Saturday, July 24, 2021

பரம்பரை பலம்

 


  ஒரு திரைப்படம் துவக்கம் முதல் இறுதிவரை மையப்புள்ளியை நோக்கியே பயணிப்பது எளிதல்ல.ஆனால் அதுவும் முடியும் என்பதை அழுத்தமாகவும் ஆழமாகவும் வெள்ளித்திரை காட்சிகளாய்,பரபரப்புடன் தொடங்கி அதே ஆர்ப்பரிப்புடன் தொடர்ந்து,அசுர வலிமையில் பரம்பரை கௌரவத்தை நிலைநாட்டுவதே,'சார்பட்டா'பரம்பரை.

    குத்துச் சண்டையை குதூகலத்துடன் திரைமுழுக்க கொண்டாடிய வேறு ஒரு தமிழ்ப்படம் இருக்க வாய்ப்பில்லை.இத்திரைப்படத்தின் தனிச்சிறப் பாக விளங்குவது அனைத்து நடிகர்களின் உடல்மொழியும் வாய்மொழியு மாகும். 

  ஆர்யா தொடங்கி,பசுபதி,ஜான் விஜய்,கலையரசன்,துஷாரா விஜயன் பிரியதர்ஷனி ராஜ்குமார்,அனுபமா குமார்,போன்ற எல்லா நடிகர்களுமே செயற்கைத்தனம் சிறிதுமின்றி திரை நிகழ்வுகளில் ன்றிப்போயிருக் கிறார்கள்.கோபமும் ஆக்ரோஷமும் இல்லையெனில்,குத்துச் சண்டை  விளையாட்டு மேடையில்,வீரத்துடன் ஆட்டத்தின் நளினங்களையும் நெளிவுசுளிவுகளையும் துல்லியமாக பிரதிபலிக்க இயலாது 

   கபிலனாக ஆர்யாவின் ஆவேச உணர்வுப்பிழம்புகளும்,வெற்றிச்  செல்வனாக கலையரசனின் ஆற்றாமையும்,வெறியாட்டம் கொண்ட  வெம்புலியாக ஜான் கொக்கனும்,Dancing Rose ஆக அங்க அசைவுகளினால் குத்துச் சண்டைக்கு வித்தியாசமான பரிமாணம் வழங்கிய ஷபீர்  கல்லரக்கலும்{Shabeer Kallarakkal} அற்புதமாய்க் களம் கண்டு நெஞ்சில் நிறை கிறார்கள். 

  'தூள்'திரைப்பட காலத்திலிருந்து பசுபதியின் சென்னைத் தமிழ் தனி அழகுதான்.ஜான் விஜய் தனது நடிப்பு பாணியை முற்றிலும் மாற்றிக் கொண்டு எம்.ர்.ராதாவின்,மணிவண்ணனின் இல்லாமையை,புதுமை யாய் பூர்த்தி செய்கிறார்.

  'மெட்ராஸ்' திரைப்படத்திற்குப் பிறகு ப.ரஞ்சித் இயக்கத் துள்ள லில் வேகத்தைக் காண்கையில்,அவர் 'கபாலி'மற்றும்'காலா'திரைப்படங் களில் நிறையவே ரஜினிக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

   படம் முழுக்க சென்னைத் தமிழில் குளித்தது போன்ற மனப்பிரமை.               ப.ரஞ்சித்துடன் இணைவதில் எப்போதுமே சந்தோஷ் நாராயனுக்கு தனிக்கொண்டாட்டம் தான்.பின்னணி இசையில் படம் முழுக்க பரவச மூட்டுகிறார். 

  கடந்த நூற்றாண்டின் எமெர்ஜென்சி காலகட்ட நிகழ்வுகளோடு கதைக் களம் அமைந்திருந்தாலும்,கௌரவப்பிரச்சனை கதையின் மூலக்கரு என்பதால்'சார்பட்டா'பரம்பரை கௌரவத்தை முழுமூச்சுடன் நிலை நாட்டுகிறது. 

  இடைவேளைக்குப்பின்னர் வரும் காட்சிகளில் இரைச்சலை சற்று குறைத்திருந்தால்,பரம்பரையின் கம்பீரம் கூடியிருக்கும்.மொத்த படப் பிடிப்பின் பெருமையையும் பிரம்மாண்டத்தையும்,ஜி.முரளி தட்டிக் கொண்டுபோகிறார்.

    திரையரங்குகளில் வெளிவரும் வாய்ப்பைப் பெற்றிந்ததால்,அபரிமித வரவேற்பைப்பெற்று,அதிக நாட்கள் அரங்கம் நிறைந்து சார்பட்டா பரம்பரை,மேலும் பலம்பெற்றிருக்கும்!. 

2 comments:

  1. Good review. Iam yet to see the second half of the film. Dancing Rose character has done well.

    ReplyDelete
    Replies
    1. Dancing Rose is played by Shabeer Kallarakkal

      Delete