"யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே;
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே"
எனும் 'இதயம் பார்க்கிறது' திரைப் படத்தில் டி.எம்.சௌந்தராஜன் பாடிய கண்ணதாசனின் பாடலை கேட்கும் போதெல்லாம், நபிக்கையே நல்வாழ்வின் அடித்தளம் என்பதை, எல்லோராலும் உணர முடியும். இப்பாடலுக்கு டி.ஆர். பாப்பா இதமாய் இசையமைத்திருந்தார்.
"நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் உன் வாழ்க்கை"
எனும் தாரக மந்திரத்தை நாம் ஒரு போதும் மறக்கலாகாது.
நம்பிக்கை என்றொரு சொல்லை நினைத்தாலே, எம்.ஜி.ஆர் திரைப்படங் களில் அவருக்காக டி.எம்.எஸ் பாடிய பல பாடல்கள் நினைவுக்கு வரும். 'பெற்றால் தான் பிள்ளையா' திரைப்படத்தில் இடம் பெற்ற,
"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி"
பாடலும் 'என் அண்ணன்' திரைப்படத்தில்
"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" பாடலுக்கிடையே உதிரத்தில் முறுக்கேற்றும்.
"உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இன்று உன்னைவிட்டால் பூமி எது கவலை விடு"
என்ற வரிகளும்,
"உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி"
எனும் 'ஆசைமுகம்' திரைப்படத்தின் "எத்தனை பெரிய மனிதனுக்கு" என்று தொடங்கும் பாடலின் இறுதி வரிகளும், 'சந்திரோதயம்' திரைப் படத்தில்'புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' பாடலுக்கிடையே தோன்றும்,
"உண்மை என்பது என்றும் உள்ளது,
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஔியாகும்"
எனும் வரிகளும் நம்பிக்கை விதைகளை நாற்திசையும் விதைத்தன. ஆனால் இந்த சிந்தனையிலிருந்து சிறிது மாறுபட்டு, எதை நம்பவேண்டும்,எதை நம்பக்கூடாது எனும் வகையில் அமைந்த பாடலே, 'நினைத்ததை முடிப்பவன்'திரைப்படத் தில் நாம் கேட்டு மகிழ்ந்த,
"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்,நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது;
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்,
பொய்யே சொல்லாதது"
எனும் அற்புதமான பாடல்.இதே கருத் தினை கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லியது,'இருவர்' திரைப்படத்தில் MGR வேடத்தில் நடித்த மோகன்லாலுக் காக ஹரிஹரன் பாடிய,
"கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதை எல்லாம் நம்பாதே தோழா"
எனும் பாடல்.
தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் தலைப்பிலயேே 'உன்னால் முடியும் தம்பி' என்று சொல்லி, அதனையே பாடலாக,
''உன்னால் முடியும் தம்பி, தம்பி,
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி''
என்று எஸ்.பி.பாலசுப்ரணியம் பாடிய, காந்தமாக நம் உள்ளங்களை ஈர்த்த பாடல் நம்பிக்கையின் நாதமானது.
மனித வாழ்வில் பெரும்பாலோர்க்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குவது இறைவன் திருவடிகளே. அப்படி ஒரு உணர்வை முழுமையாகவும் முழக்கமாகவும் வெளிப்படுத்திய பாடலே ஏ.வி.எம் படைப்பில் உருவான 'ராமு' திரைப்படத்தில் டி.எம்.சௌந்தராஜனும் சீர்காழி கோவிந்தராஜனும் பாடிய,
"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"
எனும் உள்ளத்தில் நம்பிக்கையை நாடித் துடிப்பாக்கிய பாடல். இப்படி ஒரு மன நிலையைத்தான் 'ஒளிவிளக்கு' திரைப் படத்தில் P.சுசீலா பாடிய,
"இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு"
என்ற உருக்கமான பாடல்.
இறைவனுக்கு 'ஒளிவிளக்கு' ஏற்றும் அதே நேரத்தில் நம்பிக்கையுடன் பார்த்தால் மட்டுமே கல்லும் கடவுளாய் காட்சி தரும் என்று உணர்த்தியது 'தியாகம்' திரைப்படத்தில் டி.எம்.சௌந்த ராஜன் பாடிய "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு"எனும் பாடலுக்கு இடையே நச்சென்று நெஞ்சில் பதியும்,
'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…"
எனும் அற்புதமான வரிகள். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நம்பிக்கையை சந்தே கிக்கும் வகையில் அமைந்த ஒரு பாடலை 'பறக்கும் பாவை' திரைப்படத்தில் P.சுசீலா பாடியிருந்தார்.
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்"
என்ற வரிகளைக்கொண்ட இப்பாடல் கூட, எம்.ஜி.ஆர் பாடும் பாடலாக அமைய வில்லை.வஞ்சகத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் மனக்குமுறலாகவே அமைந்திருந்தது.
இப்படிப்பட்ட நொந்து போன மன நிலை யையும்அதன் விரக்தியையும் வேறு விதமாக மாற்றி சிந்தித்து,புனையப்பட்ட இரு பாடல்களே,பல ஆண்டு களுக்கு முன்பு வெளியான 'தூக்கு தூக்கி'யில் சிவாஜி கணேசனுக்காகப் டி.எம்.எஸ் பாடிய,
"பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
வீண் பெருமை காட்டி
சிறுமை காட்டும்
பெண்களை நம்பாதே''
என்று விழிகளை,நம்பிக்கையால் வழி நடத்திய பாடலும், அதற்குப் பின்னர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து வெளியான,'எங்க ஊர் ராஜா' திரைப் படத்தில் சிவாஜிக்காக டி.எம்.சௌந்த ராஜனின் குரலில் கம்பீரமாய் ஒலித்த,
"யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க;
என் காலம் வெல்லும்
வென்ற பின்னே,
வாங்கடா வாங்க"
என்று வேதனையில் வீறுகொண்டெ ழுந்த பாடலுமாகும்.மேற்கண்ட பாடல் களில் 'ராமு','என் அண்ணன்','எங்கள் தங்கராஜா''தியாகம்' படப்பாடல்களை கண்ணதாசனும்,'உன்னால் முடியும் தம்பி' பாடலை புலமைப்பித்தனும்,'நினைத் ததை முடித்தவன்' படப்பாடலை.மருத காசியும்,'தூக்கு தூக்கி'பாடலை உடு மலை நாராயண கவியும் 'இருவர்' பாட லை வைரமுத்துவும்,இதர பாடல்களை வாலியும் எழுதியிருந்தனர்.
'தூக்குதூக்கி' படத்திற்கு ஜி.ராமநாத னும்,'என் அண்ணன்' படப்பாடலுக்கு கே.வி.மகாதேவனும்,'ஆசைமுகம்'படத்திற்கு S.Mசுப்பைய்யா நாயுடுவும் 'தியாகம்' படத்திற்கு இளையராஜாவும்,'இருவர்' படத்திற்கு A.R.ரஹ்மானும் இசைய மைக்க,மற்ற எல்லாப்படப் பாடல்களுக் கும்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத் திருந்தார்.
இப்பாடல்கள் மூலம் தமிழ்த்திரை, நம்பிக்கையே நல்வாழ்வின் இலக்கு என்று பொருளுரைக்கும் வரிகளாலும், செவிகளும் நெஞ்சமும் நிறையச் செய்யும் இசையாலும், பல காலச்சூழல் களில், மனித வாழ்க்கை மேம்படச் செய்திருக்கின்றன என்றால்,அது மிகை யாகாது.
======= 0 ======= 0 =========
."......உண்மை என்பது என்றும் உள்ளது,தெய்வத்தின் மொழியாகும்.நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஔியாகும்......." அனுபவ, அறிவிப்பு 💯🔥
ReplyDelete👏👏
ReplyDelete