{நினைவஞ்சலி}
உயரம் சற்றே குறைந்திருந்தாலும் திறமையால் உயர்ந்திருந்த இயக்குனரும் நடிகருமான T.P. கஜேந்திரனின் மறைவை யும் சேர்த்து,தென்னிந்திய திரைத்துறை, தொடர்ந்து மூன்று தினங்களாக,கனமான இழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச் சித்திர நடிகைT.P முத்துலட்சுமியின் வம்ச வழியில் வந்த T.P.கஜேந்திரன்,அந்த நகைச் சுவை நடிகையின் இயல்பான கேலி கிண்டல் திறனை,தன்வசம் வலுவாகக் கொண்டிருந்தார்.அவர் இயக்கிய திரைப்படங்களில் கார்த்திக் முத்துராமன் நடித்த'பாண்டி நாட்டுத் தங்கம்',பிரபு நடித்த'பட்ஜட் பத்மநாபன்','மிடில் க்ளாஸ் மாதவன்'மற்றும் 'பந்தா பரமசிவம்', ராமராஜன் நடித்த'எங்க ஊரு காவக்காரன், ராஜ்கிரன் நடித்த 'பாசமுள்ள பாண்டியரே', ரமேஷ் அரவிந்தின் 'பாட்டு வாத்தியார்', பிரசன்னாவின் நகைச்சுவை திரைப்பட மான 'சீனா தானா' (மலையாள திரைப்பட மான'சி.ஐ.டி மூசா'திரைப்படத்தைத் தழுவி யது)ஆகியவை அனைத்துமே,நினைவில் தங்கும் படைப்புகளாகும்.
அவர் நிறைய திரைப்படங்களில் சுயநல மிக்க அரசியல்வாதியாகவும்,ஊழல்அரசு அதிகாரியாகவும்,குணம் குறைந்த கதாபாத்திர மேற்றிருந்தாலும்,தனது தோற்றத்தாலும், குரல் குழைவினாலும் உடல் துள்ளளி னாலும்,பார்ப்போர் விழிக ளிலும் நினைவு களிலும் பரவசமான முத்திரை பதித்தார். பார்த்தவுடன் களிப் பூட்டும் நடிகர்கள் வரிசையில் தனியிடம் பிடித்தார்.
அவர் நடித்த பல திரைப்படங்களில் 'திருமலை' திரைப்படத்தில் கருணாஸின் தந்தையாக அவர் ஏற்ற குணச் சித்திர கதாபாத்திரமும்'பேரரசு'திரைப்படத்தில் பேராசைமிக்க அரசியல்வாதியாகத் தோன்றி பிரகாஷ் ராஜிடம் "ஒன்ன ஒழிச்சு கட்டாம விடமாட்டேன்" என்று கூற அதற்கு பிரகாஷ் ராஜின் "மொதல்ல உன் வேட்டிய ஒழுங்கா கட்டப்பாருடா"எனும் வசை மொழியை வாங்கிக்கட்டிக்கொள்ளும் காட்சியும்,அவரை உணர்வுகளுக்குட்பட்ட நடிகராகவும்,எதிராளியின் நக்கல் நைய்யாண்டிக்கு தன்னை ஒரு காட்சிப் பொருளாக்க,அவர் ஒரு போதும் தயங்கிய தில்லை எனும் நிலைப்பாட்டினையும் தெள்ளத் தெளிவாக்கின.
தோற்றத்தை பின்னுக்குத் தள்ளி தன் திறமையை திரையுலகுக் காணிக்கை யாக்கி,எளிமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய இயக்குனரும் நடிகருமான T.P கஜேந்திரனை,நிசமுடன் நினைவில் வைத்துக் கொண்டாட,தமிழ்த்திரையுலகு நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment