Saturday, July 19, 2025

காவியக் கலைஞரின் திரை வாரிசுக்கு அஞ்சலி.


  அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்த்திரை உலகில் பிரவேசித்து ஏழு திரைப்படங்கள் மட்டுமே நடித்து அவற்றில் 'பிள்ளையோ பிள்ளை''பூக்காரி''சமையல்காரன்' 'அணையா விளக்கு'என்ற நான்கு திரைப் டங்களை நினைவில் நிற்கச் செய்த காவியக் கலைஞரின் திரை வாரிசான மு.க.முத்து, இன்று நம்மிடையே இல்லை.

  கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் மாற்றாக திரை யில் கொண்டுவரப்பட்டு இதமாக தமிழ்த் திரையை அலங்கரித்தார் மு.க.முத்து. பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு,மு.க.முத்துவின் திரை வாழ்க்கையும் திசைமாறி முடிவுற்றது.

   நடிப்பில் மட்டுமல்லாது பாடுவதிலும்  தேர்ச்சி பெற்ற மு.க.முத்து 'அணையா விளக்கு'திரைப்படத்தில் மூன்று பாடல்களை பாடியிருந்தார்.அவற்றில். 

"கூன்பிறையைத் தொழுதிடுவோம.

குர் ஆனை ஒதிடுவோம்;

மேன்மை மிகு மெக்காவின் திசை

நோக்கி பாடிடுவோம்"

என்று தொடங்கி,

"நல்ல மனதில் கூடியிருக்கும்

நாகூர் ஆண்டவா"

  எனும்பாடல் தனிச்சிறப்புப் பெற்றது. அப்படத்தில் மு.க.முத்து பாடிய,

"பிள்ளயையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டிவிட்டு"

 பாடலும்  கேட்டு ரசிக்கும்படயாகவே இருந்தது.'சமையல்காரன்'திரைப்படத் தில் அவர் பாடிய,

"சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் 

பேருங்க

நான் சொத்தா நினைக்கிறது ஒங்க

அன்பத்தானுங்க"

எனும் ரசனை உள்ளடக்கிய பாடலையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

  மு.க.முத்துவின் முதல் இரண்டு படங்க ளான 'பிள்ளையோ பிள்ளை' மற்றும் 'பூக்காரி'ஆகியவை கதைக்களத்திலும், காட்சி அமைப்பிலும்,பாடல்களின் செல் வாக்கிலும்,எம்.ஜி.ஆர்.படங்கள் போலவே அமைந்திருந்தன.

"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னி டமோ

நீ, மூவேந்தர் வழி வந்த மன்னவனோ"

   என்று டி.எம்.எஸ் P..சுசிலா குரல்களில் செவிகளைச் சுண்டியிழுத்த 'பிள்ளை யோ பிள்ளை' திரைப்படப்பாடலும்,

"காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்"

  என்று டி.எம்.எஸ் மற்றும் எஸ்.ஜானகி குரல்களில் நெஞ்சை அள்ளிய உச்சஸ்வர  'பூக்காரி' திரைப்படப்பாடலும் எம்.எஸ். விஸ்வநாதனின் கம்பீர இசையமைப்பில் கேட்போரை  பெருமகிழ்ச்சியிலாழ்த்தின.

  கலைஞரின் கதைவசனத்தில் பட்டை யை க்கிளப்பிய'பராசக்தி'திரைப்படத் தை இயக்கிய இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சுவே மு.க.முத்துவின் 'பிள்ளையோ பிள்ளை''பூக்காரி''சமையல் காரன்'ஆகிய படங்களை இயக்கினர்.

 தமிழ்த்திரையின் சிறிய புள்ளியாக மு.க. முத்து அறியப்பட்டாலும்,அவர் தமிழ்த்தி ரையின் அழியாத கோலமுமாவார் என் பதை, எவராலும் மறுக்க இயலாது. கலை யுணர்வின் கதிர்வீச்சான மு.க.முத்து, காவியக் கலைஞருக்கு பெருமை சேர்த் தார் என்றே உரக்கக்கூறவேண்டும். தமிழ்த்திரை அவரது மறைவின் இரங்கட் பாவை இதயம் நனைந்து பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறது.

             ==== 0======0 =======.0======= 

No comments:

Post a Comment