Tuesday, January 16, 2024

சத்தியத்தின் நிழலில் (posted on 3rd Feb 2024.)

  "தன்னை வென்றால் யாவும் பெறுவது, சத்தியமாகும்" என்கிறார் மகாகவி பாரதி. உண்மைக்கு உரமேற்றிய உறுதியான நிலைப்பாடே சத்தியமாகும். இந்த உறுதி நிலைப்பாட்டை பற்றி நின்றால், ஆலமர மென அடர்ந்து உயர்ந்து,சமூகத்திற்கே நிழலாகி நன்மை பயக்கலாம். இலக்கிய மும் இதர தத்துவம் சார்ந்த படைப்புகளும் சத்தியத்தை மனசாட்சியின் மறுவடிவாக  பிரதிபலிக்கின்றன.திரைப்படங்களும், தலைப்புகளாலும் பாடல்களாலும் சத்தியத் தின் மகத்துவதை வலுவாக பிரதிபலித்த துண்டு. தமிழ்த்திரைப் படங்களும் இந்த முயற்சியில் ஒருபோதும் பின்தங்கிய தில்லை. 

  தமிழ்திரைப்பட தலைப்புகளில்'சத்யம்', 'இது சத்தியம்','தாய்மீது சத்தியம்''சத்தியம் நீயே''சத்திய சோதனை'போன்ற திரைப் படங்கள் மனதில் எப்போதும் இடம் பிடிக்கும்.இத்தலைப்புகளைக் காட்டிலும் சத்தியம் பற்றிய பல பாடல்கள்,சாகா வரம் பெற்ற வையாகும்.'மலைக்கள்ளன்'திரைப் படத்தி லேயே"எத்தனைக் காலந்தான் ஏமாற்று வார் இந்த நாட்டிலே'' பாடலினி டையே,

"சத்தியம் தவறாத உத்தமர் போலவே 

நடிக்கிறார்;

சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்"

  என்று சத்தியத்தை சர்க்கரைப் பொங்க லாக நினைத்து,இனிக்கப்பேசி ஏமாற்றும் நபர்களைச் சாடியது.பின்னர் தேவரின்'நீல மலைத் திருடன்'திரைப்படத்தில்,

"சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" 

    எனும் உன்னதமான பாடலைக் கேட்டு ரசித்தோம்.அதன்பின்னர் 'இது சத்தியம்' திரைப்படத்தில்,

"சத்தியம் இது சத்தியம்

எல்லாம் வல்ல இறைவனின் ஆணை

சொல்லப்போவது யாவையும் உண்மை

சத்தியம் இது சத்தியம்"

 எனும் தத்துவத்துளிகள் நிறைந்த பாடல், நெஞ்சுக்குள் நேர்மையாய் ஒலித்தது.

இதைத்தொடர்ந்து 'அன்னையும் பிதாவும்' திரைப்படத்தில்

"சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்

தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்"

 என்ற வித்தியாசமான பாடல்,சத்தியத்தில் தத்துவத்தையும்,தத்துவத்தில் சத்தியத் தையும் இரண்டறக்கலந்தது.

  மனிதனையும் சத்தியத்தையும் இணைத்தே உலாவந்த பாடல்களிலிருந்து வேறுபட்டு,பசுவை சத்தியத்தின் சின்ன மாக்கிய பாடலாக'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்தில்,

"சத்தியம் நீயே தர்மத்தாயே

குழந்தை வடிவே தெய்வமகளே" 

  என்ற வரிகள் பசு,குழந்தை,சத்தியம் ஆகியவற்றை முப்பரிமாணமாக்கியது.

  மீண்டும் தேவரின் படமான 'தாய் மீது சத்தியம்' திரைப்படத்தில்

"சத்தியத்தின் தத்துவத்தை நம்படா

அதன் சக்தியே உனக்குத்தரும் தெம்படா"

  எனும் பாடல் கம்பீரமாய் ஒலித்து சத்தியத் தின் நிழலில் நம்மை இளைப்பாறச் செய்தது.பின்னர் 'கிரஹப்பிரவேசம்' திரைப்படத்தில் உணர்வுகளால் நம்மை உலுக்கிய,

"சத்தியத்தின் சோதனைக்கு எத்தனைபேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங் களைக் காட்டி"

   எனும் பாடல் உருக்கமாய் நம் செவிகளில் விழுந்து விழிகளை கண்ணீரால் நிரப்பியது.

 சத்தியத்தின் சாட்சியமாக எழுந்த டி.எம்' எஸ்ஸின் குரல் வீச்சினைக் குறைத்து, குழைந்து இதமாய் கேட்கப்பட்ட பாடலே, 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில்"கடவுள் இருக்கின்றார்"எனும் பாடலுக்கிடையே சத்தியத்தை சாகா வரமாக்கிய

 "புத்தன் மறைந்துவிட்டான் 

அவன் தன  போதனை  மறைகின்றதா?

 சத்தியம் தோற்றதுண்டா 

உலகில் தர்மம் அழிந்ததுண்டா" 

  எனும் வரிகள்,சத்தியத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் போற்றுதலையும் அறுதியிட்டு உறுதிப்படுத்திமன. 

  இவற்றை எல்லாம் கடந்து 'பஞ்சவர்ணக் கிளி'திரைப்படத்தில்

"சத்தியம் சிவம் சுந்தரம்

சரவணன் திருப்புகழ் மந்திரம்"

  எனும் பாடல் வரிகள் சத்தியத்தின் அழகை சிவனெனும் மோட்சமாக்கி, திருப்புகழின் மாட்சியினை சரவணனின் பாதங்களில் சமர்ப்பித்தது.

  மேற்கண்ட பாடல்களில் P.சுசிலா பாடிய கடைசியில் குறிப்பிட்ட பாடல் தவிற,இதர அனைத்து பாடல்களையும் டி.எம்.சௌந்த ராஜன் தனது உரத்த,தெளிவான குரலால் உயர்த்திப்பாடி,சத்தியத்தின் மேன்மையை சரித்திரமாக்கினார் என்றால் அது மிகையா காது.இப்பாடல்கள் என்றும் நிலைத்து நிற்ப தற்கு தமிழ் மொழியின் உச்சரிப்புப்பிறழா டி.எம்.எஸ்ஸின் தனித்தன்மை வாய்ந்த கனத்த குரலும்,தலையாய காரணங்களில் ஒன்றாகும்.

  'மலைக்கள்ளன்'பாடலை தஞ்சை N..ராமைய்யாதாஸ் எழுத எஸ்.எம். சுப்பை ய்யாநாயுடு இசையமைத்திருந்தார்.'நீல மலைத் திருடன்'பாடலை அ.மருதகாசியும் 'தாய்மீது சத்தியம்'பாடலை பரணியும் எழுதியிருந்தனர்.இறுதிப்பாடலை வாலி யும்,இதர பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் கருத்துச் செறிவுடனும் கவிதை வரிகளாக்கினார்.

  'நீலமவைத்திருடன்'மற்றும் 'மாட்டுக்கார வேலன்'திரைப்படங்களுக்கு கே.வி.மகா தேவனும்,'தாய்மீது சத்தியம்'பாடலுக்கு சங்கர் கணேஷும்,இசயூட்டியிருந்தனர். மற்ற பாடல்கள் எல்லாமே,எம்.எஸ்.விஸ்வ நாதன் தனித்தும்,ராமமுர்த்தியுடன் இணைந்தும் மெல்லிசை களம்கண்டார்.

   சத்தியத்தின் நிழலில் சறுக்கலின்றி இளைப்பாறுவோர்க்கு,மகாத்மா காந்தி எழுதி வைத்த சத்திய சோதனை பக்கங்கள் எண்ணற்ற சோதனைகள் இடையிடையே வந்தாலும்,எல்லாவற்றையும் கடந்து சத்தியம் வெல்லும் என்பதை வாழ்க்கை யின் பாடமாக்கியது.சத்தியமே லட்சிய மாய்க் கொண்டவர்க்கு,என்னாளும் வாழ் வில் தோல்வியில்லை என்பதற்கு,சத்தியம் போற்றும் மனிதர்களின் மனமே அவர வர்க்கு ஏற்றமிகு சாட்சி.

              ===============0================




1 comment:

  1. சத்தியமே பத்தியமாய்க் கொண்டவர்கள், பாக்கியவான்கள்

    ReplyDelete