Wednesday, February 23, 2022

Maternally Consummate.{Homage to K.P.A.C Lalitha}

   


  Malayalam film and Television  industries can be proud of their two mighty mothers on their big and small screens.They are Kaviyoor Ponnamma and K.P.A.C.Lalitha.Of the two,the former is a couple of years older than the latter.While Ponnamma is the incarnation of absolute maternal love and softness,Lalitha has quite often been an uncompromising and chiding mother,with a simultaneous course of undemanding, maternal love.

  Born as Maheshwari Amma,Lalitha became her stage name,along with KPAC,'a theatre collective in Kayamkulam'.Today,this exemplary mother actor is no more,causing an extreme anguish for one and all,who love cinema in general and Malayalam movies in particular.

  Lalitha has adorned mother and grand mother roles in a number of films,besides donning the roles of an academic head and Mother supreme in a few movies.It was a great pleasure to watch her teamed up with Innocent,in films like 'Paappi Appacha'and 'Life is beautiful',to mention significantly. Carrying on her periodical bickerings with Innocent in those films,she became the most natural wife of a loving husband and created a neighbourhood-woman feeling.

  As the lovely mother of Mohanlal in Spadikam and Madampi{of the many films she had acted with the all rounder Mohanlal} Mammootty in The King & the King and the Commissioner,and Suresh Gopi in Nariman,she became emotionally close to the audience with her grumbling tone and graceful portrayal of mother roles.

  Lalitha had appeared in compact roles in Tamil films also.Kadhalukku Mariyaadhai, Alai Paayudhe,Ullam Ketkume,Kireedam,Kaatru Veliyidai, Paramasivam,Suyetchai MLA and Vijay Sethupadhi's upcoming film Maamanithan are some of her noteworthy Tamil entries.She had been the most endearing mother in Kaadhalukku Mariyaadhai,[a remake of Malayalam Aniyathipravu}&Alai Payuthe and an affectionate grandmother of Ajith,in Kireedam.

  If we think of the number of films that Lalitha has acted,it is enormous.If we talk about the quality of her acting,it is both amazing and appealing.She could excel both in shedding tears and passing on comedy flair in the line of Sowcar Janaki of Tamil cinema. She had always been a woman next door, with her concern for members of her family and contempt for the way some members of the family behaved.The misunderstanding that she developed for her son in Madampi led her even to disown him.But how deeply she regretted her mistake when she came to know the truth and how beautifully she returned her love for her son,with a doubled depth of maternal warmth.

  Be it Mohanlal,or Mammootty or Dileep or Prithviraj,she had always been a remarkable mother,creating a creditable sense of maternal belonging for her sons.So long Malayalam cinema outlives its time,this adorable actress would outlive Malayalam cinema,as a maternally consummate actor.We cannot simply say RIP and take rest. KPAC Laitha needs much more than wishing her soul to rest in peace.She needs to be talked about and remembered for ever,for her grand contribution to Malayalam cinema, with her commendably justifiable degree of merit,in performing all the roles that came on her way. Wherever a grumbling voice is heard with a wield of love,one can see the profile of CPAC Lalitha,knocking at the invisible doors of the audience mind.

                                    ============0=============

Wednesday, February 16, 2022

வெள்ளித்திரையில்,வெட்டும் வசனங்கள்

    திரைப்படங்களின் திரளான வரவேற்புக்கும் வெற்றிக்கும்,காரணங்கள் பலவாம். நல்ல கதையையும்,காணவருவோர் மனநிலையையும், ஆழமாகப் புரிந்த இயக்குன ரின் ஆற்றல்,அந்த ஆற்றலின் பின்னணியில் உருவாகும் திரைப்பட  தயாரிப்பு , கதாபாத்திரங்களின் கருவறிந்து அதில் பங்கேற்கும் நடிகர்களின் தனித்திறன், திரைப்பட தொழில் வல்லுனர் களின் வலுவான ஒத்துழைப்பு, இவற்றையெல்லாம் ஒருநிலைப்படுத்தும் காட்சியமைப்புகளும் வசனங்களும் என்று,ஒரு திரைப்பட உருவாக்கலின் பல்வேறு அங்கங்களை வகைப்படுத்தலாம்.
   கடந்த நூற்றாண்டில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் வசனமே பெரும் பங்கு வகித்தது.ஆனால், இந்த நூற்றாண்டில் துவக்கம் முதல்,பல திரைப்படங் களில் வசனங்களைக் குறைத்து,செவிகளை ஒதுக்கிவைத்து, விழிகளை பிரதான மாக்கி காட்சியமைப்புகள் வெற்றி பெறுவதைப் பார்க்கிறோம். இருப்பினும்,  ன்றும் திரைப்பட வசனங்கள்,அளவோடு  திரைப்பட காட்சிகளை,துல்லியமாக நிர்ணயம் செய்கின்றன என்றுதான் கூற வேண்டும்.
     இந்த வலைப்பதிவில் ஏற்கனவே கதாநாயகர்கள் மற்றும் இதர கதா பாத்திரங் களின் மறக்கமுடியா சில ஒரு வரி வசனங்கள் பற்றியும்,வசனங்களின் அதிர்வு கள் பற்றியும்  பாடல்களில் இடம்பெறும் வசனங்கள் பற்றியும் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன. கருத்துச்செறிவும் சொல்லாண்மையும் உள்ளடக்கிய வசனங்கள்,என்றுமே திரைப்பட பழத்தோப்பில்,சுவைமிகு பழுத்த பழங்களாக சுவைக்கப்பட்டு, நினைவுகளில் அவ்வப்போது  அந்த சுவை பவனிவருவதுண்டு.
  இப்படிப்பட்ட வசனங்கள்  வெறும் வசனங்களாக நில்லாது, காட்சித் தொடரில் ஒருவர் பேசும் வசனத்தை மற்றொருவர் வெட்டிப்பேசுவதாக அமைந்து, சிரிப்பலை களைத் தோற்றுவித்து,சிந்திக்ச்செய்வதும்  ண்டு. அதுபோன்ற  சில வசனங் களை நினைவு கூறுவதே இப்பதிவின் நோக்கமாகும்!
    'பராசக்தி' திரைப்படத்தில் வீதியில் உறங்கும் சிவாஜிகணேசனை உலுக்கி எழுப்பும்  நகரக் காவலர் "என்னடா முழிக்கிற? "எனக்கேட்க, அதற்கு சிவாஜி  கணேசன்"தூங்கறவன எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்"என்பதே வெண்திரையில் நான் கேட்ட முதல் வெட்டும் வசனமாகும்.இது கலைஞரின் எழுத்துக்கூர்மைக்கு எடுத்துக்காட்டானது. 
     நம் நாடு'திரைப்படத்தில்}எஸ் வி ரெங்கராவ் "நீ பாம்பு புத்துக்குள்ள கைய விடற ;அது ஒன்ன கடிக்காம விடாது".என்று எம்.ஜி.ஆரை அச்சுறுத்த அதற்கு பதிலடியாக, எம் ஜி ஆர்"நான் புத்துக்குள்ள கைய விடறதே,கடிக்கிற பாம்ப பிடிக்கறதுக்குத் தான்"என்று சட்டெனச் சொல்வார்.  
    'கல்யாண பரிசு' திரைப்படத்தில்}மனைவிக்கு பயந்த கே.ஏ.தங்கவேலு தனது வழக்கமான அண்டப்புபுளுகு பாணியில், "இப்பிடித்தான் ஒரு எடத்துல நான் பேசும்போது,எழுத்தாளர்கள்தான் இந்த நாட்டின் முதுகெலும்புன்னு சொன்னபோ, தட்டினாம்பாரு"என்று ஒரு உடான்ஸை எடுத்துவிட,அதற்கு கொஞ்சமும் சளைக்காத அவரது மனைவி  எம்.சரோஜா 'யார உங்களையா?'என்று வசனத்தால் குட்ட ,சற்றும்  திணறாத தங்கவேலு, "யார்ரி  இவ. சுத்த பயித்தியக்காரியா இருக்க.நீ அங்க வந்திருந்த,என்ன பாத்திருக்க முடியாது."என்றுரைக்க ,உடனே எம் சரோஜா  'ஏன்,ஓரமா நின்னீங்களா?'என வார்த்தையால் வெட்டிவிடுவார் 
    'சொர்க்கம்' திரைப்படத்தில்:- சிவாஜி கணேசன்,நண்பன் நாகேஷிடம் "என் மனசில ஒரு பெரிய ஆசையாயிருக்கு;இந்த ஊர்ல எல்லாரும் என்னப்பத்தியே பேசனும்"என்று தன ஆதங்கத்தை வெளிப்படுத்த,உடனே நாகேஷ்"நாலுபேருகிட்ட கடன்வாங்குடா; இந்த ஊரே உன்னப்பத்தி பேசும்"என கிண்டலடிப்பார்.  அதே'சொர்க்கம் ' திரைப்படத்தில் சிவாஜி  கணேசன் கே.ஆர்.விஜயாவிடம் "பீடி குடிச்சா லோ கிளாஸ்; சிகரெட் குடிச்சா ஹை கிளாஸ்" என்று சொல்ல, உடனே  கே.ஆர்.விஜயா ''கெட்டுப் போறதிலேயே கிளாஸ் வேறயா ?"என்று சொல்லால் சாட்டையடிப்பார். தொடர்ந்து  வேறொரு காட்சியில் சிவாஜி,'பங்களாவில் மகனுக்கு என்ன குறைச்சல்'என்று ஆத்திரத்தில் அளப்பறிக்க, சற்றும் பின்வாங்காமல் ''பங்களாத்தாங்க குறைச்சல்' என்று  ஓங்கி அறைவதுபோல் உண்மையை உரைப்பார் கே.ஆர்.விஜயா.
  'அன்பே ஆருயிரே'{1975}திரைப்படத்தில் "நான் அழகா பொறந்ததுதான் தப்பா போச்சு" என்று மஞ்சுளா புலம்ப,உடனே சிவாஜி கணேசன் ''இல்லாத ஒண்ண நெனச்சு நீ ஏன் வருத்தப்படுற''என்று கேலியுடன் மஞ்சுளாவை மடக்குவார். அதே திரைப்படத்தில் சிவாஜியும் மஞ்சுளாவும் நாகேஷும் டாக்சியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடந்து செல்ல ,உடனே "அய்யோ சென்ட்ரல் போச்சு சென்ட்ரல் போச்சு''என்று அலறுவார் மஞ்சுளா. அதற்கு உடனே சிவாஜி, "சென்ட்ரல் தானே போச்சு என்னமோ உங்க அப்பன் சொத்து போனமாதிரி"அலற என்று கிண்டலாக மஞ்சுளாவை வெறுப்பேற்றுவார்.   
     சந்தித்த வேளை' திரைப்படத்தில்,ஒரு நேர்காணல் அதிகாரி விவேக்கிடம்,  "ஒனக்கு டைப் ரைட்டிங் தெரியுமா"? என்று காரியமாகக் கேட்க,உடனே விவேக் தனக்கே உரிய விவேகக் குறும்புடன், "என் ரைட்டிங் ஒரு டைப்பா இருக்கும்.ஆனா எனக்கு டைப் ரைட்டிங் தெரியாது'' என்பார்.
     'தூள்' திரைப்படத்தில் விக்ரம்,ரீமா சென்னிடம் சவடாலாக, அப்போ சுமார் எனக்கு எட்டு வயசு இருக்கும்; நான் மூணாவது படிச்சிக்கிட்டி ருந்தேன்'.என்று தனது பழைய கதையை ரீல் விட ,உடனே விவேக் குறுக்கிட்டு "டேய்,நீ இப்பவரைக்கும் அதுதான்டா படிச்சிருக்க"என்று தூரத்தில் நின்று விக்ரமை தோலுரிப்பார்.   
    'பொல்லாதவன்' திரைப்படத்தில் தனுஷின் சகோதரி,தனுஷிடம்:-"இந்த   மாதிரி பசங்களோடெல்லாம் சவகாசம் வச்சுக்காதேன்னு எத்தனை தரம் சொல்றது" .என ஏளனமாய் கடிந்துகொள்ள,உடனே நமது ஒன் லைனர் சந்தானம் "போடி, உங்க அண்ணனோட பழக பில் கேட்ஸ் அங்க வெய்ட் பண்ணிக்கிட்டுருக்கார்'' என்று  சீண்டுவார். 
  'சகலகலாவல்லவன்' {2005}திரைப்படத்தில் ‘’அவ மட்டும் எனக்கு கெடக்க லைன்னா அந்த நெனப்புலேயே நான் செத்துடுவேன்''என்று சூரி சொல்ல, உடனே ஜெயம் ரவி"உன்னோட இந்த நெனப்ப பத்தி கேட்டாலே, அவ செத்து போயிடு வாளேடா"என்று குறும்புடன் கலாய்ப்பார்.
  சந்தானத்தின் 'கண்ணா லட்டு திங்க ஆசையா.திரைப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் "நான் உங்கள் பக்கத்துவீட்ல குடியிருக்கேன்"எனக்கூற உடனே கோவை சரளா "அப்ப நீங்க ஒங்க வீட்ல குடியில்லையா"என்று அசட்டுத்தனமாய் வெட்டுவார்.   
   இதேபோன்று சமீபத்தில் வெளிவந்த 'ராஜவம்சம்' திரைப்படத்தில் சசிகுமார் சதீஷிடம் 'எங்க பேமிலிய பத்தி உனக்கு தெரியாதுடா' எனச் சொல்ல 'என்ன பெரிய அம்பானி பேமிலியா'என்பார்  சதிஷ்.உடனே சசிகுமார் இல்லடா 'அன்பான பேமிலி' என்று சிலேடையாய் பதில் கொடுப்பார் 
   'கொம்பன்' திரைப்படத்தில் கோவை சரளா தன் மகன் கார்த்திக்கிடம்,"நீ இப்பிடியே பேசிக்கிட்டிரு;ஒருநாளைக்கு நீ  திங்கிற சோத்துல வெஷத்தை வைக்கப் போறேன்''என்று எரிந்து விழ,அதற்கு கார்த்திக் ''ஆமா,ஆமா! நீ ஏற்கனவே வெக்கற சோறே,வெஷமாத்தான் இருக்கு".என்று கலாய்ப்பார்.  
  'கிரி' திரைப்படத்தில் பெண்பார்க்க வரும் பாண்டியராஜன். 'மாப்பிள் ளைக்கு என்ன போடுவீங்க'என்று வெகுளித்தனமாய்க் கேட்க,'சொன்னபடி செய்ய லைன்னா மாப்பிள்ளையை போடுவோம்'என்று சர்வ சாதாரண மாக கூறுவார், பெண்வீட்டாரில் ஒருவர். 
   'பேரரசு' திரைப்படத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் பிரகாஷ் ராஜிடம்"ஒன்ன ஒழிச்சு கட்டாம விடமாட்டேன்டா"என்று குதித்து குதித்து சூளுரைக்க,அதற்கு வெறியுடன் பிரகாஷ்ராஜ்,"மொதல்ல உன் வேட்டியை ஒழுங்கா கட்டபாருடா"   என்பார். 
  'தோழா'திரைப்படத்தில் கார்த்திக் முகத்தினை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு  பிரகாஷ் ராஜுடன் காரில் இறங்கி அவரிடம்,'வீடு ரொம்ப நல்லா இருக்கு சார்;உங்குளுதா சார்?'' என்று கேட்க உடனே பிரகாஷ் ராஜ், 'இல்ல பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட இருந்து திருடுனது' என்பார். 
  'வெற்றிவேல் சக்திவேல்'திரைப்படத்தின் இறுதிக்காட்சியில்  குஷ்பு சத்யராஜிடம் "சீக்கிரம் நம்ம சக்திக்கும் மஞ்சுவுக்கும் கல்யாணத்துக்கு அய்யரை வச்சு நாள் குறிக்கனுங்க"என்று சொல்ல"உடனே அதற்கு சத்யராஜ்"ஏன் ஒரு முதலியாரையோ செட்டியாரையோ வச்சு நாள் குறிச்சா ஆகாதோ"என்று அவருக்கே உரிய குறும்புடன் கூறுவார்.   
   'கண்டேன் காதலை' திரைப்படத்தில்  தமன்னாவின் தாயார்"டேய் வெள்ளிக் கிழமை அதுவுமா பொண்ணு வீட்டைவிட்டு ஓடிபோய்ட் டாடா'' என்று சந்தானத்திடம் மனம் நொந்து கூற,அதற்கு வசனத்தால் எதிராளியை வெட்டியே பழக்கப்பட்ட சந்தானம் ''அப்ப சனிக்கிழம ஓடிப்போனா பரவாயில்லையா?''என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவார். இங்கே பதிவிட்ட வசனங்கள் எல்லாம்,பெரும் வெள்ளத்தின் சில துளிகளே 
    மேலே குறிப்பிட்டது போன்று பல திரைப்படங்களில்,உன்னிப்பாக கவனிக்காமல் விட்டுவிட்டால்,விட்டதற்காக வருத்தப்படும் வெட்டும் வசனங்கள் நிறைய உண்டு. நாவினால் சுடும் வடுக்களோ, சொல்லால் அடிக்கும் சுகமான விளையாட்டோ, அறிவால் எழும் வசனங்கள் பல, அரிவாளென வெட்டும் கூர்மை வாய்ந்தவை என்பதை,திரைப்பட வசனகர்த்தாக்களின் திகைப்பூட்டும் சாதனையாகக் கருதலாம். 
     
ப.சந்திரசேகரன் . 

Saturday, February 12, 2022

Mahan,a mighty milestone in narration

    There is a famous saying that every saint has a sinning past.This has been proved in the spiritual biographies of Pattinathar and Arunagirinathar of Tamil Nadu who attained spiritual exaltation after an obsession with wealth and debauchery, respectively. The recent film Mahan which has seen an Amazon Prime Video release, catches the imagination of the audience by the punch and thrust of its title as well as by its remarkable and unique mode of narration assiduously adopted by Karthik Subbaraj and compactly edited by Vivek Harshan.

  Mahan cannot be called a mere crime thriller.No.certainly not.From the start till the contrived climax,there is an underlying heaviness composed of suppressed emotions. The poignant element in narration is the measured underplay in acting,commendably performed by every actor starting from Vikram as Gandhi Mahan, Bobby Simha as  Sathyavan Soosaiyappan, Dhruv Vikram as the son of Vikram bearing the name Dadabhai Naoroji,Sanath as Rocky,Deepak Paramesh as Anthony,Vettai Muthukumar as Gnanam and Simran as Nachi and the wife of Vikram.No actor deviates from their character and no Tamil film in the recent past has so naturally fixed all the actors to their respective roles.

  Mahan could actually be called the starting point for Dhruv Vikram towards creating imprints on his pathways to real acting,because his earlier films Aditya Varma and Varma did not rightly bring out his performance potential.For Vikram it is yet another best performance,as an individual craving for a life of the 95%of the people  rather than remaining as a member of the 5% purist creed.But for Dhruv Vikram, here is the beginning under the inspiration of his performance-oriented father,both in life and on the screen.

 The film vibrantly succeeds in exposing the pretentious prohibition lobby and subtly throws light on the misplaced stories about Mahatma Gandhi,by trying to extricate the portrait of the Mahatma from political controversies.Instead it brings to book the extremist ideologies between different schools of thought.Mahan neatly exhibits the dividing line between criminal extremism and ideological extremism.The crux of the issue is that even the Mahatma adhered only to moderate ways of thought and never indulged in ideological extremism.

  The final telling point is the blow of Nemesis against each one's thoughts and deeds. But in this process of crime and punishment,the less erring are unduly punished as in the case of Soosaiyappan {Bobby Simha} and his son Rocky{Sananth}.In fact it is Gandhi Mahan who pulled Soosai and his son to a more sinning routine, though his initial spark of intoxication was drawn from them.

 Ultimately the more grievous sinner, Gandhi Mahan is allowed to live,after redeeming himself,may be because his redemption will keep on hurting his conscience,with brutal memories of his shady past.Incidentally,Mahan also succeeds in avenging the undue death of Soosaippan and his son by casting another criminal web.Santhosh Narayanan deserves a special pat for his interlude music during the stunt scene between Vikram and his son and the convincing background score through out the film.On the whole Mahan is a hard hitting heavy film,creating a mighty milestone in narration.  

                                  ============0=============

  

Sunday, February 6, 2022

Homage to the Immortal Queen of Music

                                           


  John Keats in his poem 'Ode to a Nightingale'admires the nightingale for'singing about summer,in full- throated ease'.Hindi cinema can be eternally proud of its immortal singer,whose 'indescribable gusto in voice' and 'fascinating felicity of expression' surpassed the barriers of language and won over the hearts of one and all'in full throated ease'.

  So soothing and sharp,so clear and charismatic,and so mellifluous and mind blowing Lata Mangeshkar's voice was,that her songs travelled through the air,ruling towns and villages alike.mesmerising human ears and bonding emotions,through the immacculate power of music.

  It looked as though Lata Mangeshkar was born to sing and secure human emotions by the charm of music as the beaming bliss of life.From keerthanas to bhajans,from solo songs to duets,her scintillating and invincible voice mould,made leaps and bounds and created a legendary impact.As far as music is concerned,language is immaterial.In the midst of the huge galaxy of her film songs,each one can pick up a song  as a star from the constellation.

  One's choice may be her film song from any language film,or her heart throbbing version of Vande Mataram song transmitting the essence of patriotism,or her Tamil film songs like 'Valaiyosai'{sung with SPB for the Kamalahasan film Sathya} or Aaararo Aaaraaro{ Anand}and Engirundho Azhaikkum {En Jeevan Paaduthu} will be the favourite ones for those,loving to listen to her unique and inimitable rendition of songs.

  As far as her Hindi film songs are concerned,whatever she sang,will survive the test of time and linger as a lasting piece of music.Musical variety,voice sweetness and grasp of grandeur were her unquestionable assets,taking the quality of Hindustani music to its enviable heights and enchanting everyone,with an insatiable quest for her songs.

  Lata Mangeshkar might have left us with a deep pain hitting us,over the loss of her persona. But it is her very same persona that is often going to knock at the doors of our memory house,with her songs visiting us,as and when we want her voice to peep into our thoughts.Blessed she was,to keep a huge audience of music lovers enthralled.Blessed her soul is to pass perpetually,as down pours of music,flowing through our nostalgic veins.In fond memories of this immortal queen of music,

P.Chandrasekaran.


                                      ==========0===========

         

Friday, February 4, 2022

பட்டும்,பாட்டும்.

 

   அகிலம் விரிந்து,அகன்று விசாலமாகி,மண்ணின் மகத்துவத்தை பறைசாற்று கிறது.மண்ணின் பெருமை இனத்தால்,மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மனித வாழ்க்கைக்கு மணம் சேர்க்கிறது. கலாச்சாரம்,மனித சமூகத்தின் மண்சார்ந்த சிந்தனையை, வாழ்க்கை முறைகளை வெளிபபடுத்துகிறது. 

  கலாச்சாரத்தின் ஒரு முகப்பே,மண்சார்ந்த மனிதரின் ஆடை பழக்க வழக்கங்கள். ஆடை கலாச்சாரத்தின் முதன்மையாக விளங்குவோர் பெரும்பாலும் பெண்களே!இந்த கோணத்தில் பார்க்கையில், வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா வில்,புடவைக் கலாச்சாரம், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் விழாக்காலங் களிளும், விண்ணதிரச் செய்யும் அற்புதமே!.

   மனிதன் ஆடையின்றி பிறக்கிறானே ஒழிய ஆசையின்றி பிறப்பதில்லை. இக்கருதினைத்தான் தமிழ் மூதாட்டி  அவ்வை தனது 

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்!’

  எனும் கருத்தாழம் நிறைந்த சொற்களால் எழுதிவைத்தார்.இதன் பொருளாக நாம் அறிவது. 

  "நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க,எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை கொள்வது ஏன்?"என்பதாகும்"மண்கலம் போல்  உடையப் போகும்  வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும்  சஞ்சலத்தையே தரும்" என்பதே அவ்வை,தனது ஆழ்ந்த அனுபவத்தின்  அடிப்படையில் சிந்தனையால், சொற்களால்,தமிழ் மொழிக்கு சூட்டிய ஆடையாகும். தத்துவங்கள் ஆயிரம் இருப்பினும்,அவை எவையுமே மனித இனத்தின் நீண்டகால பழக்க வழக்கங்களை மாற்றுவதாக இல்லை. குறிப்பாக பெண்கள் புடவை அணிகையில் ,அதுவும் பட்டுப்புடவை  அணிகையில்,மிகுந்த  ஆனந்த பரவசத்திற்கு உள்ளாகின்றனர்.

  பட்டு எனும் சொல்லையும் பட்டுத் துணியின் பாரம்பரிய சிறப்பினையும் ஆசை களாய்,ஆடைகளாய்,ஆனந்த வேட்கையாய் பாடல்களாக்கி,பெரும்பாலும் ஆண்களின் குரலிலும் சிலநேரம் பெண்களின் குரலிலும் பிரசவித்து,தமிழ்த்  திரைப்படங்கள் ஆலாபனை செய்துள்ளன.காதலும் கவித்துவமும் ஒருசேர பெண்மையை வருணிப்பதற்கு,பட்டு எனும் சொல்லும் பட்டுத் துணியின் பாங்கும் திரைப்படப் பாடல்களில் ஒய்யார மாக பவனிவந்துள்ளன.

  இதுபோன்ற பாடல்களில் ஒரு சில முக்கியமான வரிகளை எம்.ஜி.ஆருக் காக டி.எம் சௌந்தராஜன் பாடினார் என்பது தமிழ்த்திரைப்பட வரலாற்றின் தனிச்சிறப்பாகும். இந்த வகையில்,1961- இல் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த,'தாய் சொல்லை தட்டாதே'திரைப்படத்தில் இடம்பெற்ற, 

பட்டுச்சேலை காத்தாட

பருவமேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்

காதல் வலையில் அடைத்தவளே 

 எனும் பாடலை குறிப்பிடலாம். இப்பாடலுக்கு கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார். 

   இதனைத் தொடர்ந்து 1963-இல் வெளிவந்த'பரிசு'திரைப்படத்தில் பட்டின் மேன்மையுடனும் பொலிவுடனும்,பெண்ணின் தன்மையை ஒப்பிட்டு,எம். ஜி.ஆர் வாயசைக்க அவருக்காக  கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்  பாடி நம்மில் பலரும் கேட்டு ரசித்த அழகான பாடலே, 

பட்டு வண்ண   

சிட்டு படகு துறை விட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

    அதற்குப்பின்னர் 1966-இல் ஆர்.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் திரை அரங்குகளில் கூட்டம் திரட்டிய'பறக்கும் பாவை'திரைப்படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய, 

பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே

சொல்லம்மா சொல்லம்மா 

  எனும் கம்பீரமான பாடல்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நம் ஜெஞ்சங்களை கொள்ளை கொண்டது.

  மேற்கண்ட மூன்று எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கிடையே,ஏ.வி.எம் தயாரிப்பில் வெற்றிநடைபோட்ட வீராதிருமகன்{1962} திரைப்படத்தில்  பி.சுசீலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய, 

நீலப் பட்டாடை கட்டி 

நிலவென்னும் பொட்டும் வைத்து 

பால் போலச் சிரிக்கும் பெண்ணே 

பருவப் பெண்ணே பெண்ணே 

பந்தாடும் காதல் பெண்ணே 

கன்னிப் பெண்ணேஎனும் 

   எனும்பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் இனிமையாக செவிகளுக்கு விருந்தளித்தது.உருவாக்கமும் உவமையும் கலந்து, இலக்கிய நயத்துடன் அமைந்த இப்பாடலையும்,இப்பதிவில் மேலே கண்ட மூன்று எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களையும் எழுதியவர்,கவியரசு கண்ணதாசன் என்பது,இந்த நான்கு பாடல்களும் நான் மாடாக்கூடல் போன்ற சந்திப்புத் தாக்கத்தினை,சந்தோஷ விளைச்சலாக்கியது. 

  பட்டு னும் சொல்லை மெல்லிய நூலிதழால் பெண்ணின் மென்மை யுடன் இணைத்து,பெரிதுவக்கும் ஆண்மையின் அழகிய மனநிலையை பிரதிபலிக்கும் இரண்டு அருமையான பாடல்களை,மலேஷியா வாசு தேவன் குரலில் கேட்டிருக்கிறோம்.முதலாவதாக,

 எஸ்.ஏ ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் திரைக்கு வந்த கன்னிப்பருவத்திலே {1979}திரைப்படத்தில்  …

பட்டு வண்ணரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம் 

பாசம் என்னும் நீர்இறைச்சேன் 

ஆசையில நான்வளர்த்தேன் 

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா 

பட்டாலும் குத்தமில்ல 

பாவம் அந்த பூவுக்கிள்ள

  என்ற அரவணைப்புச் சொற்களால் பெண்மைக்கு ஆறுதல் வழங்கும்  புலமைப் பித்தனின் பாடலை,சங்கர் கணேஷ் இசையில்,பலமுறை தாலாட்டுப் பாடலாய்க் கேட்டு கண்ணயர்ந்தோம்.  

  அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசையில் பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளான

பட்டு வண்ண சேலைக்காரி

எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..

ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை

அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

  எனும் நம் இதயங்களில்  தொட்டில் கட்டி இளைப்பாறிய பாடலை ரஜினிகாந்தின் இயல்பான நடிப்பில் உருவான'எங்கேயோ கேட்டகுரல்' {1982}திரைப்படத்தில் கேட்டு மெய்மறந்தோம். 

  பட்டுத்துணி என்றாலே தமிழகத்தில் தலைக்குமேல் கிரீடமென தரம் கூட்டுவது காஞ்சிப் பட்டு.எனவே பட்டினைப்பற்றி பாட்டெழுத்துகையில், கவிஞர்களின் கற்பனையை களவாடுவது காஞ்சி எனும் சொல்லாகும். இந்த வகையில் 1978-இல்  கே.ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'வயசுப் பொண்ணு'திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாசும் பாடகர் சாவித்திரியும் இனிமையாய்ப் பாடிய 

காஞ்சி பட்டுடுத்தி

கஸ்தூரி பொட்டும் வைத்து

தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்

அந்த திருமகளும்

உன் அழகைப் பெறவேண்டும்.

 எனும் பரவசப் பாடல் நம் நினைவலைகளை தட்டி எழுப்பும்.கவிஞர் முத்துலிங்கத் தின் நளினமான வரிகளை மெல்லிசை மன்னரின் இசை ஆட் கொண்டது.

  பட்டாடையின் பண்பாட்டு மகத்துவம் கடந்த நூற்றாண்டுக்குப்பிறகு அவ்வளவாக திரையிசைப்பாடல்களில் இடம்பெறவில்லை. இருப்பினும், கடந்த நூற்றாண்டின் /ஆயிரம் ஆண்டின் முடிவில் அஜித்குமார் நடிப்பில் 'ரெட்டை ஜடை வயசு'{1997}எனும் வித்தியாசத் தலைப்புடன் வெண்திரை யை அலங்கரித்த திரைப்படத்தில், ஹரிஹரனின் இலவம்பஞ்சுக் குரலில்,

காஞ்சிப்பட்டு சேலை கட்டி

கால் கொலுசில் தாளம் தட்டும்

கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா.

  எனும் பாடல்,தேனிசைத் தென்றல் தேவாவின் இசையோட்டத்தில்,கவிஞர் வாசனின் வரிகளுக்கு,தங்கமுலாம் பூசி,ஹரிஹரன் குரலால் தனிச் சுவை கூட்டியது. 

   காலங்கள் மாறிவருகையில்,ஆடைக்கலாச்சாரமும் அபரிமிதமான மாற்றங்களை தரணியெங்கும் காச்செய்கிறது.பன்னாட்டு வணிகத்தின் படையெடுப்பும், தகவல் தொழில் நுட்பத்தின் தாக்கத்தில் மயங்கிக் கிடக்கும் சமூக ஊடக நிலைப்  பாடுகளும்,தமிழக மகளிரின் புடவை பாரம்பரியத்தை கணிசமாக புறந்தள்ளியிருக் கிறது என்ற யதார்த்த நிலையினை,காலத்துடன் பயணிக்கும் தமிழ்த்திரை உணர்ந்ததாலோ என்னவோ,பட்டுச் சேலை பற்றிய பாடல்களை தமிழ்த்திரை தரிசிக்க தயங்குகிறது. 

ப.சந்திரசேகரன் . 

                                        =============0=============