{தாமதப் பதிவிற்கு,முதலில் திரு.பார்த்திபன் மன்னிக்க வேண்டுகிறேன்}
சித்தப்பிரமை காட்டி
சீறிவரும் சிந்தனையாய்,
ஒத்தையாய் இருந்து
மொத்தத் திரையையும்
அத்தனை சமர்த்தாய்
கொத்தித் தீர்த்தாய்!
காசிலா மணியாகி
மாசிலா மணியாக,
மானம் திண்பவரை
மாஞ்சா கயிற்கொண்டு
மாய்ந்திடச் செய்தாய்!
வாழைப்பூ வடைகூட
வாய்நிறையக் குறும்போடு,
வார்த்தைகளால் வறுத்தெடுத்தாய்!
வாழப்பிறந்த மகன்
வாழும்நாள் குறிக்கப்பட,
காயத்தில் மனம்கனக்க
சாயம்பல வெளுத்திட்டாய்.
பேசும் படங்களும்
பேசாத படங்களும்
கூசிடும் திரைகுறுகி,
ஒத்தை செருப்பு
ஓங்கி அறைந்திட.!
ஒளியில் ஒன்றாகி,
ஒலிகள் பலவாகி
வலிகள் வார்த்திடவே,
பலமான திறமைக்கு
பாராட்டு நிறையாமை,
பெருமாள் அறிவாரோ
பார்த்தன் பெறும்வலியை? .
ப.சந்திரசேகரன் .
I liked the movie..very intelligent screenplay
ReplyDelete