எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எனும் வள்ளுவனின் குரள் வழிப் பயணிக்கையில்,''யார் எனும் சொல்லின் அடையாளமின்மையையும், தெளிவின் மையையும், உணரமுடியும்.யார் சொல் கேட்பதோ அல்லது யார் வழி நடப்பதோ என்பதெல்லாம்,வாழ்நாள் குழப்பங்களே! 'யார்'எனும் சொல்லின் அடையாள மின்மை,தமிழ் திரைப்படத் தலைப்புக ளாகவும்,எண்ணற்ற பாடல் வரிகளாக வும், கண்டும் கேட்டும்,யார்தான் குழம்பா மல் இருப்பார்களோ!அதனை யார்தான் அறிவரோ!.
'அவள் யார்?''யார் நீ?' 'யார் பைய்யன்?' 'யார் குழந்தை?' 'நான் யார் தெரியுமா?' 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ?' 'யாருக் குச் சொந்தம்?''யாரடி நீ மோகினி?' போன்ற எல்லா திரைப்பட தலைப்புகளும் அறியாமையையோ,அல்லது அறியத் துடிக்கும் வேட்கையையோ, வெளிப்படுத் துவதை அறியலாம்.
"நான் யார் நான் யார் நான் யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்"
எனும் 'குடியிருந்த கோயில்' திரைப் படத்தின் டி .எம்.சௌந்தராஜன் பாடலைக் கேட்கையில்,வரிக்கு வரி.'யார்' எனும் சொல் தோன்றி,யார் எனும் சொல்லின் குழப்பத்தின் குடியிருப்பை,தொடர்ந்து வெளிப்படுத்து வதை உணரலாம். புலமைப்பித்தனின் இந்த அற்புதமான பாடலுக்கு, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
அதே டி.எம்.எஸ் 'சாந்தி' திரைப்படத்தில்
"யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு"
என்று பெண்ணை நிலவாக்கி,அதில் நிலவின்,பெண்ணின் அடையா ளத்தை, ஒருசேர தொலைத்து,வியப்புடன் விவரங் களை அறியக்காத் திருக்கும் ஒரு ஆணின் நிலையினை,கவித்துவதுடன் பாட,அப்பாடல் கண்ணதாசனையும் விஸ்வநாதன் ராமமூர்த்தியையும்,இசை ரசிகர்க ளின் எண்ணங்களுடன் கட்டிப் போட்டது.
'பார்த்தால் பசிதீரும்' திரைப்படத்தில் விஸ்வநாதன் இசையில் P.சுசீலா பாடிய கண்ணதாசன் வரிகளைக் கொண்ட,
"யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருப்பாரோ"
எனும் பாடல்,ஒரு பொதுவான தேடலைக் குறிப்பிட, அதே கண்ணதாசன் 'என் கடமை'திரைப்படத்திற்கு எழுதிய,
"யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா
ஊறிடும் தேனதன் வெட்கமா"
எனும் வரிகளை விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில் டி.எம்.சௌந்தராஜன் பாட ,அவ்வரிகள் சொந்தத் தேடலை, தொலைபேசிமூலம் சுவாசிக்கச் செய் தன.இந்த வகையில் ஒன்றுக் கொன்று மாறுபட்டிருக்கும் வேறு சில பாடல்களாக , 'பாசமலர்' திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B. ஸ்ரீனிவாசும் P.சுசீலாவும் பாடிய, கண்ணதாசன் வரிகளான,
"யார் யார் யாரிவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ"
எனும் பாடலையும்,
'உன்னை நினைத்து'திரைப்படத்தில் பா.விஜய் வரிகளமைத்து சிற்பியின் இசையில் உன்னிமேனன் பாடிய,
"யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை"
எனும் பாடலையும் பொதுத்தேடலின் புள்ளிவைத்த வரைவுகளாகவும், 'உத்தமபுத்திரன்' திரைப்படத்தில் ஜி.ராமநாதன் இசையில் டி .எம்.எஸ் பாடிய,
"யாரடி நீ மோஹினி
கூறடி என் கண்மணி"
எனும் நேரடி அடையாளத் தேடலையும் குறிப்பிடலாம்.
சில நேரங்களில் 'யார்'எனும் சொல் நம்பிக்கைக்கு உத்திரவாதம் அளிக்கா நிலையையும் ஏற்படுத்தக்கூடும்.அந்த கோணத்தில் அமைந்த இரு பாடல்களே,
'பறக்கும் பாவை' திரைப்படத்தில் P. சுசீலா பாடிய,
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்"
எனும் விரக்தியில் துவண்டுபோனப் பாடலும்,அந்த விரக்தியை துணிந்து எதிர்கொள்ளும் 'எங்க ஊர் ராஜா' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய,
"யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க"
எனும் துரோகத்தை தூக்கி எரியும் பாடலு மாகும்.இந்த இரண்டு பாடல்களை யுமே கண்ணதாசன் எழுத எம்.எஸ்.விஸ்வ நாதன் மனம் கலங்க இசையமைத்திருந் தார்.
சிலர் காதலிக்காக தாஜ்மஹால் போன்ற மாளிகையை கட்டிவைத்து, அதில் தன் உயிரோடு கலந்த காதலி, வாழ்க்கைப்படியில் கால்பதிக்க மறுக் கையில்,
"யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை"
என்று உரக்கப்பாடி மன உளைச்சலை ஓரம் கட்டுவர்.
கே.வி.மகாதேவன் இசையில் விண்ணை முட்டிய'வசந்த மாளிகை' திரைப்படத்தில் கண்ணதாசனின் வரிகளால் உரக்கக்குரல் எழுப்பிய இப் பாடல், யார் யாரை நெஞ்சுருகி கதற வைத்திருக்குமோ,அன்றைய திரையரங் குகளே அறியும்!
மனித மரணத்தின்வாக்குமூலமாக அமைந்த'வாழ்வே மாயம்' திரைப் படத் தில் கங்கை அமரன் இசையில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய,'வாழ்வே மாயம்' பாடலில் கூட.
"யாரோடு யார் வந்தது
நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது"
என்றும்,
"யார் யார்க்கு என்ன வேடமோ
இங்கே
யார் யார்க்கு எந்த மேடையோ"
என்றும் வரிகள் முளைத்து,சோக மரங்களாகும்.
வாலியின் வலிநிறைந்த இவ்வரிகள் யார் யார் மனதில் துன்ப மேகங்கள் சூழச் செய்ததோ அதை வாலிதான் அறிவாரோ!.
"என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று
நீ கேட்கிறாய்"
என்று 'பாலும் பழமும்'திரைப்படத்தில் கட்டிய மனைவியைக் காண இயலாத, அவர் யாரென்று அறிய முடியாத பார்வை இழந்த கணவனும், பார்வை இருந்தும் தான்தான் அவரது மனைவி என்று காட்டிக்கொள்ள முடியாத மனைவியும் பாடுவதாக அமைந்த பாடல்,என்ன ஒரு கொடுமையான அனுபவம்!.இந்தக்காட்சி யும் அக்காட்சி பாடல்வழி படமாக்கப்பட்டி ருந்த விதமும், தமிழ்த்திரைப்பட வரலாற் றில் வாழ்வியல் புதிராய் அமைந்திருந் தது.கண்ணதாசனின் கனமான இவ் வரி கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் காலம் கடந்து களைகட்டுகின்றன.
அன்போ காதலோ,யாரின் மனப்பிடியில் யாரிருப்பர் என்ற உண்மையை,
"யார் மனதில் யாரிருப்பர்
யாரறிவார் உலகிலே"
என்று மனக்குமுறலாய் கவிதை வரி களை உள்ளடக்கி,'காத்திருந்த கண்கள்' திரைப்படத்தில் சீரகாழி கோவிந்தராஜன் பாடிய,
"ஓடம் நதியினிலே ஒருத்திமட்டும் கரயைினிலே"
எனும் கருத்தாழமிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான பாடல், உள்ளங்களை ஊஞ்சலாடச் செய்திருக் கும்.'யாரின்' பிடியில் இன்னும் எத்தனை யோ பாடல்களுண்டு.யாராலும் புதிர்ககள் பல சுமந்த வாழ்விற்கு விடைகாண இயலாது.யார் யார் மனதில்,யார் யாரெல் லாம் மனம் குழப்பம் விதவிதமாய் விதைக்கின்றனரோ!யார் யாரெல்லாம் சிந்தனைத் தெளிவுடன் சிறகடித்து செயல்வானில் பறக்கின்றனரோ!
==============0===============