“The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven.”
என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன், Paradise Lost {Book I} என் னும் இதிகாசத்தில்.இதையே மிகவும் சுருக் கமாக 'வசந்த மாளிகை' திரைப்படத்தில் P.சுசிலா பாடிய,
"கலைமகள் கைப்பொருளே
உன்னை கவனிக்க ஆளில்லையோ"
எனும் பாடலுக்கிடையே,மனதில் ஆழப்பதியும்படி கண்ணதாசன் எழுதிய,
"சொர்க்கமும் நரகமும் நம்வசமே
நான் சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே"
எனும் வரிகள், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.வேடிக்கையாக, அதே படத்தில் கண்ணதாசன் பரவசமாய்ப் புனைந்து டி.எம்.எஸ் கம்பீரமாய் பாடிய, "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்" பாடலுக்கிடையே தோன்றும்,
"சொர்க்கம் இருப்பது உண்மையென்றால்
அது பக்கத்தில் நிற்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே"
எனும் வரிகள், நாம் நினைத்தால் நம் அருகே சொர்க்கம் நிற்கும் என்று உரக்க வெளிப்படுத்தின.
இதே போன்றொரு கருத்தினை வசந்த மாளிகைக்கு முன்னால் வெளி வந்த 'எங்க மாமா' திரைப்படத்தில் டி.எம்.எஸ் எல்.ஆர் ஈஸ்வரி யுடன் இணைந்து பாடிய,
"சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்"
எனும் கண்ணதாசனின் பாடல் வரிகள் புலப்படுத்தின.'வசந்த மாளிகை' திரைப்படத்திற்கு கே.வி. மகாதேவனும் எங்க மாமாவுக்கு எம்.எஸ் விஸ்வநாத னும் இசையமைத்திருந்தனர்.
இருமணம் கலந்த திருமணவாழ்வில் கணவனும் மனைவியும் ஒன்றெனக் கலக்கையில் அங்கே சொர்க்கம் தானாக உருவாகி ஔிபடைக்கும் என்பதை மனிதன் மாறவில்லை திரைப்படத்தில் கண்டசாலாவின் இசயைில் ஏ.எல்.ராக வனும் சுசிலாவின் இனிய குரல்களில் உருவான தஞ்சை ராமைய்யாதாஸ் புனைந்த,
"தீர்த்த யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச்சோலையும் ஏனோ"
எனும் பாடலை முடிக்கும்
"உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ"
எனும் எதார்த்த வரிகள் மானுடம் நினைத்தால் பூமியில் சொர்க்கம் பூத்திடச்செய்யலாம் என்று பூரிப்புடன் பறைசாற்றியது.
'சொர்க்கம்'எனும்.சொல்லை உள்ளடக் கிய சொர்க்கவாசல்,சொர்க்கம், நான் கண்ட சொர்க்கம், மீண்ட சொர்க்கம், சொர்க்கம் நரகம்,சொர்க்கத்தின் திறப்பு விழா, போன்ற திரைப்பட தலைப்புகள் சொர்க்கத்தை,வெண் திரையின் மூலம் மனதிற்குள் மைய்யப் படுத்தின.
சொர்க்கத்தின் வாசற்படி எப்படி இருக்கும் என்பதை'உன்னைச் சொல்லி குற்றமில்லை'திரைப்படத்தில் இளைய ராஜாவின் இன்னிசையில் உருவாகி K.J.ஏசுதாஸ் கே.எஸ்.சித்ராவின் அதிர்வுக் குரல்களில் நாம் கேட்டு மகிழ்ந்த,
"சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே"
எனும் பொருத்தமானச் சொற்கள் சுகந்தமாய் சுட்டிக்காட்டின. சொர்க் கத்தின் வாயிலில் நின்றுகொண்டு,
" இன்று சொர்க்கத்தின்திறப்பு விழா
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இனிமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா"
என்ற கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளை கே.வி.மகாதேவன் இசை யில் K.J. ஏசுதாசும் வாணி ஜெயராமும் பாட பல்லாண்டு வாழ்க என்று சொர்க்கம் நம்மை வாழ்த்துவதாகவே பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். என்னதான்
"சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே"
என்று மதுவின் போதையில் மயங்கி இளைஞர்கள் சிலர் பாடினாலும் {சட்டம் என் கையில் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய கண்ணதாசன் வரிகள்}உண்மையான சொர்க்கம் என்பது ஒருவர் பிறந்த மண்ணிலும் வாழும் வாழ்வியல் கோட்பாட்டிலும் தான் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இதைத்தான் இளையாராஜா இசை யமைத்து தானே எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடிய, அவரது இளைய சகோதரர் கங்கை அமரன் புனைந்த,
"சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரரைப் போலவருமா
என் நாடு சென்றாலும்
அது நம்நாட்டுக் கீடாகுமா"
என்ற பொன்னான வரிகள் சொர்க்கத் தையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுவது போல உணரச்செய்தன.
மொத்தத்தில் சலனங்கள் இல்லா ஒவ்வொரு மனதும் தன்னுள்ளே சொர்க் கத்தை ப்படைத்து சுகம்பல காணுகி றது.வாழும்வரை ஒவ்வொரு விடியலும் சொர்க்கத்தின் பார்வையை நெஞ்சத்தில் விதைக்கிறது.நம்பிக்கை,சொர்க்க விதைகளை விருட்சமாக்கி வசந்த மலர் களால் மனதில் மணம் பரப்புகிறது.
=========== 0===========
Amazing Sir..!
ReplyDeleteThe content as well as the reaserch. Please continue more such write ups connecting life and cinema.
Proud of being your student..!
🤗
."........உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால் வேறே சொர்க்கமும் ஏனோ......" அனுபவ அறிவிப்பு
ReplyDelete"