"நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் பயக்க"
என்று 'அகத்தியர்'திரைப்படத்தில் நதியை நாட்டின் நன்மைக்கென கம்பீர மாய் நடக்கச்செய்த,குன்னக்குடி வைத்தியநாதனின் மேலோங்கிய இசை யில்,சீர்காழி கோவிந்தராஜன் உரக்கக் குரலுயர்திப்பாடிய,K.D சந்தானத்தின் சத்தான வரிகள்,தமிழ்த்திரைக்கு வினோ தமான நடைமேடையை அமைத்துத் தந்தன.
மாறாக,'ஆசை அலைகள்' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன் இசைய மைத்து டி.எம்.சௌந்தராஜன், உள்ளத் தில் சோகமும் விரக்தியும் நிறைந்து வேல்பாய்ச்சிய பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகள்,
"நடந்து வந்த பாதையிலே
நாலு பக்கம் பார்த்துவந்தேன்
நல்லது கேட்டது புரியவில்லை
நல்லவர் எல்லாம் வாழ்வதில்லை"
என்று பாதச்சுவடுகளால் மனதின் வலியினை நடைமேடையில் அழுத்திப் பதித்தன.
அதே நேரத்தில் 'அரச கட்டளை' திரைப் படத்தில் டி.எம்.எஸ்ஸும் P.சுசீலாவும் பாடிய,
"வேட்டையாடு விளையாடு
விருப்பம்போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றி எனும் கடலில் ஆடு"
எனும் ஆலங்குடி சோமுவின் வரிகள், கே.வி.மகாதேவன் இசையில் வீரத்தால் கால்களை உந்திவிட்டு, வெற்றியினை நடைமேடைக்குக் காணிக்கை ஆக்கியது.
நடையின் லாவகங்கள் காதலால் கவரப் பட்டு, நடைமேடைக்கு நளினமூட்டுவ துண்டு. இவ்வகையில்'பரிசு' திரைப்படத் தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய,
"பட்டுவண்ண சிட்டு படகுத்துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையாடி அன்ன நடை போட்டு"
என்று காதலியின் நடையழகை கண் ணியமாய் ரசித்ததும்,அன்ன நடைக்கு அழகூட்டி,காதலிக்கு சொல்லலங்காரம் கூட்டிய,'முதலாளி' திரைப் படத்தில் கே.வி மகாதேவனின் இசையில் டி.எம். எஸ் பாடி,ராகத்திற்கு மெருகூட்டிய,க.மு. ஷெரீபின்,
"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே"
எனும் பாடலுக்கு இடையே தோன்றும்,
"அன்னம் போல நடை நடந்து
சென்றிடும் மயிலே
ஆசை தீர என்னைக் கொஞ்சம்
பாரு நீ குயிலே"
எனும்,கிராமத்துக் காதல் கிளர்ச்சியூட்டி பெண்மைக்கு நடைமேடை அமைத்துக் கொடுத்த வரிகளும்'பாஷா'திரைப்படத் தில் வைரமுத்துவின் வரிகளிலும் தேவா வின தேனிசையிலும் அமைந்த
"அழகு
நீ நடந்தால் நடையழகு
நீ பேசும் தமிழழகு"
என்று எஸ்.பி.பி யும்,கே.எஸ்.சித்ராவும் குரல் குழைந்து நடைமேடை படைத்த வரிகளும்,எஸ்.பி.பி பாடிய,
"யே பாஷா பாரு பாஷா பாரு
பட்டாளத்து நடையைப்பாரு
பகை நடுங்கும் நடையைப்பாரு
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் நடையை ப்பாரு"
எனும் வீர நடை.ப்பாடலும்,கே.ஜே. ஏசு தாசும் சித்ராவும் பாடிய
"தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்"
என்று நடையின் நெருக்கத்தை நேசித்த பாடலும்.ஒரே திரைப்படத்தின் மூன்று நிலைகளில், பல நடை பாவனைகளை போற்றுதலுடன் பறைசாற்றின. இவை அனைத்துமே கவிதை வரிகளின் நெரிசலில்லாப் பாதப் பயணங்களாம்.
காதலில் நடையை நைய்யாண்டி செய் வதும் கனிவுடன் கரிசனம் காட்டுவதும் உண்டு 'அன்னை இல்லம்' திரைப்படத் தில் டி.எம்.எஸ் பாடிய,கண்ணதாசனின்,
"நடையா இது நடையா
ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா அது இடையா
அது இல்லாதது போல் இருக்குது"
என்ற வரிகள் கே.வி.மகாதேவன் இசை யில் களிப்புடன் நடைமேடை ஏறின. நடை யில் கரிசனம் காட்டி கண்ணதாசனின் எழுதி,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை யில் 'புதிய பறவை' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய,
"ஆஹா மெல்லநட மெல்லநட
மேனி என்னாகும்
முல்லைமலர் பாதம் நோகும்"
என்று காதலியின் பாதம் நோகாமல் நடைபயிலச்சொல்லும் பாடல், நடை மேடைக்கு நலங்கு நடத்தியது.
இந்தக்கரிசனத்துக்குக் கொஞ்சம் கனம் ஏற்றி,காதலனின் வேதனையை விளிம் புக்குக் கொண்டுவந்த,
"காலடித் தாமரை
நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்
இந்தக் காதலன் உள்ளம் புண்ணாகும்"
எனும் வாலியின் மகத்தான வரிகளை உள்ளடக்கிய,''பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்''எனும்'பணம் படைத்தவன்' திரைப்படப்பாடல்,விஸ்வ நாதன் ராமமூர்த்தி இசையில், காதலி யின் பாதங்களுக்கு சொல் மலர்களால் நடைமேடை அமைத்துக் கொடுத்தது.
இதுபோன்ற எத்தனையோ நடையலங் காரக் கவிதை வரிகள் தமிழ்த் திரையில் நடைமேடைகட்டி, அதற்குள் மயில் தோகைச் சொற்களால் மணம்கமழும் தோரணங்களைத் தொங்கவிட்டன.பாடல் களைக்கடந்து 'ராஜ நடை','வீர நடை' போன்ற திரைப்படத் தலைப்புகளையும் தமிழ்த்திரை தந்தது.
===============0=================
"காலடித் தாமரை
ReplyDeleteநாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்
இந்தக் காதலன் உள்ளம் புண்ணாகும்" நிலம் இரணகளமானாலும், காதலன் உள்ளம் புண்ணாகும் என்பதால் தன் நடை களை ந்திருப்பாள் நாயகி.
நடையழகு தொகுப்பு வெகுசிறப்பு
ReplyDelete