"கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்"என்பது ஒரு முதுமொழி அறிவுரை. இரண்டிலும் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து அகற்றுவதே மனித வாழ்வில் இலக்குகளில் தலை யானதாகும். பறவைகள் கூட தங்களுக் கென்று கூடுகள் கட்டி குறையின்றி வாழ்கின்றன.
தமிழில் 'சின்ன வீடு'எனும் சொல் சிறிய வீட்டையும்,சற்று கிண்டலாக ஒரு கணவ னின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பெண்ணுறவையும் குறிப்பதை நாம் அறி வோம்.இக்கருத்தின் அடிப்படையில்தான் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ், 'சின்ன வீடு' என்றொரு திரைப் படத்தை இயக்கி அதில் தானே நடித்து, "ஜாக்கிறத ஜாக்கிரத சின்னவீடு ஜாக்கிரத"என் றொரு படத்துவக்க பாடலையும் அறிமுகம் செய்து,அப்படி ஒரு சின்ன வீட்டினால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழக்கூடிய பிரச்சனைகளையும் பக்குவமாய் பதியச் செய்தார்.
இப்படி சின்ன வீட்டை குறிப்பிடும் வண்ணம்'ஒற்றன்'திரைப்படத்தில் இடம்பெற்ற,
"சின்ன வீடா வரட்டுமா
பெரிய வீடா வரட்டுமா
மேஸ்திரிக்கு சின்ன வீடு பிடிக்குமா"
என்ற வேடிக்கையான பாடலையும்'தை பொறந்தாச்சு'எனும் திரைப்படத்தில் ஒலித்த
"குச்சி வீடு மச்சி வீடு மாடி வீடு
கூர வீடு செங்கல் வீடு கருங்கல் வீடு
விதவிதமாய் இருக்கு பல வீடு
எத்தனையோ வீடு இருந்தாலும்
நம்ம சின்ன வீட்டுக்கு நிகராகுமா"
என்று பல சொற்களில் மிதந்து
"சின்ன வீடு சித்திரா
பெரிய வீடு கட்டுறா"
என்று கேலியாய் கிண்டலாய், நகைப்புச்சோலையானது.
ஆணாதிக்கமும் பெண்ணுரிமைக்கு எதி ரான சமூக நிலைப்பாடும் குவிந்திருந்த கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில், பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் நங்கையர்க்கு,புகுந்த வீட்டை முன்னிறுத்தி ஆலோசனைகளும் புத்தி மதிகளும் வழங்கப்பட்ட பாடல்களையும் அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் ரசித்து கேட்டிருக்கக்கூடும்!
அப்படி ஒரு செல்வாக்கு பெட்ற பாடலே' பானை பிடித்தவள் பாக்கிய சாலி'எனும் திரைப்படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய, எஸ்.வி. வேங்கட்ராமனின் இசை யில் உருவான,
"புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே,
தங்கச்சி கண்ணே.
சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே!"
எனும் இன்றைய மகளிருக்கு முற்றிலும் ஒவ்வாத பாடல் வரிகள். இப்பாடலை டி. கே.சுந்தர வாத்தியார் எனும் கவிஞர் எழுதியிருந்தார். இன்றைக்கு இப்பாடல் வரிகள்,பெண்ணடிமைத்தனத்தை முகம் சுளிக்கும் வண்ணம் வெளிப்படுத்தும்!
நமநமில் பலரும் சிறு வயதில் மணல் வீடு கட்டி மகழ்வுறுவதுண்டு.அப்படி ஒரு பாடல் வாழ்க்கை வாழ்வதற்கே எனும் பழைய திரைப்படத்தில் இடம் பெற்றிருந் தது.கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் மெல்லிசையில் உருவான,
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடுகட்டி
தோட்டமிட்டு செடிவளர்த்து
ஜோராகக் கூடியிருப்போம்
எனும் பாடல் இருமுறை இடம் பெற்றது. முதல்முறை லலிதா&ரமாமணியும் இரண் டாம் முறை P.B.ஸ்ரீநிவாஸ் மற்றும் P. சுசி லாவும் பாடியிருந்தனர்.
தமிழ்த்திரை 'வீடு' எனும் சொல்லை விசாலமாய்க் கொண்டாடியிருக்கிறது 'தாய் வீடு' 'ஒரு வீடு இருவாசல்' 'ஒருவீடு ஒரு உலகம்' 'வீட்டுக்கு வீடு' 'எங்க வீட்டு மகாலட்சுமி','எங்க வீட்டுப்பிள்ளை' 'உங்கவீட்டு பிள்ளை' 'எங்க வீட்டுப் பெண்''அடுத்த வீட்டுப்பெண்''எதிர் வீட்டு ஜன்னல்''பெரிய வீட்டுப் பண்ணைக் காரன்''பெரிய வீட்டுப் பிள்ளை''வீட்டுக் கொரு பிள்ளை''வீடு மனைவி மக்கள்' 'வீட்டுக்கு வீடு வாசப்படி''பொறந்த வீடா புகுந்த வீடா'என்று எத்தனை திரைப் படங் கள்! இதுபோன்று இன்னும் சில இருக்கக் கூடும். வெண்திரையை வீடுகளாக நினைத்து வாழும் பல கலைஞர்களுக் கும் இதுபோன்ற தலைப்புகளே சமர்ப் பணம்!
வீடென்று சொன்னாலே அதற்கு முன்னாலே தோன்றுவது,வாசற்படி தானே! அதைத்தான்'கிழக்கு வாசல்' திரைப்படத்தில் வாலி வரிகள் புனைய, இளையராஜா இசையமத்து அவரே பாடிய,
"அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருக்கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்."
எனும் மனசை லேசாக்கும் கூத்துப்பாடல் நினைவூட்டியது.
வீடுகளில் தங்கி வீடுகளைச் சுற்றி வரும் பாடல்களை பொறுத்தமட்டில், ராணுவத்திலிருந்து வீட்டிற்கும் சொந்த மண்ணிற்கும் திரும்பும் எண்ண எழுச்சி களை அற்புதமாய் விளக்கிய பாடலே 'பதி பக்தி' திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்த ராஜன் குழுவினருடன் பாடிய,
"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே"
எனும் மனதில் கிளர்ச்சி ஊட்டும் வரிகளாகும். அதே நேரத்தில் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டு வீதியில் தஞ்சம் புகுவோருக்கு,
"தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதை என்ன"
எனும் தத்துவார்த்த சிந்தனைகளில் வீடென்பதே அர்த்தமற்றுப் போகிறது. 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத் தில் எம். எஸ்.விஸ்வ நாதன் இசையில் கே.ஜே. ஏசுதாஸ் பாடிய,ஈடில்லா கண்ண தாசனின் இவ்வரிகள்,கேட்போரின் நெஞ்சங் களில் எப்போதும் அதிர்வலை களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும்.
இதே கண்ணதாசன் 'பாத காணிக்கை' திரைப்படத்திற்கு எழுதிய,
"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ"
எனும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை யில் டி.எம்.சௌந்தராஜன் பாடிய பாடல், உடலும்,அவ்வுடல் குடியிருக்கும் வீடும், நிரந்தரமில்லா மாயையின் மாட்சிமையே என்பதை,திட்டவட்டமாக எடுத்துரைத்தது.
இக்கருத்தினையே சற்று வித்தியாச மாக 'பாதகாணிக்கை' திரைப்படத் திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான, 'ரம்பையின் காதல்' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,
"சமரசம் உலாவும் இடமே" எனும் பாட லுக்கு இடையே தோன்றும்,
" எல்லோரும் முடிவில் சேர்ந்த்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு"
எனும் A.மருதகாசியின் வரிகள்,டி.ஆர். பாப்பாவின் இசையில் மயானமே மனித ரின் நிம்மதியான,நிரந்தரமான வீடென் றது.
வீட்டின் பெருமை பேசுவதில் தன்னிக ரில்லா தனிநபர் ஆனந்தமும், கூட்டுக் குடும்பத்தின் குணம் பேசும் சுகமான அகமகிழ்ச்சியும்,ஒருசேர உணரமுடியும். இந்த அடிப்படையில் இரு பாடல்களை குறிப்பிடலாம். முதலாவதாக 'ஜென்டில் மேன்' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எஸ்.பி.பி யும் சுஜாதாவும் பாடிய கவிப்பேரரசு வைரமுத்துவின்,
"என் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டு தென்னங்கீற்றை
இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லுமே!"
எனும் வரிகள் வீட்டினுள் சங்கமித்த மனதின் ஆர்ப்பரிப்பை அளவின்றி அள்ளிவீசும்.ஆனால்,'வானதததைப் போல' திரைப்படத்தில் S.A. ராஜ்குமாரின் இசையில் நா.முத்துக்குமார் வரிகளை எஸ்.பி. பி யும் சுஜாதாவுடன் அருள் மொழியும் இணைந்து,
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை"
என்று இல்லத்து மகிழ்ச்சியினை எல்லோருடனும் இணைந்து பகிர்ந்து பாடிட,பாடலைக் கேட்போரின் செவிகளி லெல்லாம் தேனூறியது.
தன் வீட்டைக் கடந்து தன்னைச் சுற்றி வாழும் அனைவர் நெஞ்சங்களிலும் குடியேறி,அவர்கள் வீட்டுப்பிள்ளையாக பாசமழையில் நனையச் செய்த பாடலே, 'புதிய பூமி'திரைப்படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் டி.எம். எஸ் பாடிய,
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை"
என்று உள்ளங்களில் உற்சாகமூட்டிய பூவை செங்குட்டுவனின் பொன்னான வரிகளாகும்.
'வீடு'என்பது தனி மனிதனோடு நில்லா மல் நாட்டையே வீடாக நினைக்கச் செய் யும்.இப்படிப்பட்ட உணர்வைத்தான் 'பாரத விலாஸ்' திரைப்படத்தில் டி.எம்.செளந்த ராஜனும் பி.சுசிலாவும் குழுவினருடன் பாடிய,
"இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு "
எனும் ஒற்றுமை உணர்வினை மேலோங் கச்செய்த கண்ணதாசனின் வரிகள் வின்னளவு ஒலித்தது.
வீடு என்பது இறைவனுக்கும் உகந்த தாகிறது என்பதைத்தான்,'கந்தன் கருணை' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில்,
"அறுபடை வீடுகொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே
வரும் முருகா முருகா"
என்று,கண்தாசன் வரிகளை,கே.வி. மகாதேவேன் இசையில்,கணீரனெ ஒலிக்கச்செய்து,நம்மை எல்லாம் பரவச மடையச் செய்தது.
என்னதான் வீடுகளைப்பற்றி வரி வரியாய் எழுதிப் படித்தாலும்,வீதிகளே வீடென்றும்,வானமே கூரை என்றும், சாலையோரம் படுத்துறங்கும் பலரைப் பற்றி எண்ணுகையில்,நெஞ்சம் பதறு கிறது.மனமென்னும் வீட்டில் மகிழ்ச்சியே பிரதானம்.ஆனந்தம் விளையாடும் வீடாக மனதை மாற்றினால் அதுவே ஆண்டவன் குடியிருக்கும் வீடாகும்.
===============0=================
...... வீடு என்பது இறைவனுக்கும் உகந்த தாகிறது.....❤️
ReplyDelete