, when he and his maternal uncle's daughter were spotted together,during a hide and seek game. There would be a spontaneous family scuffle,in the most conventional rural style and  Krishna's father would angrily leave the village with his family on a hired car.Things would take a further delicate turn,when Krishna's sweet heart would come out of the car boot,on reaching his home.
  On seeing this unpleasant development,the ruthless father would drive the son and the girl out of home.The further developments would throw light on Krishna and his uncle's daughter getting married with the help of his girlfriend's father,who was also his father's auditor. Thanks to the help of the auditor,Krishna would become the manager of a poultry farm and grow in his career,making considerable fortune.Krishna and his wife would be blessed with a kid and his status would grow further,to the extent of owning a house and car.
   The final moments of this wonderful drama were almost an aesthetic treat with absolutely refining touches from the hands of Thirumurugan,with a brilliant display of role delivery by the classic actor Nasser and the most docile Bharat.That Bharat,as Krishna,would unquestioningly sign the retrieval document, concerning a landed property in his name brought by his father, showed his silent obeisance to whatever his father did. 
    However, just before the climax scene,Krishna,who had by then was blessed with a kid and had grown in status, would visit his father with a marriage proposal for his younger sister.When his father simply slighted his proposal,he would ask his father to spare just five minutes for him, by calling him Appa{Dad} and presenting him a brief gist of his love and admiration for his father who had been his exemplary role model,for achieving prosperity through a rigorous routine of unswerving labour.
  Krishna would tell his father that but for his dad he would not have learnt the right way of living, by surmounting all ordeals.In his opinion,his father had lived every minute of his life for the sake of his family and in this process,his loving dad,had beautifully carved his son's character,through self discipline and commitment to ethics of labour and trade.On hearing these words,the outwardly stony father,would stand dumb founded,with his heart melting down for his son,who had adored him instead of hating him,for the harsher ways he had been handled by his father.
   It was the most passionate moment in the film to watch Nasser emotionally breaking down to confess to his wife {Saranya}and his teasing brother in law{Vadivelu}how much he loved his son and how truly his son had understood him.He was in fact waiting for this day to fulfil a penance at the Murugan temple for getting back his son into his arms'fold. 
  Mohan Raja's projection of a devoted son in 'Santhosh Subramanyan' created a totally different experience. Prakash Raj as a rich and responsible father with a lot of concern for all his children, showed his paternal domination by deciding everything for his children with his well set priorities of taste and trends.So it would be quite natural on his part to think that he alone should fix the best girl for his youngest son Santhosh,as he had done for his other sons and daughters.
   But Santhosh had a different frame of mind.He came upon a girl and had his instant flash of love.His close friends knew his love and the girl whom he loved was almost a free bird,with an immaculate sense of men and matters and an innate spirit of sportiness,coupled with innocence. She was a rich find for the hero and he valued her much more than all the riches that his father had amassed.While the hero's father had already fixed his marriage with the daughter of a wealthy man with the concurrence of the son,the latter's mind was inseparably bound to the girl of his own choice.
   As the conflict of interests had to reach the climax with the father declaring that his son's choice was a misfit for the family{despite the fact that the girl had endeared herself to each and every other member of the family}and the son on the other hand affirming his love for the girl, Santhosh had to finally vindicate his stand with a vociferous outburst against his father.This emotional outburst was actually not against his father but an admission of the  excessive interest of his father in the welfare of his children.While Santhosh was ready to adhere to the decision of his father,he would only tell him about what all he had lost in his life,by the decision taken by his father on his behalf,at every stage.
  In this context,Santhosh would also say that even while playing Carom it was his father who would decide which coin his son should move to win the game.The excessive paternal focus of the father had actually deprived his children of their freedom and individuality.It was not just an emotional awakening but a logical and reasoning observation made by Santhosh that made his father realise his failure as a father,which he had so far been thinking as a successful pattern of parenting.
   Both Krishna and Santhosh are the best son models on the Tamil big screen.Both the sons had the right sense of understanding,regarding the genuineness of their respective dads and accepted their unacceptable exterior projections,purely on account of their unfaltering faith in their fathers' fine, inner attributes,brimming with love,concern and commitment towards bringing up their sons,as prospective value additions not only to their families but also to society.In was in this respect both Krishna and Santhosh created a new image of devoted sons and in creating this new image,both Bharat and Jeyam Ravi as actors, dissolved into the character by each one's chosen track of performance.Both Krishna and Santosh will remain as the out standing role models for juvenile celebration of submission and good will,towards a flawless and felicitous family bonding.
                                        ===================================

Wednesday, December 2, 2020

வாசுவும் பாலுவும் பரவசமா பாடினவங்க!


    P.B. ஸ்ரீனிவாசும் எஸ்.பி.பாலசுப்ர மண் யமும்,சுந்தரத் தெலுங்கினை தாய்மொழி யாகக் கொண்டவர்கள்.இவர்கள் இரு வருமே,தமிழ்த்திரை யுலகில் இசைத்துறை யில்,பல்லாண்டு வெற்றிக்கொடி கட்டிய வர்கள். P.B.ஸ்ரீனிவாஸ்,பாலு அவர்களை விட பதினைந்து ஆண்டுகள் மூத்தவர். அவர் தமிழில் பாடிய முதல் பாடல்,'ஜாதகம்' எனும் திரைப் படத்தில் R.கோவர்தனம் இசையில் ''மூட நம்பிக்கையால் பல கேடுவிளையும்''எனும் பாடல். 

   P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களை'வாசு'என்றும் எஸ்.பி.பியை'பாலு'  என்றும்  செல்லமாக  மனதில் கொண்டு,இப்பதிவை காண்போம். வாசுவும் பாலுவும் ஒரே தாய் மொழியைக் கொண்டிருந்தாலும்,பாடகர்கள் எனும் வகையில் இவர்கள் இருவருக் கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.'பிரேம பாசம்' திரைப்படம் படத்தில் எஸ்.ராஜேஸ் வரராவ் இசையில் வாசு பாடிய"அவன் அல்லால் புவி மீது,ஓர் அணுவும்  அசை யாது" என்ற பாடல் தொடங்கி,பலப் பல பாடல்களில் நாம் கேட்டு  மெய்மறந்த, மிருதுவான அதிர்வுகளை உள்ளடக்கிய  அவரின் குரலில்,ப்போதுமே  ஒரு காந்த சக்தி உண்டு.

   ஆனால் பாலுவின் குரல் பதுங்கும்; பாயும்."பாடும்போது நான் தென்றல் காற்று" {நேற்று இன்று நாளை}என்றும்"ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்"{தெய்வ வாக்கு}என்றும் பாட்டைப்பற்றி தனது பாட்டிலேயே, அமைதியையும் ஆர்ப்பரிப்பை யும்,தன் ஒற்றைக்குரலின் பல்வேறு பரிணாமங்களால்,வெளிப்படுத்தக்கூடியவர் பாலு. 

   "நிலவே என்னை நெருங்காதே"{ராமு} என்று பாடினார் வாசு.பாலுவோ    எம்.ஜி.ருக்காக முதன் முதலில் பாடிய பாடலே,"ஆயிரம் நிலவே வா"{அடிமைப் பெண்}என்பதுதான்.மேலும் அவர் நிலவை வரவேற்று, "நிலாவே வா செல்லாதே வா"{மௌனராகம் }என்றும்,"வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே"{மெல்லத் திறந்தது கதவு} என்றும்  பாடி, இசையால் நிலவுடன் ஐக்கியமானார்.

   வாசு பெண்ணைப்பற்றி"காலங்களில் அவள் வசந்தம்"{பாவ மன்னிப்பு}என்று பாடினால் பாலு"அவள் ஒரு நவரச நாடகம்"{உலகம் சுற்றும் வாலிபன் }என்று பாடுவார். வாசு"ரோஜா மலரே ராஜகுமாரி"{வீரத் திருமகன் }என்று காதலியை வாழ்த்தி மனம் மகிழ்ந்தால்,பாலு "காதல் ரோஜாவே!எங்கே நீயெங்கே,கண்ணீர் வழியுதடி கண்ணே " {ரோஜா }என்று சோகமழை பொழிவார்.

  "போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்?"{சின்ன தம்பி }என்ற பாலுவின் எழுச்சிக் கேள்விக்கு, வாசு "போவோம் புது உலகம் காண்போம் மதி மயக்கம்"{ வீர அபிமன்யு}என்று,  வருக்கு இருபத்தைந்தாண்டு முன்ன தாகவே,பதிலளித்திருந் தார்."எத்தனை எத்தனை இன்பமடா;இவை எல்லாம் உனக்கே சொந்தமடா"{யாருக்குச் சொந்தம்}என்று  வாசு மன நிறைவில்,மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பாடினால், பாலுவோ" என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு"{Love Today}என்று இன்ப வெள்ளத்தில் பாடித் துள்ளுவார்.  

   வாசு "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்"{போலீஸ்   காரன் மகள்}என்று விடுகதை விடுத்தால், பாலு"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நேரமில்லையோ"{மௌன ராகம்}என்று விரகதாபத்தை வெளிப்படுத்தி,மனம் குமுறுவார்.வாசுவின்''அவள் பறந்து போனாளே"{பார் மகளே பார்} பாடலும் பாலு வின்"பாடி பறந்த கிளி,பாட மறந்ததடி"{கிழக்கு வாசல் }பாடலும்,பிரிவின் பாரத் தை,ஏமாற்றத்தின் ஆதங்கத்தை,ஒருசேர வெளிப்படுத்துவதாகவே உணருகிறோம்.  

   வாசு"இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்"{ஹலோ மிஸ்டர் ஜமீன் தார் }என்று ஆனந்த பரவசத்தில் திளைத்தால்,"இளமை யெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு"{ பகலில் ஓர் இரவு }என்று ஆனந்தத்தை அணைத்தும்,"இளமை இதோ இதோ; இனிமை இதோ இதோ'' {சகலகலா வல்வன் }என்று உற்சாகத்தில் உலாவியும், கரகோஷ மிடுவார் பாலு. இருவேறு மாறுபட்ட குரல்களால், இவர்கள் படைத்த இசைக்களஞ்சியம்,தமிழ் மொழி உள்ளளவும் இன்பமழை பொழிந்து கொண்டே இருக்கும்! 

   வாசு எம்.ஜி.ருக்கும்,சிவாஜிக்கும்,ஒரு சில பாடல்கள்களைப் பாடியிருந்தாலும், ஜெமினி கணேசனுக்காக அவர் பாடும் போது,அது ஜெமினி கணேசன் பாடுவது போலவே இருக்கும்.ஏ.எம்.ராஜாவுக்கு அடுத்தபடியாக ஜெமினி கணேசன், ஆர். முத்துராமன் போன்றோருக்கு, வாசு வின் குரல் ஒரு வரப்பிரசாதம்,என்றே சொல்ல லாம். அதே போல எம்.ஜி.   ருக்கு ஒரு சில பாடல்களும்,சிவாஜிக்கு நிறைய  பாடல் களும்  பாடியிருந்தாலும், கமலுக்கும், ரஜினிக்கும்,மோகனுக்கும்,பாலுவின்  குரல்  கனகச்சிதமாகப் பொருந்தியது.

    வாசுவின் குரல் மயிலிறகைப்போல் நம் உணர்வுகளை வருடி அமைதியில் மிதக்கச் செய்யும்.அவர் பாடிய"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்"{போலீஸ் காரன் மகள்} "மனிதன் என்பவன்  தெய்வமாகலாம்" &"மயக்கமா கலக்கமா"{சுமை தாங்கி}" "மாலையில் மலர்ச்சோலையில் மது வேந்தும் மலரும் நீயே"& "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே"{அடுத்த வீட்டு பெண்} "சிரிப்புபாதி அழுகை பாதி"{எங்க வீட்டுப் பெண்} "நினைப்ப தெல்லாம் நடந்து விட்டால்"{நெஞ்சில் ஓர் ஆலயம்} போன்ற எண்ணற்ற பாடல்கள், என்றென்றும்தேனி னும் இனிய தெவிட்டாச் சுவையாக, நம் நினைவுளில் வலம் வந்துகொண்டிருக்கும். மென்மையான பாடல்களால்,தமிழிசை யின் தவப்புதல்வனாக விளங்கினார் ஸ்ரீனிவாஸ்.

   எனக்குத் தெரிந்தவரை அவரிடம் உல்லாசத் துள்ளல்கள்கூட எல்லை யைக் கடக்காமல் குரல் கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டிருந்ததாகவே தோன்றுகிறது.அவரின் குரலில் முற்றிலும் மாறுபட்ட,இசை ஆரவாரம் மிக்க ஒரே ஒரு பாடல்,'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் ஒலித்து நம்மை பரவசத்தில் ஆடவைத்த"மாடிமேல மாடிகட்டி கோடி கோடி சேர்த்துவைத்த சீமானே"எனும் அமர்க்களப் பாடலாகும்.   

    பாலுவின் குரலின் ஏற்ற இறக்கங்க ளும்,நெளிவு சுளிவுகளும் அதிர்வு ஆர்ப்பாட் டங்களும்,மிதக்கவும் மிரளவும் செய்யும் குரல் வீச்சும், சொல்லாண்மையும்,என்றைக் கும் சுகமூட்டும் நினைவலைகளே!வாசுவைப்போல் இவரும்,இதயத்தைத் தாலாட் டும்"பச்சைமலைத் தேரு"{கிழக்கு வாசல் }"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே"{புதுப்புது அர்த்தங்கள்} "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" &"கற்பபூர பொம்மை ஒன்று"{கேளடி கண்மணி}"வண்ணம் கொண்ட வெண்ணிலவே"{சிகரம்}போன்ற நெஞ்சைத் தாலாட்டும் பாடல்களோடு நில்லாது, குரல் ஆளுமையால் இசை யுலகின் மூலை முடுக்குகளிலெல் லாம் முழு வீச்சில் பயணித்தார்.

   மொத்தத்தில் வாசுவின் பாடல்கள், விழுந்து வணங்கத் தக்கவை எனில்,பாலு வின் பாடல்கள் ஆரத் தழுவி ஆனந்தப் பரவசத்தை தோற்றுவிக்கக் கூடியவை. சுருக்கமாக ஒரு தமிழ்திரைப்படத் தலைப் பின் பாணியில் கூறவேண்டுமெனில், வாசுவும் பாலுவும் பரவசமா பாடினவங்க! 

  எல்லாவற்றிற்கும் மேலாக B P S எனும் மூன்று ஆங்கில எழுத்துக்களில் இந்த இருவருமே சங்கமித்திருப்பது எத்தனை அற்புதமான ஒற்றுமை! 

நன்றி:-Tamil Movie Poster.com

ப.சந்திரசேகரன் . 


Tuesday, November 24, 2020

Three pages from 1967.



    


   "My Moviminutes"is my lifetime with movies,from childhood to now on;from the touring talkies,to Amazon Release.Film watching  spread over a period of golden times is a matchless mind-blowing experience,woven with slender and beautiful threads of memories of the past and perceptions of the on-going meeting points of the present.Each one has a passion for something special in life that makes their living time,worth its salt. Mine is a quest for the grandeur of the unreal.In fact,at times what is unreal,becomes more heart warming than what is real.

  The dream world has its own delightful characteristics such as,clean story telling, capturing moods of nature and mankind through the camera concepts,composing musical masterpieces closer to one's heart,bringing into life,the varied profiles of mankind through acting and above all, admiring what is to be admired,as a matter of the mind.In this respect,I am just an admirer of the celluloid glories of time and nothing more or less than that.

  From my backfile,I have brought forth to the world view,numerous influences of cinema, especially Tamil cinema on my mind,though the view is yet to reach a significant section of movie lovers. Themes and storylines of films,film making institutions and individuals{ as actors, directors, singers and music makers}have emerged from my memory shelf,to let me masticate the minutes spent in theaters,for nearly six decades.One of my weaknesses is even to remember the names and places of theaters,where I watched some special films.

    To mention a few,I remeber to have watched'Dheiva Piravi'in Thrissur, 'Mani Magudam'in Kumbakonam,'Olivilakku'in Vridhachalam,'Sorgam'in Madurai, 'Engirundho Vandhaal'in Karaikudi,'Oru Vellaadu Vengaiyakiradhu'in Namakkal 'Thirisoolam'in Thuraiyur,'Enakkul Oruvan'in Neiveli,'Ulakam Pirandhadhu Enakkaaga'in Guruvayur, 'Citizen'in Pazhani,'Ramana'in Athur and all the other films either in Mayiladudhurai,or in my native town Tiruchirapalli,or in Chennai . 

  Besides these vagaries,{if one wants to call them so}when I casually perused my memory file,I came upon three pages from 1967, displaying three films{which would have been already discussed in this blog under other heads}that struck a similar cord,on account of their time of release and another most important personal element linked to those films.

  This year pulled out from my memory file,vitally recalls my second year of under graduation,in a prestigious college in my home town.Usually,those were years known for utmost parental control and acute scarcity of money on hand,for any student.Larger families and income restrictions,would have prevented many parents from parting with even small amounts, leave alone any lavish financial bounties to their wards at school,or college.

  With no Television or mobile phones in those days and with only a modest radio set that would bring home film songs and news bulletins, theatre visits were the only entertainment outlets open to the youths. Even for this,one had to undergo a rigorous course of exhortation from the paternal heads,before drawing a couple of rupees from them.   

   But more than authorised film watching,the thrill of skipping an afternoon session in college for the sake of watching a matinee show in a theatre,without the knowledge of parents,was considered to be a revolutionary experience. Such a dereliction from the academic routine, would definitely cause a sense of guilt and distraction from viewing the film,by the frequent pulls of one's conscience.

   Usually,any student would skip an afternoon session,only after confirming the fact that the afternoon classes were not going to be either that important,or inspiring.To me poetry,drama and criticism were important subjects and fiction or prose,was not my preferential food for thought.A Charles Dickens''Oliver Twist' or'Pickwick Papers'or an essay of Robert Lynd or G.K.Chesterton could be read any time and understood by self interpretation.

   But poetry and drama were subjects demanding emotional participation in the class. Competent and committed teachers doing their rounds,unfolding theatrical skills, certainly posed a better alternative than a film show. Thus,many of us would choose to skip only an unimportant afternoon session,for an important matinee show.

   This is how I watched the three films pulled out from my memory folder.Of the three,one was the MGR film'Kaavalkaaran'released on 7th September 1967 and the other two were Sivaji Ganesan films,both released on 1st November 1967.The two Sivaji Ganesan films were A.C.Thirulokchandar's'Iru Malarkal'and C.V. Sridhar's Ooty Varai Uravu.Can any hero release two of his films on the same date now?Such things happened mostly in the case of MGR and Sivaji Ganesan,the two endearing superstars who ruled the Tamil film industry successfully, for nearly three or four decades,besides creating furore among their most dedicated fan base.Moreover,today the number of heroes and the number of films released during a period, would make such a happening highly impossible. 

  Of the three films that overtook my afternoon sessions in college,'Kaavalkaaran'was screened in Jupiter Theaters,Trichy.I was an admirer of both MGR and Sivaji Ganesan though the latter's extraordinary acting skills created an emotional bonding in me.I love'Kaavalkaaran'because of its intricate story line as in the case of many other Sathya Movies'films.Half of the film was shot after MGR was subjected to a gun shot in real life,that considerably affected his speech delivery.As a result of this,MGR's dialogue delivery would be shuttling between the pre and post gun shot eventualities,with absolute clarity in many scenes and a little difficulty in voice mould,in others.The great hero effectively managed this impediment,during the rest of his acting career,as well as in his dynamically evolving political career.

  I enjoyed'Kaavalkaaran'frame by frame, becasue it was one of the excellent films of MGR,with delicate touches of romance between MGR and Jeyalalitha,stunts that included boxing and musical splendour reverberating from the tunes of M.S.Viswanathan.Sivakumar who had acted only in a couple of MGR films,was a sweet addition to the film with his juvenile charm,just blossoming moustache and grumbling tone. M.N.Nambiyar, S.A.Asokan and R.S.Manohar, formed a formidable force of villainy,to be thwarted by MGR in his usual style of chivalry and challenging mode of heroism.This popular MGR film,easily crossed the 100th day in the same theatre. 

   One of my very close friends who is no more today,made me skip an afternnon session and took me to the Prabhath Theatre,Trichy,to watch a matinee show of'Iru Malargal. Even after four weeks of its release,the theatre was hugely crowded and hence we had to struggle to get the ticket and run for our seats.'Iru Malargal' was a unique film of A.C.Thirulokchandar abounding in pangs of a profound romantic experience, between the Chevalier and his best female pair Padmini. Who will forget the peacock dance of Padmini for the most popular T.M.S number "Madhavi Pon Mayiaal Thogai Virithaal" for which Sivaji Ganesan lent his lip movements in perfect sync,as he ever did for any song in any movie.It was a stage competition in college and both Sivaji and Padmini,made the scene last in audience memory,as an immortal film event.

  The entangling story line involving a man caught in between his former lover and present conjugal pair,made the climax a heart throbbing event. Both Padmini and K.R.Vijaya played their roles,with consummate perception of the emotional quotient of their characters and proved to be a perfect foil for the colossal hero Sivaji Ganesan. Nagesh as Principal and little Roja Ramani as the daughter of Sivaji & K.R.Vijaya,did their roles with perfect grasp of dramatic efficacy.I would have seen the film many more times after this errant entry.Every time when I watch it,I turn nostalgic about my student days and the small circle of valued friends that I was blessed with.

  'Ootyvarai Uravu'made by C.V.Sridhar was a fabulous comedy that repeated the success of his earlier hit'Kadhalikka Neramillai'.In'Ootyvarai Uravu',Sridhar teamed up with Sivaji Ganesan, R.Muthuraman and Nagesh with the patronising support of salient character-cum comedy actors like T.S.Balaiah and V.K Ramasamy.If"Madhavi Pon mayilaal"in 'Irumalarkal'was a classical dance show''Thedinen Vandhadhu''in 'Ootivarai Uravu'was a ravishing,novel visual,with the energising dance movements of K.R.Vijaya.

  The rejuvenating song by P.Suseela in M.S.V.'s tremendous musical vibration,made many among the audience dance in the theatre.How breezy the whole narration was with romance and rapturous humour sequences!Chitralaya Gopu joining hands with Sridhar, the most enchantic romace specialist,enriched the quality of comedy on the big screen through several films and 'Ootyvarai Uravu'could be called one of the most felicitous comedies of Tamil Cinema.

  All the song swquences of the film were a marvellous audio visual treat.I skipped another afternoon session in college,to watch this comedy extravaganza at Raja Theatre,Trichy. Today the aforesaid three theatres do not exist.But my memories of them still do exist,not only because of the films I saw there,but also because of their invisble presence,as location identifiers of the rock town.

    This post notifies three afternoon aberrations.Only three instances of violation of student ethics,betraying parental expectations! No doubt, there was a nagging fear,letting my heart beat faster.The fear was due to the unfounded prospect of someone seeing me at the theatre and then informing my parents.But now in retrospect,the fear that surrounded me like the theatre crowd,looks silly and childish.

  Instead,the three'wrongful'matinee shows are getting projected as a paramount,three page singular file of 1967,elegantly rising from the memory folder of mymovieminutes blog. This post doesnot and need not imply any mood of compunction or tone of confession.Contrarily,it is a confirmation of the fact,that the three cheers of my student delinquency,resulted in a lasting celebration of'hidden hours', surmounting the gains of listening to six hours of prosaic and fictional pastime at college.   

                                    ++++++++++++++++++++++++++++++++ 

Friday, November 13, 2020

A Praiseworthy Bravo.


 


   'Soorarai Potru' {Praise the Brave}is a poignant narration of a larger vision,to bring all the underprileged sections of society to have access to the flying experience both as a necessity and a fulfilment of social obligation.Sutha Kongara who made films like Drohi and Irudhi Chutru,has come out with a genuine cry for an egalitarian achievement,so as to reduce the contemptuous gap between the haves and havenots.

  Tamil cinema has been travelling on this line for quite some time,focusing on the innate longing of the underdogs,to reach the next levels in life,through competitive surival programmes,besides exposing the spikes put by the privileged wolves,to quell such longings.Movies like Kala,Irudhi Chutru,Bigil and many more,would belong to this category.Here,the aspiration of the rustic,down trodden,reaches the height of making the ground meet the skies.

     Suriya's emotive vibrations always belong to an exemplary category.The struggles that he displays at an airport to buy an air ticket to see his bed ridden father awaiting his death,reveal his tremendous anguish born of deprivation of the right to occupy an already less quoted economy seat on a flight,for which he has the cash,but not for the last minute inflated tariff.It is this crucial moment which also deprives him of seeing even the dead body of his father,despite making multi travel modes to reach his home town,that forces him to think of making flight travel economically viable to all.Thus a personal ordeal becomes an inspiration for a common agenda,to make air travel affordable to all sections of people.

    The scenes of narration are mixed,front and back,along with the lyrics of many winged minds and the musical tunes rightly mixed up to the contextual calculations in narration.G.V.Prakash Kumar's music,not spoiling the lyrical richness reflecting the robust vibes of the rural soil,deserves a special pat.Aparna Balamurali as Bakery Bommi,is a fascinating foil for Suriya,with her number of broken marriage proposals matching the number of failures of Suriya,to start an aviation company.Urvasi usually known for her comedy flair does a magnificent job,while mourning aloud,the death and funeral of her husband,which happened during the helpless absence of her son.Whatever be the political side of Karunas,he has always proved to be a compact comdedian cum character actor, since the days of Bala's Nanda.Of late,his acting style has become a bit sobre and this sobriety brings out his intrinsic acting potential.

   Be it a butterfly or a sparrow a skyward journey is always an enchanting experience.The human passion for flying is a universal reality but the hero's passion in 'Soorarai Potru'is not one for flying but to make the need and experience of flying,as a product of low cost aviation.As the lyrics of the last song imply,he brings the skies within the arms'reach of the common man through his concern and love for the havenots.His radio interview in one scene,exhibits beautiful thoughts such as the people who are used to looking up at the skies in awe and admiration,are not in a position to look downward upon the earth from the skies,through a flying experience.

  Sutha Kongara who hails from the Mani Rathnam school,makes it a point to present the cinematic events as an exposition of collective emotions,rather than making it an individual's quest for a social benefit.That is why a theme fit for documentary presentation,has crossed its exclusive barriers,to become an enhanced course of celluloid events,involving characters who share the spirit of the struggle,to achieve the common goal of making air travel accessible to one and all,both in terms of money and pleasure.Every one of us would like to fly at least once in their life time.In this particular aspect,'Soorarai Potru'shows the possibility factors,through a Silver Screen experience.Perhaps a theatre watch of the film,would have brought at least this silver screen experience in flying,to the reach of more number of people.

Wednesday, November 11, 2020

தமிழ்த்திரையின் புராணப் புதல்வன்

   
















    தமிழ்த்திரை உலகம் பலமான படைப்புத்திறன் கொண்ட பல்வேறு இயக்குனர் களை சந்தித்திருக்கிறது.சமூகம்,காதல்,இல்லறம்,குடும்பம்,குற்றப்பிரிவு,வரலாறு, போன்ற வெவ்வேறு வாழ்வியல் நடைமுறைகள் குறித்த திரைப் படைப்பாளிகளின் கற்பனை மற்றும் படைப்பாற்றல் கண்டு,ஒரே மாதிரியான வியப்பையும்,பாராட்டு தலையும் திரைப்படம் காண்போரும் திரைப்பட ரசிகர்களும் முழுமையாக வெளிப் படுத்தியுள்ளனர்.

   மாறுபட்ட படைப்பாளிகளுக்கிடையே,தமிழ் கலாச்சாரத்தையும்,மரபுகளையும், புராணங்களையும்,ஆழ்ந்து ஆர்ப்பரிப்போடு  நேசித்து,பல்வேறு திரைப்படங்களை, எழுத்தாளராக,இயக்குனராக,தயாரிப்பாளராக, நடிகராக,நான்கு திசைகளில் நின்று தொழுது,'திரை'கடலோடிய தெவிட்டா தமிழின்,பன்முக பிரம்மாண்டமாக,நம் நினைவுகளில் என்றென்றும் கொடிகட்டிப் பறப்பவர்,ஏ.பி.நாகராஜன் ஆவார். 

   இருபத்தைந்து திரைப்படங்களை இயக்கி,அவற்றில் சில திரைப்படங்களை தானே'விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்'எனும் பெயர்கொண்ட நிறுவனத்தால் தயாரித்து, இருப்பது ஏழு திரைப் படங்களுக்கு கதை எழுதி,எட்டு திரைப்படங்களில் நடித்த ஏ.பி நாகராஜனின் கலைத்துறை அர்ப்பணிப்பு,காலப்பெட்டகத்தின் கவின்மிகு 'கண்காட்சி'யாகும்.அவர் திரைக்கதை மட்டுமே எழுதிய'நல்ல இடத்து சம்பந்தம்' 'மக்களைப் பெற்ற மகராசி''நீலாவுக்கு நெறஞ்ச மனசு''அல்லி பெற்ற பிள்ளை' 'நான் பெற்ற செல்வம்''பாவை விளக்கு''தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' போன்றவை கடந்த நூற்றாண்டின் பெருமைமிகு பொக்கிஷங்களாக விளங்கிய தமிழ் மண்ணின் பண்பாடு,மற்றும் கலாச்சார கோபுரங்களாகும். 

    ஸ்ரீ லஷ்மி பிக்செர்ஸ் 'வடிவுக்கு வளைகாப்பு'விஜயலக்ஷ்மி பிக்செர்ஸ்'நவராத் திரி'ஸ்பைடர் பிக்சர்ஸ்'குலமகள் ராதை'கஜலட்சுமி பிலிம்ஸ்,குருதட்சணை' ஜெமினியின்'விளையாட்டுப்பிள்ளை'போன்ற காதல் களிப்பு சம்பந் தப்பட்ட  நளின மான கதை வடிவங்கள் கொண்ட திரைப் படங்கள் மட்டுமல்லாது, காலம் வென்ற ஒரு இதிகாச காவியமான'தில்லானா மோகனாம்பாள்'எனும் ஒப்பற்ற திரைப்படத் தையும் இயக்கியவர் ஏ.பி நாகராஜன். இவரது படைப்பில் மிகவும் வித்தியாசமான 'கண்காட்சி',வா ராஜா வா','மேல்நாட்டு மருமகள்'போன்ற திரைப்படங்களையும், ஆன்மீகப் பயணத்தை சித்தரிக்கும் 'திருமலை தென்குமரி' எனும் படத்தையும் நம்மில் பலரும் கண்டு,மகிழ்ச்சியில் மிதந்திருப்பர். 

      ஆனால் இவை எல்லாவற்றையும் விட,புராணக் கதைகளில் ஏ.பி.நாகராஜன்  காட்டிய ஏகாந்தமான ஈடுபாடு,ஒரு தனி ரகமாகும்.அவர் முதன் முதலில் தன் பொற் கரத்தால் கதை வடிவமைத்துக்கொடுத்த,மிகவும் தெய்வீகமான திரைப்படம் 1958- இல் எம்.ஏ. வேணுவின் தயாரிப்பில்,கே.சோமுவின் இயக்கத்தில் உருவான, 'சம்பூரண ராமாயணம்'எனும் அமரகாவியமாகும்.  

    பின்னர் கடந்த நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில்,அவரது அபூர்வ இயக்கத்தில் உருவான 'திருவிளையாடல்''சரஸ்வதி சபதம்''கந்தன் கருணை''திருவருட்செல்வர்' 'திருமால் பெருமை''அகத்தியர்''திருமலை தெய்வம்''காரைக்கால் அம்மையார்' ஆகிய அனைத்துமே பக்தி மார்க்கத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்து, மெய்மறக்க வைத்த.

   இத்திரைப்படங்களின் அமோக வரவேற்புக்குக் காரணமாக அமைந்தவை,ஏ.பி நாகராஜனின் ஈடு இணையற்ற கலையுணர்வும்,அகம்நிறைந்த ஆன்மீக வளமு மாகும்.தூய தமிழில் அமைந்த வசனங்களும்,இறைமையை முழுமையாக ஆட் கொண்ட அபரிமிதமான ஆத்ம பலமும்,இவற்றோடு இடையிடையே சேர்க்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களும்,எல்லாவற்றையும் ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கும் ஒலி ஒளி அமைப்புகளும்,நெஞ்சை கொள்ளையடிக்கும் பாடல்களும் ஒருங்கிணைந்து,திரையரங்கங்களில் படம்பார்ப்போரை ஒரு மாறுபட்ட உலகத் திற்கு  கொண்டு சென்றன.  

   பெரும்பாலான இப்புராணத் திரைப்படங்களுக்கு ஜீவநாடியாகி,பூரண கும்பமாக விளங்கியது,நடிகர் திலகத்தின் நிகரில்லா நடிப்பாகும்.சிவனாக,நாரதனாக, கலைவாணியின் திருவருள் பெற்ற வித்யாபதியாக,வீரபாகுவாக,அப்பராக, அனைத்து புராண மற்றும் இதிகாச நாயகர்களை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி புராண மகிமையினை உணர்ச் செய்தார் கலைத்தாயின் தவப்புதல்வன் செவாலியர் சிவாஜி கணேசன்.

   அப்பர்,சேக்கிழார்,திருத்தொண்ட நாயனார்,சுந்தரர்,போன்ற அனைத்து வேடங்களில்'திருவருட்ச்செல்வர்'எனும் ஒரே படத்தின் மூலம்,புராண கம்பீரத்தின் உச்சத்தை உணரச் செய்தார் நடிகர் திலகம். இதேபோன்று 'திருமால் பெருமை' எனும் ஒற்றை திரைப்படத்தின் மூலம்,பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,மற்றும் தொண்டரடிப்பொடியாழ்வார்,ஆகிய பனிரெண்டு வைணவத் தூண்களில் மூவரை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்,சிவாஜி கணேசனும்,அவரை  இயக்கிய ஏ.பி.நாகராஜனும்.

   ஏ.பி.நாகராஜனின் தனிச் சிறப்பே புராண காதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் யார் என்பதை உணர்ந்து,அவரவர் திறமைக் கேற்ப குந்த கதாபாத்திரங் களை அவர்களுக்கு அளித்ததேயாகும். நடிப்பின் இமயமான சிவாஜி எல்லா கதா பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர் என்றாலும்,அகத்தியர் வேடத்திற்கு சீர்காழி கோவிந்தராஜனை தேர்ந்தெடுத்ததும்,முருகன்/திருமால் வேடத்திற்கு சிவகுமார் பொருத்தமானவர் என்று உணரவைத்ததும்,அவ்வையார் வேடத்திற்கு கே.பி.சுந்தராம்பாளைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்பதை இரு படங்கள் மூலம் உறுதி செய்ததும்,ஏ.பி.நாகராஜனின் தனிச் சிறப்பே.   

   இதேபோல'காரைக்கால் அம்மையார்'திரைப்படம் இயக்கத் தொடங்குகையில் அவ்வேடத்திற்கு கே.பி.சுந்தராம்பாளைத் தவிர வேறு ஒருவரை அவர் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்.பொதுவாகவே அந்த காலகட்டத்தில் வாழ்ந்த நடிகர்கள் அனைவருமே,தூய தமிழ் பேசி, உணர்ச்சி ததும்ப நடிக்கும் திறன் கொண்டோராகத் தான் இருந்தனர். இப்படித்தான் தட்சன் வேடத்திற்கு ஓ.ஏ.கே.தேவரும்,பாணபத்திரர் வேடத்திற்கு டி ஆர் மகாலிங்கமும்,ஹேமநாத பாகவதர் கதாபாத்திரத்திற்கு டி.எஸ். பாலையாவும்,பொருந்தினர்.ஏ.பி.நாகராஜன் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது ஒரு அற்புதமான நடிகர் என்பதை 'திருவிளை யாடல்'திரைப்படத்தில் நக்கீரனாகி, நெற்றிக்கண் கொண்டு சுட்டெரித்த ஈஸ்வரனின் வெப்பத்திற்கு எதிராக,தனது கொழுந்து விட்டெரியும் வசனங்களினால் வெகுண்டெழுந்து,பின்னர் சிவனடி பணிந்தார். 

     நடிப்பைப்பொறுத்தவரை'திருவிளையாடல்'திரைப்படத்தில் நக்கீரன் வேடத்தில் தோன்றி,சிவாஜி கணேசனின் தமிழ் வசன உச்சரிப்பின் தெளிவு,அழுத்தம், சொற்களும் உணர்வும் சங்கமிக்கும்,புள்ளிகளை தொடும் அசாதாரண குரலமைப்பு, ஆகிய அனைத்தையும் நடிகர் திலகத்தின் பாணியிலேயே அவருடன் பக்குவமாய் போராடி, வெளிப்படுத்திய  காட்சி, நாகராஜனின் நடிப்புத்திறனுக்கு,ஒரு அற்புத சான்றிதழாய் விளங்கியது. அனல் கக்கும் வசனங்களை,தீப்பிழம்புகளாய் இந்த இருவரும் வெளிப்படுத்த,இறுதியில் சொற்களின் சூட்டோடு,நெற்றிக்கண் எரிக்கும் சூடும் கலந்திட,வெப்பம் தாளாது பொற்றாமரைக் குளத்தில் விழுந்தெழும் நக்கீர னாக நாகராஜன் அன்றும்,இன்றும்,என்றும்  நம் அனைவரின் மனம் நிறைந்தவரா வார். 

    ஏ.பி.நாகராஜனின் பாரம்பர்ய மற்றும் புராண திரைப்படங்களுக்கு பக்க பலமாக அமைந்தவற்றில் திரையிசையும் மிக முக்கிய பங்கு வகித்து,அத்திரைப்படங் களின் வெற்றி இலக்கினை நிர்ணயம் செய்தது. இந்த வகையில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனும்,குன்னக்குடி வைத்தியநாதனும் ஏ.பி.நாகராஜனின் திரைப்படங்களுக்கு,கர்நாடக இசையூட்டம் அளித்தனர். 

     டி.எம்.சௌந்தராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்,டி.ஆர்.மகாலிங்கம் கே.பி.சுந்த ராம்பாள்,டாக்ர் பாலமுரளி கிருஷ்ணா,P.B ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா,எஸ்.ஜானகி, எஸ்.வரலட்சுமி போன்ற குரல்வளம் நிரம்பப்பெற்ற இசை மேதைகள்,தங்கள் தெவிட்டா பாடல்கள் மூலம் ஏ.பி.நாகராஜன் திரைப்படங்களுக்கு சிறப்பு  வரவேற்பை  ஏற்படுத்தினர்.

   மொத்தத்தில் திவ்யமான திரைக்கதைகளால்,வசனத்தால்,நடிகர்களின் பங்களிப் பால், இசை ஆழத்தின் மேன்மையால்,ஏ.பி.நாகராஜனின் பெருமைமிகு திரைப் படங்கள்,அவரை தமிழ் மரபு மற்றும் புராண வடிவங்களின் உன்னதமான முகப் பாக்கி,தமிழ்த்திரை இயக்கத்தின் புராணப் புதல்வனாக்கின என்பதே,தமிழ்த்  திரைப்பட வரலாறு போற்றும் உண்மையாகும்.

ப.சந்திரசேகரன் . 

                    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  


Sunday, November 1, 2020

Tamil Cinema's two Similar Profiles of Villainy















    Generally speaking,each actor is defined by their individual mettle and profile.In the case of heroes,differences permeate more than similarities.But when it comes to villain and supporting actors,one can trace a bunch of similarities in looks,mannerisms,voice modulation and even in acting style.
    For instance late director and actor Manivannan was seen as a combination of M. R.Radha and S.V.Rengarao in his delivery of characters. He rightly combined the speed of Rengarao in dialogue delivery,with an ever taunting mood,that remained as the sole asset of M.R.Radha. Senthamarai and Sangilimurugan seemed to reflect a similar kind of deliberations when it came to villainy,though Sangilimurugan did more character roles than Senthamarai.In this regard there were two solid actors of the last millennium who carried a host of similarities in their looks and tone delivery.They were E.R.Sahadevan and S.V.Ramados.Of the two, E.R.Sahadevan was older than Ramadas by a decade.
   Both Sahadevan and Ramadas had a facial grandeur to suit royal,mythological and social characters.Both were made of sterner stuff with an incredible substance for crude villainy of the ruffian kind.The only difference was,while Sahadevan was a robust rustic,bound to the rural soil,Ramadas could also fix himself in stylistically urbanized characters such as an aristocratic estate owner with a wolfish interior,which he finely displayed in Uyarndha Manidhan.
   In that colossal AVM movie,Ramadas was seen as the most unsympathetic father of Sivaji Ganesan,never willing to compromise his status of wealth for the sake of his son's love towards the daughter of an estate worker.Similarly, in the Chevalier's classic film'Pudhiya Paravai'Ramadas performed the role of an elegant pilot.Whereas E.R,Sahadevan was quite comfortable in performing roles such as a village chieftain or a Zamindaar,a rotten robber,a brutal burglar and a detestable womanizer.
    The first film of E.R.Sahadevan that I saw was Modern Theatre's famous film Aayiram Thalaivaangiya Aboorva Sinthamani.In that film he appeared as Purantharan,the maternal uncle of Chintamani.His other entry with Modern Theatres was the film Petra Maganai Vitra Annai.Unlike Ramadas who had acted in about thirty films with Sivaji Ganesan,Sahadevan had joined in several popular films of MGR like Koondukkili{the only film starring MGR and Sivaji Ganesan together} Malaikallan,Pudhumai Pithan,Gulebagavali,Thaaikupin Thaaram and Thai Makalukku Kattiya Thaali.E.R.Sahadhevan who played the role of a burglar called Kaathavarayan in Malaikallan, has also acted in a royal role in Sivaji Ganesan's mythological fiction film Kaathavarayan.He played as the main villain against MGR in Gulebagavali.
  Though Sahadevan had acted in several films of MGR,his remarkable roles were in Sivaji Ganesan's famous films Navarathiri,Thiruvilaiyaadal{as the Pandiya King getting thwarted by the challenge thrown by the haughty Hemanadha Bhagavadhar}and Thillaanaa Mohanaambal {as street singer Manorama's man Nagappan, obsessed with dancer Mohanaambaal,played by Padmini}.Some of the films that Sahadevan had acted with Gemini Ganesan were, Maayaa  Bazaar,Gunasundari,and Aadhi Parasakthi.
     S.V.Ramadas made his royal entry as King Parthiban alongside Gemini Ganesan,in Devi films' 'Konjum Salangai'produced and directed by M.V.Raman.It was a film based on a historical fiction and ran successfully on account of its powerful narration and felicitous music.His next film was also with Gemini Ganesan and it was'Ezhai Pangalan'produced by music composer K.V.Mahadevan and directed by K.Shankar. He then appeared as Zamindar Jambulingam in Modern Theatres' Konjum Kumari'.
     His popular films with MGR were Arasa Kattalai,Kaanchi Thalaivan,Padagotti,Aayirathil Oruvan,Parakkum Paavai,Kudiyirundha Koil,Nam Naadu,Nalla Neram,Naalai Namadhe, Idhayakkani,Rickshakaaran and Ninaithadhai Mudippavan.But a majority of his films were those of Sivaji Ganesan and to mention a few in this regard were,Arivaali,Karnan,Pudhiya Paravai, Vietnaam Veedu,Thirudan,Thangai,Thangaikkaaga,Iru Dhruvam,Uyarndha Manidhan, Bharatha Vilas,Vilaiyaattu Pillai,Deepam,Annan Oru Koil,Raman Ethanai Ramanadi,Rajapart Rengadurai, Vasantha Maaligai,Engal Thanga Raasaa,Thirisoolam,Avan Oru Sarithiram and En Aasai Raasaave.
    Unlike E.R.Sahadevan,S.V.Ramadas had the chance to act with various other heroes like Jai Shankar {Nee,Yaar Nee,Vairam}Ravichandran{Adhe Kangal}Rajinikanth{Mangudi Minor and Adutha Vaarisu}Kamalahasan{Unarchikal}Paarthiban{Abimanyu}Sarathkumar {Moovendar}  and Arjun {Mudalvan}.Interestingly both Sahadevan and Ramadas have played the role of the mythical Indiran,the former in Rambaiyin Kaadhal and the latter in Karnan.Besides both have appeared in the film Kandan Karunai as the assistants of Soorabadman.The other mythological roles of the two actors were that of Dushaasanan in Maayaa Bazaar and Lord Shiva in Gunasundari that Sahadevan played and the role of Birugu Muni,that Ramadas played in Agathiyar.
   Some of the other well known films of E.R.Sahadevan were,Neelamalai Thirudan, Sengottai Singam,Nadu Iravil and Chenchulatchumi.Similarly the two films of S.V.Ramadas with Gemini Ganesan were Ramu and Punnagai .Of these two films,in Punnagai,he played the repulsive role of  a rich man spoiling the life of a helpless woman {Jeyanthi},in an inebriate mood.
   Both E.R.Sahadevan and S.V.Ramadas created new milestones in Tamil film history by making indelible impressions in the minds of the audience,by their striking second level villain roles and supporting character roles.Their voice pattern could cause dramatic impacts through strategic calculation of intonation, in addition to clarity and thrust in the delivery of dialogues.There was an effective and emphatic vibration in their voices,that could spin and yarn a kind of magic,through a seamless mixing of body language and verbal wield.
   While the voice of Sahadevan could be heard as a volatile move of the tongue,making miracles,the little more vibrating masculine voice force of Ramadas could rule the screen to the roost and conquer the mood of the audience,with a governing roughness,never leaving a jarring note.Some of the most memorable films of Ramadas are Karnan,Uyarndha Manidhan, Aayirathil Oruvan, Punnagai,Adhe Kangal and Pudhiya Paravai. E.R.Sahadevan will be remembered for films like Thaaikupin Thaaram,Thiruvlaiyaadal and Thillaanaa Mohanaambaal.
    E.R.Sahadevan was the favourite of Devar films and Vijayalatchumi pictures.S.V.Ramadas had many film makers to patronize him as a specially suitable actor for performing negative roles, mostly as a gangster member and rarely as prime villain.His character roles also belonged to the secondary level and were not in the line of actors like S.V.Subbaiah,S.V.Renga Rao and T.S.Balaiah.
    Nevertheless,both these actors lived through their roles,by their well made facial parameters, perfectly fitting the thespian mode,both on stage and on screen and by categorically delivering their roles through their gripping voice modulation, filled with valour and venom. Their assertive similarity ever exists as a dramatic formula,driving them both on similar tracks,with similar demeanor and demonstration.In a way,one could say that they both performed roles with a similar quest for goals travelling on a lasting track ,perfectly laid by illustrious stage and screen actors like R.S.Manohar and the TKS Brothers.
                                    ===================================

Thursday, October 22, 2020

MY Touring Talkies Days.

   Six decades ago,cinema shows were largely confined to tents erected on a vast ground, with thatched roofing. Later,light roofing replaced thatched roofing.The front portion of these tents,would be marked for floor tickets.There wont't be any cement flooring.The floor ticket area would be filled with sand. Most of the viewers would prefer the floor ticket area,not only because they were cheaper and closer to the screen,but also because people could sit together,jostling one another,while watching the films either in awe,or in admiration.

   The remaining space would be meant for'back benchers'.The benches which were a long line of seats with a back rest,were made of bamboos,ringals and sometimes even of cheap wooden planks.The greatest advantage of these benches was that they could accommodate more number of viewers,than independent chairs which would occupy more space and hence the number of viewers would have to be restricted.Such theatres were called Touring Talkies,because they were all made up of a mobile frame work and could easily be shifted from place to place,once their leasing periods were over.

   Morning shows and matinee shows were rarer in the Touring Talkies,because penetration of sun light through the marginal gaps of the thatched roofs,would be a stumbling block for screening films in maximum darkness,which alone would facilitate a clearer viewing of films.However, if any new MGR or Sivaji Ganesan films were released, the touring talkieses would be compelled to increase the number of shows,so as to go in for morning and matinee shows.I remember watching MGR films like Nallavan Vaazhvaan and Rani Samyuktha and Sivaji Ganesan films like Ambikapadhi and Rajabakthi,in their morning shows,on their days of release.

   I watched a huge lot of films in those talkieses and some of the films that frequently haunt my memories even now are,P.U.Chinnapa's Manomani and Jagadhala  Pradhaban,T.R.Mahalingam's Vedhala Ulagam and Abalai Anjugam,N.T.Rama Rao's Padhala Bhairavi,MGR's Marmayohi,Jenoa,Mandhiri Kumari, Mahadevi,Malaikallan and Alibabavum Naarpadhu Thirudarkalum,Sivaji Ganesan's Parasakthi, Manohara, Padhi Bhakthi,Pennin Perumai,Makkalai Petra Maharasi, Mangaiyar Thilakam and Punar Jenamam,Gemini Ganesan's Guna Sundari, Sowbagyawathi,Sadharam,Pathini Dheivam, Thirumanam and Kanavane Kankanda Dheivam {besides Padhi Bhakthi and Pennin Perumai} and other notable films like Naga Dhevadhai,Aaravalli,Aayiram Thalai Vaangiya Abhoorva Sindhamani,Thilakam,  Vanjam,Mandhiravadhi,Chandralekha, Yanai Valartha Vanambadi,Naan Valartha Thangai,Kaithi Kannayiram,Devaki,Kula Dheivam,Adutha Veetu Penn,Vannakkili, Mudhalali,Thai Pirandhaal Vazhi Pirakkum, Vijayapuri Veeran,Thaayaipola Pillai Noolaipola Selai and many more.

   Slowly,permanently built,non-airconditioned theatres came into existence,reducing the expansion of Touring Talkieses.But my memories of the touring talkies have become an eternal part of my thoughtwaves,on account of the potential reminiscences of my childhood and boyhood days.The last film I saw in a touring talkies was En Kelvikenna Badhil{1979} starring Rajinikanth and Sripriya.I saw the film in a remote village {Thirumullai Vasal}in Sirkazhi taluk of Tamil Nadu.

  The pleasures of watching a movie in a touring talkies were irreplaceable.With a single projector and with frequent small intervals and the substantially longer,notified interval, touring talkieses gave us immense freedom to move out and frequently ease ourselves from the physical pressures of the huge crowd,lowly named as groundlings. During the longer interval,songs from other films would be played through gramaphone records.

   Popcorns were unheard of those days.But sugar candies,peanuts,locally made biscuits, sticky treacle toffees and other kinds of snacks made of ground nut oil,were the delicious treasures,enriching the bonanza of a touring talkies experience.Once a way,we could also hear alarming cries from the crowd about its inability in the darness,to trace the presence of a rat or snake,that would peep into the talkies,thanks to the multi avenues open for reptiles and rats,to make their free entries into the talkies.

    Advertisements about the on going,or upcoming films,would be in the form of handbills distributed to the localites,through covered bullock carts with posters of films,pasted on both sides of the cart. Catchy points about the film would be loudly announced,using a hand held funnel like speaker and one could see children running after the carts to collect the handbills.Gramaphone records from other films would also be played from the bullock carts.

    It is all gone now.Technology has taken us far away,from these unadulterated happenings of a society,that had no idea about the nuances awaiting for its posterity. Cinema killed the stage,though it benefitted a lot from the stage.Television,computer and smartphone,have deprived us of the epic like events of a movie watching experience. When there was no scope for booking one's ticket through a reservation programme,the thrills of joining a long line of queues,restlessly anticipating the probability of getting a ticket and moving into the theatres with the enormous excitement of looking for a comfortable seat,constituted the historic moment of the cinema watching event.

   Today just sit at home,download the movie of your interest and view it with your vagaries of mood and time. Piracy has become part and parcel of a paramount industry,whose objectives are soley meant for entertaining people.Cyber crimes and a corona free,social distancing mindset,have ostracised those objectives,thereby pulling down the curtains,even before the movie is cast on the big screen.But the truth is,there is a genesis behind every destruction.Like it or not,learn to live with the changing trends,lest your purpose of life should get stifled by your own reluctance to be a part of the changing trends.    

                                    ===================================

Wednesday, October 14, 2020

தமிழ்திரையும் கிராமமும்









   


    தொழில் நுட்பத்தின் உச்சத்தை குறிவைக்கும் உலக திரைப்படத் துறை,மனித வாழ்வியல் தத்துவங்களையும் நடைமுறைகளையும் பின்னுக்குத் தள்ளி,அறிவிய லின் துணையோடு குற்றம் புரிவதையும்,அதே அறிவியலைப் பயன்படுத்தி குற்றங் களை புலனாய்வு செய்து புரையோடச் செய்வதையும், திரைப்படத் தயாரிப்பின் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதை,நம்மால் அவ்வப்போது உணர முடிகிறது.

   ஆனால் இந்தியாவிலும்,குறிப்பாகத் தமிழகத்திலும்,மனிதம் சார்ந்து சிந்தித்தும், மனித வாழ்வின் பல்வேறு நிலைப்பாடுகளை மைய்யப் படுத்தியும்,கற்பனையை யும் யதார்த்தத்தையும் இரண்டறக்கலந்து, திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

    ''இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களே''என்றார் மகாத்மா காந்தி. அவ்வகை யில் இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், கிராமங்களை முன்வைத்தே சுதந்திரத் திற்கு முன்னும் பின்னும்,பல திரைப்படங்கள் உருவாயின.தமிழ்த்திரையை பொறுத்தமட்டில்,கடந்த நூற்றாண்டிலும் சரி,இந்த நூற்றாண்டின் இதுவரையிலும் சரி,கிராமத்து அத்தியாயங் களை புரட்டும்  திரைப்படங்களுக்கு குறைவே இல்லை,என்று திட்டவட்ட மாகக் கூறலாம். 

   கடந்த நூற்றாண்டில்,கிராமங்களை நெஞ்சில் சுமந்து,தரமான கதைகளையும் திரை நிகழ்வுகளையும் வடிவமைத்து அதற்கேற்ப கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர்களின் பட்டியல் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.குறிப்பாக, ஏ.பீம்சிங், சாண்டோ சின்னப்பதேவர்,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றோர், மண்ணின் மகத்துவத்தை,கிராமங்களை முன்வைத்து பிரகடனப்படுத்தினர்.

     இவர்களில் ஏ.பீம்சிங் கதை நிகழ்வுகளுக்கும்,கதாபாத்திரங்களுக்கும்,முக்கியத் துவம் அளித்தார்.சிவாஜிகணேசனை தனது திரைப்படங்களின்  ஆன்மாவாகக் கொண்ட ஏ.பீம்சிங்,'பாவ மன்னிப்பு' 'பாகப்பிரிவினை',படித்தால் மட்டும் போதுமா' 'பழனி'போன்ற திரைப்படங்களால், இன்றைக்கும் தமிழ் மண்ணின் பாரம்பரியமும் கலாச்சாரமும் கிராமங்களிலே வேரூன்றி,மரமாகி கிளைகளாகி,மலர்களாகி வசந்தம் வீசியதை, நம்மால் மறக்க முடியாமல் நிலைநிறுத்தி இருக்கிறார்.ஜெமினி கணேசனை வைத்து அவர் இயக்கிய'பொன்னு விளையும் பூமி'{1959}எனும் திரைப் படமும்,அன்றைக்கு திரைப்படங்களை ஆழ்ந்து நேசித்த அனைவரின் பாராட்டையும் பெற்றதாகும்.   

    தேவர் பிலிம்ஸ்  எனும் தனிப்பெரும் நிறுவனம், எம்.ஜி.ரையும், முருகனையும், விலங்குகளையும் மும்முனைகளாக்கி,தமிழகத்தின் கிராமங்களின் நிஜங்களை நிழல் பிம்பங்களாக்கி,பட்டி தொட்டியெல்லாம் வலம் வந்தது.ஜெமினி கணேசன் நடித்த 'வாழவைத்த தெய்வம்' தவிர,இதர படங்களான'தாய்க்குப் பின் தாரம்''தாய் சொல்லை தட்டாதே' 'குடும்பத்ததலைவன்''தாயைக் காத்த தனயன்''தருமம் தலை காக்கும்' 'வேட்டைக்காரன்'போன்ற பல எம்.ஜி.ஆர் திரைப்படங்களில்,கிராமப்புற தோற்றங்களை முன்னிறுத்தியே,சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர், தனது வெள்ளித்திரை காட்சிகளை அரங்கேற்றினார்.தேவர் என்று சொன்னாலே,மருத மலை முருகனும்,எம்.ஜி.ஆரும்,விலங்குகளும்,தமிழக கிராமங்களின் இயல்பு வாழ்க்கையும்,கருப்பு வெள்ளை காட்சிகளாய்,வெள்ளித்திரையில் விரைந்தோடி யதை,நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும். 

   ஏ.பீம்சிங்,தேவர்,ஆகியோரிடமிருந்து சிறிது மாறுபட்டு வசனங்களால்,வரிந்து கட்டி கிராமங்களை சுற்றிவந்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கிராம மக்களின் உணர்வுகளுடன் கலந்து கிராமங்களிலேயே வாழ்வது போன்ற ஒரு மனப்பிரமை யை திரையரங்குகளில் க்கு தோற்றுவித்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு இயக்குனர் திலகம் என்ற பட்டம் கூட,மிகச் சிறிய அங்கீகாரமே! 

    அவரது ஒப்பற்ற இயக்கத்தில்,நாம் கிராமங்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்த அனுபவத்தை பெற்ற திரைப்படங்களின் பட்டியலில்,'கற்பகம்' 'செல்வம்''சின்னஞ்சிறு உலகம்''கண் கண்ட தெய்வம்'கை கொடுத்த தெய்வம்' 'பணமா பாசமா''குலமா குணமா''படிக்காத பண்ணையார்' போன்றவை தமிழ்த் திரை உலகை தலை நிமிரச் செய்தவையாகும்.வசனமும் கதாபாத்திரமும் வசியமுற, திரைக் கதை நிகழ்வுகளை,கலாச்சார மணமுடன் ரசிகர்கள் நெஞ்சங்களில், நீங்காத நினைவுகளாய் நிலை பெறச் செய்தவர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்.

   கடந்த நூற்றாண்டின் ஐம்பது,அறுபது,எழுபதுகளில்,வெற்றி கொடி கட்டிய இந்த இயக்குனர்களின் மத்தியில்,கே.சோமுவின் படைப்பில் திரைக்கு வந்து மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிகர் திலகத்தின்'மக்களை பெற்ற மகராசி'{1957}திரைப் படமும்,பல்வேறுவகை திரைப்படங்களை இயக்கிய ஏ.சி. திருலோக்சந்தரின்'ராமு' எனும் திரைப்படமும்,பி.மாதவனின்'பட்டிக்காடா பட்டணமா'எனும் சிவாஜி கணேசன் நடித்த வெள்ளிவிழா திரைப்படமும்,கிராமத்து திண்ணைகளையும் பண்ணைகளை யும்,பாசத்தையும் மோசத்தையும்,கள்ளம் கபடற்ற நடைமுறைகளையும்,கபடுசூது களையும் ஒருசேரக் கலந்து,தமிழக கிராமங்களின் ஒட்டுமொத்த குரலாய் ஒலித்தன என்றால் அது மிகையாகாது.இதே சமயத்தில் வெளியான பி.மாதவனின்'சொந்தம்' திரைப்படமும் மதுரை திருமாறனின் இயக்கத்தில் உருவான 'வாயாடி''சூதாட்டம்' போன்ற திரைப்படங்களும்,கிராமச் சூழல்களை உள்ளடக்கிய கதை வழியில் பயணித்தன. 

    ஆனால்,இவர்களுக்கிடையே,நகர்ப்புற,மற்றும் படித்த நடுத்தர ரசிகர்களை மனதில் கொண்டே,கிராமக் கதைகளை முற்றிலும் தவிர்த்து,தனது இயக்கத்தில்  ஒரு படைப்பாளியின் பல்வேறு பரிமாணங்களை மட்டுமே வெளிப்படுத்திய ஒரே தமிழ்த்திரை ஜாம்பவான்,இயக்குனர் சிகரம்,கே.பாலச்சந்தராவார்.எனது நினைவுக் கெட்டிய வரை அவரது இயக்கத்தில் உருவான,கிராமப் பின்னணி கொண்ட ஒரே  திரைப்படம்,கமலும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த 'உன்னால் முடியும் தம்பி' எனும் திரைப்படமாகும்.

    இதில் கூட கே.பாலச்சந்தர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் சங்கீத மேதை யின் கட்டுப்பாடான வாழ்க்கை வழிகாட்டுதலைத்தான் முன்னிறுத்தியிருந்தார். இருப்பினும்,இவர் தனது'பட்டினப்பிரவேசம்' எனும் இன்னொரு திரைப்படத்தின் மூலம்,எவ்வாறு கிராமத்தின் கீர்த்தி,நகரங்களின் நமச்சல்களினால் நரகமாகும் எனும் உண்மையை,உரத்த சிந்தனையால்,வெளிப்படுத்தினார்.இதற்கு முற்றிலும் மாறாக,பேரரசு எனும் பாலச்சந்தரின் அடுத்தத் தலைமுறை இயக்குனர்,தன்னுடைய 'திருப்பாச்சி'கதாநாயகனை{விஜய் }பட்டிக்காட்டிலிடுந்து பட்டணத்திற்கு அனுப்பி அங்கே கொடூரமாக வேரூன்றிய வன்முறை அட்டூழியத்தை, முழுமையாக களையெடுத்தார்.    

   கடந்த நூற்றாண்டின் இறுதி,ரு பத்தாண்டுகளில்,பட்டி தொட்டிகளின் படையுடன் தமிழ்திரையில் தரமாகவும் வலுவாகவும் குடியேறியவர்தான் பாரதிராஜா.கிராமக் கதைகளை திண்ணைகளிலும் மரத்தடிகளிலும், நடைமுறை நிகழ்வுகளாக அரங் கேற்றி,தமிழ் மண்ணுக்கு'முதல் மரியாதை'தேடித்தந்தவர்,வர்.கமலை சப்பாணி யாகவும்,ரஜினியை பரட்டையாகவும்,கிராமத்தில் பிரவேசிக்கச் செய்து தனது 'பதினாறு வயதினிலே'எனும் முதல் படத்திலேயே,முண்டாசுக்கு முத்திரை பதித்த வர் பாரதிராஜா. 

   இவர் இயக்கத்தில் பின்னர்'கிழக்கே போகும் ரயில்','நிறம் மாறாத பூக்கள்','புதிய வார்ப்புகள்','வேதம் புதிது','அலைகள் ஓய்வதில்லை','கருத்தம்மா','மண்வாசனை', 'முதல் மரியாதை','நாடோடித் தென்றல்','கிழக்குச் சீமையிலே'போன்ற பல்வேறு கிராமத்து மின்னல்கள்,இடியுடன் கனமழை பொழிந்தன.இன்றைக்கு பாரதிராஜா வை மறந்து, கிராமங் களை நினைத்து பார்க்கவே முடியாது என்பது,அப்பட்டமான உண்மையாகும். 

   பாரதிராஜாவின் மூச்சுக்காற்று கிராமங்களை சுற்றிவருகையில்,அது சுவாசித்த பல்வேறு நறுமணங்களே,அவரின் திரைப்படங்களுக்கு கருவாகி,கதையாகி, வெண்திரையில் நிகழ்வுகளாகின.புறணி பேசுதல், கோள் மூட்டுதல்,வசைமொழி யில் களிப்புறுதல், வசந்தத்திலும், வாடைக் காற்றிலும்,வளைந்து நெளிந்து காதல் புரிதல்,வீச்சருவாவில் வீரத்தை பொழிதல்,தீமைகளுக்கிடையே நன்மையினை பறைசாற்றுதல், நிலாவை கையில் பிடிக்க வாலிபத்தில் திமிறுதல்,தலை மயிற்றில் மணி கோர்த்து முதிர்ந்த மன இணக்கங்களை வெளிப்படுத்துதல்,போன்ற பல்வேறு சம்பவங்கள் மூலம்,கிராம இதிகாச நாயகரான பாரதிராஜா,என்றென்றும் தமிழ் மண்ணின் தவப்புதல்வனாவார்

    பாரதிராஜாவைப் பின்தொடர்ந்து அவர் அணியில் பணியாற்றிய கே.பாக்யராஜ், தனக்கே உரிய லந்து பதாதைகளோடு,'முந்தானை முடிச்சு 'ராசு குட்டி','எங்கள் சின்ன ராசா','பவுனு பவுனுதான்','சொக்கத்த தங்கம்' போன்ற தலைப்புகளில் கிராமங்களின் பல்வேறு வாயில்களைத் தட்டி, ஆங்காங்கே நடக்கும் நடப்புகளை முன்னிறுத்தி நையாண்டி தர்பார் கண்டார்.

   மேலே குறிப்பிட்ட படங்களில்'சொக்கத் தங்கம்'தவிர,மற்ற அனைத்திலும் அவரே கதாநாயகனாக வலம் வந்தார்.அவரது இதர திரைப்படங்களான'அந்த ஏழு நாட்கள்', 'சின்ன வீடு','இது நம்ம ஆளு','மௌன கீதங்கள்','தாவணிக்கனவுகள்',போன்ற பிரபலமான திரைப் படங்கள் அனைத்திலுமே,கிராமச் சூழல் ஓரளவு தென்பட்டா லும், கதையமைப்பு,சம்பவங்களின் நகர்ச்சி ஆகியவை,கிராமங்களை முழுக்க முழுக்க மைய்யம் கொண்டதாகக் கூறமுடியாது.பாரதிராஜாவின் கவித்துவ படைப் பாற்றலும்,அவர் சீடரின் கலக்கல் படைப்புகளும், கிராமக் களேபரங்களை முற்றிலும் வித்தியாசமாக படம்பிடித்துக் காட்டின என்று சொல்லலாம்.  

    இந்த இரட்டையர்களின் காலத்திலேயே ஜே.மகேந்திரனின்'எங்கேயோ கேட்ட குரல்','முள்ளும் மலரும்',மற்றும் 'உதிரிப்பூக்கள்',எஸ்.பி முத்துராமனின்'முரட்டுக் காளை''சகலகலா வல்லபன்'மணிரத்னத்தின் தொடக்கப் படங்களில் ஒன்றான 'பகல் நிலவு',தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குனர்களின்'அன்னக்கிளி' கே.பாரதியினுடைய 'மறுமலர்ச்சி' ஆகிய திரைப்படங்கள், கிராமங்களை  சரியாகச் சுற்றி வந்து, சிறப்பான திரைக்கதை காட்சிகளுடன், மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றன.இவர்களோடு, மணிவண்ணனின் 'சின்ன தம்பி பெரிய தம்பி',வாழ்க்கைச் சக்கரம், பி.வாசுவின் 'வேல கெடச்சிடுச்சு', 'சின்ன தம்பி' ராஜ் கபூரின்'சின்ன ஜமீன்' 'வள்ளல்' எம்.ரத்னகுமாரின்'சேனாதிபதி' போன்ற பல திரைப் படங்கள் வெளியாகி கிராமங்களை வெண்திரையில் முன்னுக்குத் தள்ளின.  

   கிட்டத்தட்ட இதே காலச் சூழலில் வெளிவந்த பரதனின் இயக்கத்தில் உருவான 'தேவர் மகன்'திரைப்படம் சிவாஜி,கமல்,நாசர் ஆகியோர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியது.கிராமக் கலாச்சாரத்தையும், தமிழினத்தின் ஒரு குறிப்பிட்ட சமூகத் தினுடைய அருமை பெருமை களையும் போற்றிப்பாடி,அதே சமூகத்தின் மண் விட்டகலா  வன்முறை வீரியத்தை,வரலாறாக்கியது இத்திரைப்படம். 

    பாரதிராஜாவிற்கு அடுத்தாற்போல் கிராமங்களின் அன்றாட வாழ்வியல் நெறி முறைகளையும் அறியாமையையும்,கிராமப் பஞ்சாயத்து நடைமுறைகளையும், அற்புதமாக வெளிச்சம்போட்டு காட்டினார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.'சேரன் பாண்டியன்'தொடங்கி 'நாட்டாமை','நட்புக்காக',பெரிய குடும்பம்'பரம்பரை','முத்து'  'பாட்டாளி' 'படையப்பா' என்று பல்வேறு திரைப்படங்கள் மூலம் கிராமத்தில் வெற்றிக் கொடி கட்டினார் இந்த அதிரடி படைப்பாளி.

   இந்த பட்டியலில் நிச்சயம் இடம்பெறவேண்டிய திரைப்படங்கள்,ஆர்.வி.உதய குமாரின்'கிழக்கு வாசல்''சின்ன கவுண்டர்','பொன்னுமணி','எஜமான்'போன்ற மக்களின் பாராட்டுதலைப்பெற்று,நிறைந்த வசூலைக் குவித்த திரைப்படங்க ளாகும். இவற்றில் 'சின்ன கவுண்டர்' ஒரு கிராமத்து இதிகாசம் என்றே சொல்ல லாம்.அதே போலத்தான் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்','எங்க ஊரு பாட்டுக் காரன்''மனசுக் கேத்த மகாராசா' 'தங்கமான ராசா'போன்ற திரைப்படங்களும் ஆர்.சுந்தராஜனின் 'வைதேகி காத்திருந்தாள்''அம்மன் கோயில் கிழக்காலே' போன்ற திரைப் படங்களும்,திரையரங்குகளில் பல வாரங்களுக்கு ஜனத்திரள் கண்டன.

  இவற்றில்'கரகாட்டக் காரன்'வைதேகி காத்திருந்தாள்'இரண்டும் வெள்ளி விழாப் படங்களாகும்.இத்திரைப்படங்களுடன் இணைந்து,ராஜ் கிரணின் 'என் ராசாவின் மனசிலே'அரண்மனைக் கிளி' மு.களஞ்சியத்தின்'மிட்டா மிராசு'சேரனின்'பொற் காலம்''வெற்றிக்கொடி கட்டு'மற்றும்'பாண்டவர் பூமி'தங்கர் பச்சானின்'அழகி'  ஆகிய அனைத்துமே கிராமங்களின் கருவூலங்களாகத் திகழ்ந்ததாக,கருதப்பட வேண்டியவையாகும் .  

   இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட  இயக்குனர்களின் திரைப்படங்கள் பட்டியலில், விக்ரமனின் 'சூரிய வம்சம்'ஹரியின்'அய்யா'லிங்குசாமியின் 'ஆனந்தம்',மற்றும் 'சண்டக்கோழி',சமீபத்தில் நம்மில் பலரும் கண்டு வெகுவாக ரசித்திருக்கக்கூடிய  எம்.முத்தையாவின்'கொம்பன்' ஆர்.பன்னீர்செல்வத்தின்'கருப்பன்' பாண்டிராஜின் 'கடைக்குட்டி  சிங்கம்''நம்ம வீட்டு பிள்ளை',ஆகிய அனைத்துமே தனி முத்திரை பதித்த கிராமீய திரைப்படங்களாகும்.இதில்,இயக்குனர் பாண்டிராஜின் இரு படங் களும் கிராமத்தின் கம்பீரத்துடன்,கூட்டுக்குடும்பத்தின் உணர்ச்சிப் போராட் டங்களையும்,உறவுகளின் ஒட்டுமொத்த பலத்தையையும், உருக்குமான இறுதிக் காட்சிகளாய் இறக்கி,காண்போர் கண்களை கலங்க வைத்தன. 

   கிராமக் கதைகளுக்கு மிகவும் உகந்த கதாநாயகர்கள் என்று நாம் நினைத்துப் பார்க்கையில்,நடிகர் திலகத்திற்குப் பிறகு நம் மனதில்  முதலில் இடம் பிடிப்பவர் கள், ராமராஜன், விஜயகுமார், சத்யராஜ், சரத்குமார் ராஜ் கிரண், ஆகிய  ஐவர்  மட்டுமே! இவர்களில் சத்யராஜும் சரத்குமாரும் ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மிடுக்கினை கேப்டன் விஜயகாந்திற்கு இணையாக வெளிப்படுத் தக்கூடியவர்கள்.

   விஜயகுமார் மீசை வைத்தால் கம்பீரத்துடன் கிராமத்திலும்,மீசை இல்லையேல் நளினதுடன் நகரத்திலும்,பவனி வரக்கூடிய நடிகர்.அதே போலத்தான் கார்த்திக் முத்துராமனும்! பிரபு,கிராமமோ நகரமோ மீசையுடன் மிதமாக, நடிப்பிற்கு மெருகேற் றுவார்.ராமராஜனையும் ராஜ் கிரணையும்,கிராமத்தை விட்டு வெளியே கொண்டு வரவே முடியாது. இவர்களுக்கு அடுத்த படியாக கார்த்திக் சிவகுமாரும் விஜய் சேதுபதியும், இயல்பாக கிராமத்து மண்ணில் காலூன்றினர் என்று உறுதியாகச் சொல்லலாம்.  

    கிராமங்களை வைத்து திரையிசையை எண்ணிப்பார்க்கையில்,இசைஞானி தமிழ்த்திரைக்குக் கிடைத்த வரப்பிரசாதமே.'அன்னக்கிளி'படத்தில் "மச்சானைப் பாதீங்களா "என்று தொடங்கி,இசையால் தமிழக கிராமங்களின் கிளர்ச்சியினை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்தார் இளையராஜா.ருடை கிராம இசை கரகோஷத்தை,பின்வரும் காலங்களில் வெல்லப்போவது யாரோ என்று தெரிய வில்லை.அது இயலுமா என்பதும் சந்தேகமே!

     கதையும் இயக்கமும்,நடிப்பும் நிகழ்வுகளும்,இசையும் பாடலும் ,என்று அனைத் தையும் அழகோடும் ஆளுமையோடும்,நமது பார்வைக்கும் செவிக்கும் பங்குவைக் கும் ஒளி ஒலி அமைப்புகளும்,நிலத்திற்கு அழகு சேர்க்கும் நடனக் காட்சிகளும், ஒன்றுபட வெண்திரையை ஒழுங்குடன் ஆக்ரமிப்பதே,நாம் இதுவரை திரையரங்கு களிலும்,சின்னத் திரையின் ஒளிபரப்பிலும்,ஆனந்தமாய் கொண்டாடிய தமிழ் திரையின் கிராமத்து கதைகளாகும்.தமிழகத்து  கிராமங்களின்  தனிச்சிறப்பை, தன்னிகரில்லா படைப்புகள் மூலம்,தரணியெங்கும் கொண்டு சேர்த்த தமிழ்த்திரை உலகு,விழுந்து வணங்குதற் குரியதாகும். 

ப.சந்திரசேகரன் . 

                               +++++++++++++++++++++++++++++++++++

Monday, October 5, 2020

Dada Mirasi the diligent,but less known film maker.

     


 
 
    "Less is more Lucrezia" says Robert Browning in his poem 'Andrea del Sarto'.For creativity,it is not the number that matters.The sustaining quality reflected in a few pieces of any art form, will speak volumes about the creative efficacy of the artist.This is very much true in the film making process.
    Though Tamil cinema proudly celebrates the memory of prolific film makers like
A.Bhim Singh,Krishnan Panju,P,Madhavan,A.C.Thirilocchandar,P.Neelakandan,K.Balachander, K.S.Gopalakrishnan,Balu Mahendra,P.Bharadhiraja,K.Bagyaraj,P.Vasu, K.S Ravikumar Mani Rathnam and several others,a film maker like Dada Mirasi who made only a few entries in Tamil,is ever admired for his most popular crime and romantic thriller 'Pudhiya Paravai'.
   For the Tamil audience'Pudhiya Paravai'was certainly a trend setting film.It was critically reviewed for the novel features in narration,the captivating and stylish performance of Sivaji Ganesan,the profoundly meanigful lyrics of Kannadasan and the heart throbbing music of Viswanathan & Ramamurthy.Even today the film is sweetly meant for repeated viewing,both at the theatres and in the small screen.The film was rich in romance,loud in sentimental outbursts and compact in narration of events,besides taking the hidden suspense thread unwound,till the end.
    Dada Mirasi had directed two more films of Sivaji Ganesan.They were'Ratha Thilakam'and 'Moonru Dheivangal'.The former which begins as a college story moves on to the war front, exhibiting elements of patriotism.Two songs of 'Ratha Thilakam'belonged to a special category. One was related to the social break up event in the collge{"Pasumai Niraindha Ninaivukale"} and the song became a pet number to be sung and glorified on  the day of parting of students,in many colleges on completion of their course of academic programme.
    In this regard,the song made its impact almost for a decade.The other song "Oru Koppaiyile En Kudiyiruppu" became an immortal number carrying autobiographical notes of the poet himself. 'Moonru Dheivangal'was a tale of three noble minded thieves who decided to become the benefactors of the family where they went to rob.The three robbers ultimately became the replicas of Jean Val jean,the reformed protagonist of Victor Hugo's "Les Miserables."In addition to these films, Dada Mirasi also wrote the stories for Sivaji Ganesan films like'Mudhal Thedhi' and'Annai Illam'.
   Apart from working with Sivaji Ganesan,Dada Mirasi did two films for Gemini Ganesan, {Annaavin Aasai and Sangamam} one each with Kalyan Kumar{Thaayillaa Pillai}Jaishankar,{'Raja Veettu Pillai'}and Ravichandran{'Odum Nadhi'}.Dada Mirasi also directed the film 'Poovum Pottum' starring P.Bhanumathi in the main role.During his brief stint of making films, Dada Mirasi tried his best to give variety in theme,story telling and character portrayals. Though 'Pudhiya Paravai' travelled between breeze and storm,his other films revolved around personal and family emotions and redeemingly ennobling experiences that each one encounters in their lives.Excepting 'Raja Veetu Pillai' which was an exclusive and successful action masala,all his other films not only carried fascinating titles,but were also true to their titles,incorporating relevant content in narration,to justify those titles.
    'Pudhiya Paravai','Moonru Dheivangal''Annaavin Aasai'Thaayilaa Pillai'and 'Poovum Pottum' could be called his special movies.Each of the films was different from the other and after watching the nine films of Dada Mirasi one could  categorically state that he was never a stereotyped film maker and he enjoyed filming on different themes,narrating totally different cinematic events, involving notable celluloid portrayal of characters,with unflinching commitment to the tradition and culture of the Tamil soil.
    However,his name will mostly live in audience memory,as the brilliant maker of'Puthiya Paravai',an epoch making film in the career of Sivaji Ganesan.So long the exemplary songs"Paartha Gnaabakam Illaiyo""Sittukkuruvi Mutham Koduthu"and Enge Nimmadhi"keep ringing in the ears of the audience,they will instantly switch on the recall button,for a revisit of the elegant and ecatatic scenes of'Puthiya Paravai',so as to perpetuate the glories of Tamil Cinema,besides commemorating the authentic,creative singularity of Dada Mirasi.
  P.S:- I earnestly searched for a photo of this fabulous film maker,but could not find one,in any website.