Saturday, October 9, 2021

பிறைசூடிய முழு நிலவு


 

   

   முழு நிலவை நோக்கியே வளர்பிறையின் பயணம் .1985-இல் 'சிறை' திரைப்படத்திற்கு கவிதை புனைய புறப்பட்ட அமரர் பிறைசூடனின் கவிதைப்பயணம்சிறையிலிருந்து விடுபட்ட பறவையாகி 2017 ரை,ஜெயிக்கிற குதிரை'யானது.

   திருக்குவளை ஈன்றெடுத்து தமிழாலும்குரலாலும்,திருக்குறளாலும்,இதயம் தொட்ட கலைஞர் பிறந்த,திருவாரூர் மாவட்டத்தில்நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன், கற்பனைக்களத்தில் கவிதையுடன் தமிழில் விளை யாடியதோடு நில்லாதுதொலைக்காட்சியின்'வானம்பாடி' நிகழ்ச்சியில் கவிதைகளை ஆய்வு செய்யும் திறன் கொண்டவராகவும்,நாவன்மை  மிக்க படைப்பாளியாகவும் விளங்கினார்.

  ஜெருசலேம் பல்கலைக்கழகத் தின் கௌரவ முனைவர் பட்டமும், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வ நாதன் அளித்த கவிஞானி எனும் புனைப்பெயரும் பிறைசூடனின் கற்பனை ஆழத்திற்கும் கருத்துச்செறி விற்கும் சொல்லாண்மைக்கும் கிடைத்த,அரிய அங்கீகாரங்களாகும். 

  பிறைசூடன் திரைப்படப் பாடலாசிரியர் எனும் நிலை கடந்து,'சத்ரிய தர்மம்' 'குரோதம்'ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி யிருக்கிறார் என்பதும்,'சதுரங்க வேட்டை' மற்றும் 'புகழ்'ஆகிய திரைப் படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவரது கலைத்துறையின் சாதனைகளாகும்.'விழுதுகள்''மங்கை''ரேகாIPS' 'ஆனந்தம்''உள்ளிட்ட பத்து தொலைகாட்சி தொடர்களுக்கும் துவக்கப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது அவரைப்பற்றிய இன்னுமொரு செய்தி யாகும். 

   'என் ராசாவின் மனசிலே' 'தாயகம்''நீயும் நானும்'போன்ற திரைப்படங்க ளின்  அற்புத  கவிதை வரிகளுக்காக மூன்று முறை வழங்கப்பட்ட  தமிழக அரசின் விருதுகள் இவரது படைப்பாற்றலுக்கு பெருமை சேர்த்தன. தமிழ்த்திரையுலகில் ரஜினிகாந்த்,விஜயகாந்த்,பிரபு,சத்யராஜ்,கார்த்திக் முத்துராமன்,ராஜ்கிரண்,ராமராஜன், மற்றும் பல முன்னணி கதாநாயகர் களின் திரைப்படங்களில்,நூற்றுக்கணக்கில் பாடல் புனைந்த இவரின் கற்பனையில் சொட்டிய தேன்துளிகள் சிலவற்றை,குறிப்பிட்டு பட்டிய லிடலாம்.

1}மீனம்மா மீனம்மா

கண்கள் மீனம்மா தேனம்மா

தேனம்மா நாணம் ஏனம்மா { ராஜாதி ராஜா}

2}ஆட்டமா தேரோட்டமா

ஆட்டமா தேரோட்டமா

நோட்டமா சதிராட்டமா

வெகு நாளாக உன்னைத்தான்

எண்ணித்தான் கன்னி நான்

ஆடுறேன் வலை போடுறேன்

பாடுறேன் பதில் தேடுறேன்  {கேப்டன் பிரபாகரன்}

3}காதல் கவிதைகள்படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்பிறந்திடும் ராகம்

புது மோகம் {கோபுர வாசலிலே}  

4}சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி
சோலையம்மாகோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது சென்றது
ஏன் விட்டு சென்றது சென்றது ஏன் {என் ராசாவின் மனசிலே}

5}தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்    {கேளடி கண்மணி]

6}இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே என் விரகம்
என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம்
போலவே உயிரில்லாமல்
எனது காதல் ஆனதே {இதயம்}

7}தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே {அதிசியப்பிறவி}

  எதுகை முனையிலும்,சந்தத்திலும் கருத்தாழத்திலும்,கற்பனைக் களஞ் சியமாக விளங்கினார் பிறைசூடன் என்பதற்கு,மேலே குறிப்பிட்ட சில வரிகளே போதுமானதாகும். இவையனைத்துமே கவிதைக்கடலில் கண்டெடுத்த ஒரு சில முத்துக்களே! முப்பது ஆண்டுகளுக்குமேல் தமிழ்த் திரையுகில் வளர் பிறையாக மட்டுமே ம் வந்துகிராமப்புறக்களிப்பும் நகர்ப்புற நளினமும் கலந்த கற்பனையூற்றினை,இயல்பாகக்கொண்டு பலநூறு கவிதைகள் வடித்த கவிஞர் பிறைசூடன்,அமரரானார்.

   சமூகத் தென்றலாய் வீசிய பட்டுக் கோட்டையார் போல,கவியரசு கண்ணதாசனைப்போல,விளைநிலக் கவிஞர் வாலியைப் போல,நறுக் கென நெஞ்சில் பதியும் சொல்லம்புக் கவிஞர் நா.முத்துக்குமார் போல,கவிதையில் பித்தான புலமைப்பித்தன் போல,ஒவ்வொரு முறையும்  நல்லதோர் கவிஞர்கள் நம்மை விட்டுச் செல்லும்போதெல்லாம் கவிதை கலங்குகிறது.இதோ இன்றும் அப்படித்தான்பிறைசூடன் மறைவால் கவிதை களையிழந்து நிற்கிறது. 

 ப.சந்திரசேகரன்

 

No comments:

Post a Comment